Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

பொது அறிவு
ந.சி. கந்தையா



 


1. பொது அறிவு
2.  தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4.  நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. பொது அறிவு

 


பொது அறிவு

 

ந.சி. கந்தையா

 

 

நூற்குறிப்பு
  நூற்பெயர் : பொது அறிவு
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

பொது அறிவு


முன்னுரை
இப் புத்தகத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட தலைப்புகளில் பொது அறிவுக்கு வேண்டிய ஆயிரத்துக்கு மேற்பட்ட செய்திகள் தரப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இடப்பெயர்கள், மக்கட்பெயர்கள் பலரால் பலவாறு உச்சரிக்கப்படுகின்றன. அவற்றைத் தமிழில் என்ன உச்சரிப்பு முறையாக எழுத வேண்டுமென்னும் நியதி இன்னும் கொண்டு வரப்பட வில்லை. ஆகவே அவ்வகைப் பெயர்களுக்குப் பக்கத்தில் ஆங்கிலத்தி லுள்ளவாறும் குறிப்பிட்டிருக்கின்றோம்.

இச்சிறு நூல் நிறைவாகிய பெரிய நூல் ஒன்று செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சியாகும்.

ந.சி. கந்தையா

பொது அறிவு
பெருங்கடல்கள்
அண்டாக்டிக் கடல்: தென் துருவத்தைச் சுற்றியுள்ளது பரப்பு: ஏறக்குறைய 7,500,000 சதுர மைல். வடதுருவ தென்துருவப்பரப்புகள் நன்கு கண் டறியப் படாதிருப்பதால் அதன் கூடிய ஆழம் இன்னதென்று அறியப் படவில்லை.

அத்லாந்திக் கடல்: இதன் பரப்பு 41,322,000. சதுர மைல். இது ஆக்டிக் கடல் முதல் அண்டாக்டிக் கடல் வரை நீண்டுள்ளது. இதன் எல்லைகள் வட அமெரிக்கா. தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா. இதன் கூடிய ஆழம் 27,965 அடி.

ஆக்டிக் கடல்: ஆக்டிக் வளையத்தைச் சுற்றியுள்ளது. பரப்பு : 5,440,000 சதுர மைல். இதன் தெற்கு எல்லை வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்பவற்றின் வடபகுதிகள்.

இந்தியக்கடல்: ஆப்பிரிக்காவுக்குக் கிழக்கிலும் ஆசியாவுக்குத் தெற்கிலு முள்ளது. பரப்பு: 28,350,000 ச.மை. இதன் கூடிய ஆழம் கிறி°ம° தீவுக்கு அண்மையில் 13,000 அடி.

பசிபிக் கடல்: கடல்களுள் மிகப்பெரியது. பரப்பு: 68,634,000 ச.மை. மிண்டோ னோத் தீவுக்கருகில் இதன் கூடிய ஆழம் 35,410 அடி . இது ஆக்டிக் கடல் முதல் அண்டாக்டிக் கடல் வரை நீண்டுள்ளது. இதன் எல்லைகள் வடஅமெரிக்கா, தென்னமெரிக்கா, ஆ°திரேலியா, மலாய தீவுக் கூட்டம், கிழக்காசியா என்பவை .

மலைகள்
அகன்காகுவா (Acongaqua): அண்டீ° மலையிலுள்ள மிக உயர்ந்த சிகரம். உயரம் 22,834 அடி.
அண்டீ°: (Andes) தென்னமெரிக்காவிலுள்ள மிக நீண்டமலைத்தொடர் நீளம். ஏறக்குறைய 5,000 மைல்.

அபெனைன்° (Apennines)- இத்தாலியின் முழு நீளத்துக்கு ஓடும் மலைத் தொடர்; அல்ப்° மலையின் கிளையாகவுள்ளது.

அப்பிளாச்சியன்°: (Appalachians) ஐக்கிய அமெரிக்காவில் அத்லாந்திக் கடற்கரையில் இணைப்போக்காக (Parallel) செல்லும் மலைத் தொடர்.

அல்ப்° (Alps): ஐரோப்பாவில் மிக உயர்ந்த மலைத்தொடர்; தென்கிழக்குப் பிரான்சிலிருந்து சுவிற்சர்லாந்து; கீழ் சேர்மனி, மேல் ஆ°திரியா முதலிய மேல் நாடுகளைக் கடந்து செல்வது. இதற்கூடாகப் பல கணவாய்களுண்டு. இதற்கூடாகச் செல்லும் நீண்ட மலைக்குடைவுக்கூடாக புகைவண்டிப் பாதை இடப்பட்டுள்ளது.

ஆரவல்லி மலை: (Aravalli Hills) இந்தியாவில் இராசபுத்தனாவிலுள்ள மலை. இதன் உயர்ந்த சிகரமாகிய அபுவின் உயரம் 5,650 அடி

(இ)டிரகின்°பேக் (Drakinsbergh): தென்னாப்பிரிக்காவில் ப°துலந்து, நெத்தால் கேப் மாகாண ஓரமாகச் செல்லும் மலைத்தொடர் . நீளம் : 500 மைல்

இமயம்: இந்தியாவின் வடக்கிலுள்ள மலை. நீளம் 1,500 மைல்; உயர்ந்த சிகரம் எவரெ°ட் 29,141 அடி

உரொப்சன் (Robson): பிரிட்டிஷ் கனடிய உறொக்கி மலைகளிலுள்ள உயர்ந்த சிகரம் உயரம்: 13,000 அடி.

உறொக்கி (Rocky): வட அமெரிக்காவிலுள்ள பெரிய மலைத் தொடர். இதன் முழுநீளம் 4,000 மைல். இதன் மிக உயர்ந்த சிகரம் எல்பேட் (Elbert) இச்சிகரத்தின் உயரம் 14,421 அடி.

எல்புரூ° (Elbruz): உருசியாவில் கருங்கடலுக்கும் க°பியன் கடலுக் குமிடையிலுள்ளது. ஐரோப்பாவில் மிக உயரமானது. உயரம்: 18,465 அடி.

எவரெ°ட்: இமயமலைச் சிகரங்களிலொன்று. உலகில் மிக உயர்ந்தது. உயரம்: 29,141 அடி.
ஊரல் (Ural) மலைகள்: ஐரோப்பாவின் கிழக்கெல்லையைக் காட்டும் மலைகள். நீளம் : 1,500 மைலுக்கு மேல்.

காக்கேச° (Caucasus): கருங்கடல் முதல் க°பியன் கடல் வரையும் செல்லும் மலைத்தொடர். நீளம்: 750 மைல்.

கார்ரு (Karroo) - தென்னாப்பிரிக்காவில் கேப் மாகாணத்தில் உள்ள படிக் கட்டுப் போன்ற பீடபூமி. நீளம்: 350 மைல்.

கார்பாதியன் (Carpathian): மத்திய ஐரோப்பாவில் செக்கோசிலா வைக்கியா, கங்கேரி, உருமேனியாவுக்கூடாகச் செல்லும் மலைத் தொடர். நீளம்: 880 மைல்.

கிரம்பியன் மலைகள் (Grampians): மத்திய °கொத்லாந்திலுள்ள மலைத் தொடர். இதன் உயர்ந்த சிகரம் பென்நெவி° (Ben nevis) உயரம்: 4,406 அடி.

கிலிமன்யாரோ (Kilimanjaro): ஆப்பிரிக்காவில் தங்கநிக்காவிலுள்ளது; ஆப்பிரிக்காவில் மிக உயர்ந்தது. உயரம் : 19,710 அடி.

சினோடொன் (Snowdon): பிரிட்டிஷ் தீவுகளிலுள்ளது.உயரம்: 3,500 அடி.

பெரிய தடைத்திட்டு (Great Barrier reef) ஆ°திரேலியாவின் கிழக்குக்கரை யில் 1,200 மைல் நீளத்துக்குக் கிடக்கும் பவளப் பாறைத் திட்டுகள்

பென்நெவி° (Ben nevis) பிரிட்டிஷ் தீவுகளில் மிக உயர்ந்த மலை. உயரம்: 4,400 அடி

பிரினீ° (Pyrenees): பிரான்சுக்கும் இ°பேயினுக்குமிடையிலுள்ள மலைத்தொடர் நீளம் : 250 மைல்.

மக்கின்லி மலை (MC Kinley): வடஅமெரிக்காவில் மிக உயர்ந்தது. உயரம்: 20,300 அடி.

மவுண்ட் பிளாங்க் (Mount Blank): அல்ப்° மலையில் மிக உயர்ந்த சிகரம் உயரம் : 15,781 அடி

யுங்புறோ (Jungfrau): சுவிட்சலாந்திலுள்ள பெரிய மலை. உயரம் : 13,000 அடி

எரிமலைகள்
இ°ரொம்பொலி (Stromboli): சிசிலித்தீவுக்கு மேற்கிலுள்ள இலிப்பாரித் தீவுகளில் (Lipari Islands) உள்ளது.

எட்னா (Etna): ஐரோப்பாவில் மிக உயர்ந்த எரிமலை. இத்தாலியின் தென்கரையோரத்திலிருக்கும் சிசிலித் தீவிலுள்ளது. உயரம் : 10,750அடி இதற்கு 200 கூம்புகளுண்டு.

கத்மாய் (Mount Katmai) அல°காவிலுள்ளது.

கிலோவே (Kilauea): காவே (Hawaii) தீவிலுள்ளது. உயரம் : 4,100 அடி. வாயின் விட்டம் 2 1/2 மைல்.

கிறகற்றோவா (Krakatao): சுமத்திராவிலுள்ளது.

கொதோபாக்சி (Cotopaxi): எக்கடோர் மலையிலுள்ள ஒரு சிகரம். உயரம்: 19,550 அடி

சிம்பராசோ (Chimborazo): உலகில் மிகப்பெரிய எரிமலை. எக்கடோரில் (Ecuador) உள்ளது. உயரம் : 20,700 அடி

பியூசியாமா (Fujiyama): தொக்கியோவுக்குத் தெற்கிலுள்ள ஹோன்சு என்னும் தீவிலுள்ளது உயரம் : 12,395 அடி. இது யப்பானியரின் சயமசம்பந்தமான சிறப்புப் பெற்றது.

போபோகாற்றுப்பீற்றில் (Popacatepetl): மெக்சிக்கோவிலுள்ளது. உயரம்: 17,520 அடி

மோனலோவா (Mauna Loa) - காவேய்த் தீவிலுள்ளது. உயரம்: 17,000 அடி.

மௌண்ட் பீலி (Mount Pelee): மேற்கிந்தியத் தீவுகளில் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகிய மாட்டினிக் (Martinique) கில் உள்ளது. 1902ல் வெடித்து 32,000 மக்களைக் கொன்றது.

விசூவிய° (Vesuvius) இத்தாலியின் தென் மேற்கிலுள்ள நேப்பிள்சில் உள்ளது. உயரம் : 3,891 அடி. கி.பி. 79ல் வெடித்தபோது பொம்பே (Pompeii) நகரம் மூடுண்டது.

பெரிய ஆறுகள்
அமூர் (Amur): பகுதி சீனாவிலும் பகுதி சைபீரியாவிலும் கிழக்கு நோக்கி ஓடும் ஆறு. நீளம்: 1,600 மைல்.

அமேசன்: பிரேசிலிலுள்ளது. இது உலகில் மிகப்பெரிய ஆறு. இதன் கழிமுகத்தில் செல்வா° என்னும் காடு உண்டு. இதன் வடி நிலப்பரப்பு 23,68,000 சதுர மைல். இதில் செக்கெண்டுக்கு 35 இலட்சம் கனஅடி நீர் பாய்கிறது. இது அத்லாந்திக் கடலுள் விழுகிறது. நீளம் : 4,000 மைல்.

(இ) டான்யூப் (Danube): ஐரோப்பாவிலுள்ள நீண்ட ஆறு, கருங்கடலுள் விழுவது. நீளம் : 1,725 மைல்.

இரையோ கிராண்டி (Rio Grande): வடஅமெரிக்காவில் மெக்சிக்கோக் குடாக் கடலுள் விழும் ஆறு. நீளம் : 1,800 மைல்.

இலா பிளாட்டா (La Plata): தென்னமெரிக்காவிலுள்ள ஆறு; நீளம் 2300 மைல். இது அத்லாந்திக் கடலுள் விழுவது.

இலிம்போபோ (Limpopo): தென் கிழக்காப்பிரிக்காவிலுள்ள ஆறு. இந்தியக் கடலுள் விழுவது. இதன் ஒரு பகுதி உரொடேசியாவுக்கும் திரான் சுவாலுக்கும் எல்லையாக உள்ளது. நீளம்: 1,000 மைல்.

இலேனோ (Lena): சைபீரியாவிலுள்ள ஆறு; ஆக்டிக் கடலுள் விழுவது. நீளம் 2875 மைல்
இறையின் (Rhine): ஐரோப்பாவிலுள்ள ஆறு; வடகடலுள் விழுவது. நீளம்: 770 மைல்.

உடோரோ (Douro): இ°பேயினில் ஊற்றெடுத்துப் போர்ச்சுக்கலுக் கூடாகச் சென்று அத்லாந்திக் கடலுள் விழுவது. நீளம் 500 மைல்.

உலோயிரி (Lorie): பிரான்சிலுள்ள மிக நீண்ட ஆறு; நீளம் 630மைல்.

எல்பி (Elbe): செக்கோசிலாவைக்கியாவில் தொடங்கிச் சேர்மன் சமவெளிக் கூடாகச் சென்று வடகடலில் விழுவது. நீளம்: 723 மைல்.

ஐராவதி: பர்மாவிலுள்ள மிக நீண்ட ஆறு. நீளம் 1,300 மைல். இது வங்காள விரிகுடாவுள் விழுகிறது.

ஒடெர் (oder): மத்திய ஐரோப்பாவிலுள்ள முதன்மையான ஆறு. இது சேர்மனிக்கும் போலந்துக்குமுள்ள எல்லைப்புறமாக ஓடி பால்டிக் கடலுள் விழுகின்றது. நீளம் 560 மைல்.

ஒரினகோ(Orinoco): தென்னமெரிக்காவிலுள்ள மூன்று முக்கிய ஆறுகளி லொன்று. இது வெனிசுலாவிலுள்ள இலானோ° என்னும் புல்வெளிக் கூடாகச் சென்று அத்லாந்திக் கடலுள் விழுகின்றது. நீளம் 1,500 மைல்.

ஓபி (obi): மேற்குச் சைபீரியாவிலுள்ள பெரிய ஆறு; ஆக்டிக் கடலுள் விழுவது. நீளம் : 2,400மைல்.

ஓரேஞ்சு (Orange): தென்னாப்பிரிக்காவிலுள்ள ஆறு; நீளம் : 1,300 மைல்.

கங்கை: இந்தியாவிலுள்ள பெரிய ஆறுகளுள் ஒன்று. இமயமலையில் ஊற்றெடுத்து கோன்பூர்,கல்கத்தா முதலிய பட்டினங்களுக்கூடாகச் சென்று வங்காள விரிகுடாவுள் விழுகின்றது. நீளம் 1,500 மைல்.

குவாங்கோ(Hwango) (மஞ்சள் ஆறு): சீனாவிலுள்ள மூன்று பெரிய ஆறு களுள் ஒன்று. நீளம் 2,700 மைல்.

கொங்கோ: ஆப்பிரிக்காவிலுள்ள மிகப்பெரிய ஆறு, அத்லாந்திக் கடலுள் விழுவது. நீளம் 3,000 மைல். இது ஆப்பிரிக்க ஆறுகளுள் இரண்டாவது நீளமுடையது.

கோதாவரி: தென்னிந்தியாவிலுள்ள பெரிய ஆறு, வங்காள விரிகுடாக் கடலுள் விழுவது. நீளம் : 900 மைல்.

சயோவிரான்ஸி°கோ (Sao Francisco): பிரேசில் நாட்டிலுள்ள ஆறு, தென் அத்லாந்திக் கடலுள் விழுவது. நீளம் : 1,800 மைல்.

சல்வீன் (Salween) பர்மாவிலுள்ள ஆறு; நீளம் 1,800 மைல்.

சாம்பசி: ஆப்பிரிக்காவிலுள்ள ஆறு; இந்துமாக்கடலுள் விழுவது. இது ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய ஆறு. நீளம் : 1,600 மைல்.

சிக்கியாங் (Si-Kiang): சீனாவிலுள்ள பெரிய ஆறுகளிலொன்று; கிழக்கு நோக் கிச் செல்வது. இதில் காண்டன் பட்டினமிருக்கிறது. நீளம் : 1,250 மைல்.

சிந்து : இந்தியாவிலுள்ள மிக நீண்ட ஆறு. மேற்கு நோக்கிச் செல்வது. நீளம்: 1,800 மைல்.
சீனே (Seine): பிரான்சிலுள்ள ஆறு. இங்கிலீஷ் கால்வாயில் விழுவது. பாரி° நகர் இவ்வாற்றிலுள்ளது. நீளம் 482 மைல்.

செயிண்ட் லோரன்° (St. Lawrance): கிழக்குக் கனடாவிலுள்ள ஆறு. செயின்ட் லோரன்° குடாவுள் விழுவது. நீளம் 750 மைல்; அகலம்: 1 மைல் முதல் 4 மைல்.

செவேண் (Severn): இங்கிலாந்திலுள்ள ஆறு; பிரி°டல் கால்வாயில் விழுவது. நீளம் : 210 மைல்.

தாகு° (Tagus): இ°பேயினிலும் போர்ச்சுக்கல்லிலுமுள்ள முதன்மையான ஆறு; அத்லாந்திக் கடலுள் விழுவது. இலி°பன் பட்டினம் இதிலுள்ளது. நீளம் : 566 மைல்.

திநீப்பெர் (Dnieper) உருசியாவிலுள்ள ஆறு; கருங்கடலுள் விழுவது.நீளம்: 1,330 மைல்.

திவினா (Dvina): உருசியாவிலுள்ள இரு ஆறுகளுக்கு இப்பெயருண்டு. ஒன்று வெண்கடலிலும் மற்றது இறிகா (Rega) குடாவுள்ளும் விழுகின்றன.

தேம்° : இங்கிலாந்திலுள்ள முதன்மையான ஆறு. நீளம் : 210 மைல்.

நைகர் (Niger): மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய ஆறு ; கின்னியாக் குடாவுள் விழுவது. நீளம் : 2,500 மைல்.

நைல் : ஆப்பிரிக்காவிலுள்ள நீண்ட ஆறு; நீளம்: 3,600 மைல். மத்தியதரைக் கடலுள் விழுவது.

பிரம்மபுத்திரா: இது இமயமலையில் வங்காளத்தில் கங்கையாற்றுடன் சேர்கின்றது. நீளம்: 1,680 மைல்

போ (Po): இத்தாலியின் வடக்கிலுள்ள ஆறு; அட்டிரியாட்டிக் கடலுள் விழுவது.

மகாவலி கங்கை: இலங்கையிலுள்ள ஆறு, நீளம் :206 மைல்.

மக்கன்சி (Mackenzie): வட அமெரிக்காவிலுள்ள ஆறு; ஆக்டிக்கடலுள் விழுவது. நீளம் 2,300 மைல்.

மிசிசிப்பி: ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஆறு; மெக்சிக்கோக்கடலுள் விழுவது. உலகில் மிக நீண்ட ஆறு. நீளம் : 4,222 மைல்.

மிசௌரி: மிசிசிப்பி ஆற்றின் கிளை ஆறு; நீளம் : 2,900 மைல்.

மியூசி (Meuse): பெல்சியத்துக்கும் ஒல்லாந்துக்கு மூடாகப்பாய்ந்து வட கடலில் விழுவது; பிரான்சிலுள்ளது. நீளம் : 500 மைல்.

மெகொங் (Mekong): சீயத்திலுள்ள முக்கிய ஆறு; சீனக்கடலுள் விழுவது. நீளம் : 3,000 மைல்.

யாங்சிகியாங்: சீனாவிலுள்ள மிகப்பெரிய ஆறு; மஞ்சட்கடலுள் (வட பசிபிக் கடலுள்) விழுவது. நீளம்: 3,400 மைல்.

யுகோன் (Yukon): அல°கா (வடஅமெரிக்கா) விலுள்ள பெரிய ஆறு. பெஃறிங் (Behring) கடலுள் விழுவது.

யெனிசி: கோபிப்பீடபூமி மலைகளில் தொடங்கிச் சைபீரியாவுக்கூடாக ஓடி ஆக்டிக் கடலுள் விழுவது. நீளம் : 3300 மைல்.

வி°துலா: போலந்திலுள்ள ஆறு; பால்டிக் கடலுள் விழுவது. நீளம் :600மைல்

வொல்கா: உருசியாவிலுள்ள மிகப்பெரிய ஆறு; கா°பியன் கடலுள் விழுவது; நீளம் : 2,400 மைல்.

கடல் நீரோட்டங்கள்
குடா நீரோட்டம் (Gulf Stream): இது மெக்சிக்கோக் குடாவுக்கருகே தொடங்கி ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக்கரை ஓரமாக ஓடி அத்லாந்திக் கடல் வழியே சென்று இங்கிலாந்துக்கும் இ°காந்தினேவியக் குடாநாட்டுக் கும் பக்கத்தால் சென்று ஆக்டிக் கடலில் முடிவடைகிறது.

யப்பான் நீரோட்டம்: இது பசிபிக் கடற் குடாநீரோட்டம் எனப் படுவதுண்டு. இது ஆசியாவின் தென்கிழக்குக் கரையில் சீனக்கடலில் தொடங்குகிறது; பசிபிக் கடலைக் கடந்தபின் கலிபோர்னிய நீரோட்டமெனப் பெயர் பெற்று ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்குக் கரைகளை வெப்பப் படுத்துகிறது.

உயர்ந்த நீர்வீழ்ச்சிகள்
இரிபன் நீர்வீழ்ச்சி (Ribbon Falls): கலிபோர்னியாவில் யோ° மைட் பள்ளத்தாக்கிலுள்ளது. உயரம் 1,612அடி

இ°தோப்பாச் (Staubbatch): சுவிட்சலாந்திலுள்ளது. உயரம்: 300 அடிக்கு மேல்
கயத்தூர் நீர்வீழ்ச்சி: (Kaieteur Falls) பிரிட்டிஷ் கயனாவில் பொடாரோ ஆற்றிலுள்ளது. உயரம் 822 அடி

கவர்னி: (Gavarnie) பிரான்சிலுள்ளது. உயரம் 300 அ

கிங் எட்வர்ட் எயித்: (King Edward VIII): பிரிட்டிஷ் கயனாவிலுள்ளது. உயரம் 300 அடிக்கு மேல்
கிராண்ட் நீர்வீழ்ச்சி: (Grand Falls): கனடாவிலே இலபிரடோரில் (La birador) உள்ளது. உயரம் 302 அடி.

குகென்னாம்: (Kukenaam) பிரிட்டிஷ் கயனாவிலுள்ளது. உயரம் 2,000 அடி இது உலகில் இரண்டாவது உயர்ந்த நீர்வீழ்ச்சி.

சுதர்லாந்து: (Sutherland) நியூசிலாந்திலுள்ளது. உயரம் 300 அடி

தக்காகௌ: (Takakaw) பிரிட்டிஷ் கலம்பியாவிலுள்ளது. உயரம் 300 அடி

துரும்மெல்பாச்: (Trummelbatch) சுவிட்சர்லாந்திலுள்ளது. உயரம் 300 அடி

தூக்லா: (Tuegla) தென்னாப்பிரிக்கா யூனியனில் நத்தாலிலுள்ளது. உயரம் 2,810 அடி இதுவே உலகில் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி.

நயகரா நீர்வீழ்ச்சி: வடஅமெரிக்காவில் நயகரா ஆற்றிலுள்ளது. உயரம் 620 அடி. இதில் இரண்டு பேரருவிகளுண்டு. ஒன்று அமெரிக்க நீர்வீழ்ச்சி (American Falls) மற்றது கனடிய அல்லது குதிரை இலாட நீர்வீழ்ச்சி (Canadian or horse Shoe falls)

பிரைடல் வேயில் நீர்வீழ்ச்சி: (Bridal Veil falls) கலிபோர்னியாவில் யோ° மைட் பள்ளத்தாக்கிலுள்ளது. உயரம் 620 அடி

மொன்ட்மோறேன்சி நீர்வீழ்ச்சி (Montmorency falls) கியூபெக்கில் (கனடா) உள்ளது. உயரம் 250 அடி.

யோசமைட் நீர்வீழ்ச்சி: (Yosemite falls) கலிபோர்னியாவில் யோசமைட் பள்ளத்தாக்கிலுள்ளது. உயரம் : 620 அடி

விக்டோரிய நீர்வீழ்ச்சி: தென்னாப்பிரிக்காவில் சாம்பசி ஆற்றின் வீழ்ச்சி. இதில் நான்கு பேரருவிகளுள்ளன. மிக உயரமானது 347 அடி உயரமும் 5,300 அடி அகலமுள்ளது.

வெட்டி° (Vettis) நீர்வீழ்ச்சி: நோர்வேயிலுள்ளது. உயரம் : 300அடி

வெந்நீர்ப்பீச்சுக்கள்
அர்க்கன்சா வெந்நீரூற்றுக்கள்: ஐக்கிய அமெரிக்காவில் ஆர்க்கன்சாவி லுள்ள (Arkansas) பூங்காவில் வெந்நீரூற்றிலிருந்து வரும் 46 ஊற்றுக் களுண்டு. இந்நீர் பலநோய்களைக் குணப்படுத்துகின்றது.

இலாசென் எரிமலைப்பூங்கா வெந்நீர்ப்பீச்சு: (LaseenVolcanic National Park) கலிபோர்னியாவிலுள்ள சேற்றுக் கொதிநீர்ப் பீச்சு.

ஓல்ட் பெய்த்புல்: (Old faithful): ஐக்கிய அமெரிக்காவில் வைஒமிங் (Wyoming) மாகாணத்திலுள்ள கொதிநீர்ப்பீச்சுக்களில் பெரியது. இது ஒவ்வொரு 63 நிமிடங்களுக்கு ஒருமுறை கொதிநீரை 150 அடி உயரத் திற்குப் பீச்சுகின்றது.

ஐ°லாந்து வெந்நீர்ப்பீச்சுகள்: ஐ°லாந்தில் பல வெந்நீர்ப்பீச்சுக்கள் உண்டு. இப்பீச்சுகளிலிருந்து வரும் நீரில் முட்டைகளை அவிக்கலாம்.

சோர்சியா வெந்நீரூற்று: அமெரிக்காவிலே சோர்சியா (Georiga) என்னுமிடத் திலுள்ள வெந்நீரூற்றின் நீர்சிறுபிள்ளை வாதத்தை மாற்றுகிறதென்று நம்பப்படுகிறது.

நியூசீலந்துக் கொதிநீர்ப்பீச்சுக்கள்: நியுசீலந்தில் பல வெந்நீர்ப்பீச்சுக்கள் உள்ளன. வீட்டு தேவைகளுக்கு வேண்டிய வெந்நீர் குழாய்கள் மூலம் எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது.

யப்பான் வெந்நீர்ப்பீச்சுக்கள்: யப்பானில் பல வெந்நீரூற்றுக்கள் உள்ளன. இவ்வூற்றுகளிலிருந்து வீட்டுத்தேவைகளுக்கு வேண்டிய நீர் குழாய்கள் மூலம் எடுக்கப்படுகிறது.

வெந்நீர்ப்பீச்சுக்கள்: இவை பூமியின் உட்பகுதியிலிருந்து தோன்றி நில மட்டத்துக்கு மேல் பல அடி உயரம் வீறிட்டெழும். நியுசீலந்து, ஐ° லாந்து முதலிய நாடுகளில் இவ்வகைப் பீச்சுக்கள் பல உண்டு. நிலத்தில் உண்டாகியிருக்கும் வெடிப்பு வழியே நீர் மிகஆழத்துக்குச் செல்கிறது. ஆழத்தில் வெப்பமதிகமிருப்பதால் நீர் சூடேறி மேலேகிடக்கும் நீரைத் தள்ளிக்கொண்டு வெளியே வருகிறது. உள்ளே புகும் நீர் இவ்வாறு மறுபடியும் வெளிவருகின்றது. இக்காரணத்தினால் வெந்நீரூற்றுக்களில் நீர் சிறிது சிறிது நேரத்துக்கொருமுறை வெளியே வரும்.

வைஓமிங் (Wyoming) வெந்நீரூற்றுகள்: ஐக்கிய அமெரிக்காவில் வைஓமிங் என்னும் பகுதியில் பல பெரிய வெந்நீரூற்றுகள் உள்ளன. அவற்றுள் பெரியவை சததொகா உலோக ஊற்று (Satatoga Mineral hot Springs), தேமோபொலி° ஊற்று (Thermopolis hot Springs), யுபிதர் தெரெ° (Jupiter terrace) என்பன.

வனாந்தரங்கள்
இரெப் எல் காலி வனாந்தரம் (Rebel Khali Desert) இதுதென்னரேபியாவி லுள்ளது.
ஒரிசாம்போ: (Orishambo) தென் மங்கோலியாவிலுள்ளது.

காலகரி: (Kalahari): தென்னாப்பிரிக்காவில் உள்ளது. இங்கு நாகரிகமற்ற ஹொட்டன்டொட் மக்கள் வாழ்கின்றார்கள்.

கிப்சன்: (Gibson) மேற்கு ஆ°திரேலியாவிலுள்ளது.

கிலா: (Gila) தென்னமெரிக்காவில் சில்லிக்கும் பெருவுக்கு மிடையிலுள்ளது.

கோபி வனாந்தரம்: (Gobi Desert) மத்திய ஆசியாவிலுள்ளது. 1,500 மைல் நீளமும் 400 மைல் அகலமும் உடையது.

சகாரா வனாந்தரம்: ஆப்பிரிக்காவின் வடபகுதியிலுள்ள மிகப்பெரிய வனாந்தரம். இதன் பரப்பு ஏறக்குறைய 3,000,000 சதுர மைல். இதன் மிகக் கூடிய உயரம் கடல் மட்டத்துக்குமேல் 9,000 அடி. சகாரா வனாந்தரம் என்பதில் இலிபிய வனாந்தரமும் அடங்கும். இதுவே உலகில் பெரிய வனாந்தரமாகும்.

தார் வனாந்தரம்: இந்தியாவில் இராச புத்தானத்திலுள்ளது.

தா°த் காவிர்: (Dasht Kavir) வட ஈரானில் (பாரசீகம்) உள்ளது.

நூபிய (Nubian) வனாந்தரம்: நைல் ஆற்றுக்குக் கிழக்கிலுள்ளது,

பெரிய அமெரிக்க வனாந்தரம்: ஐக்கிய அமெரிக்காவில் உதா (Utha) வின் மேற்குப் பகுதியிலிருந்து, நெவடாவரையும் விரிந்துள்ளது.

பெரிய மணல் வனாந்தரம்: (Great Sandy Desert) ஆ°திரேலியாவின் மேற்குப்பகுதியிலுள்ளது.

பேயின்டெட்: (Painted) தென்னமெரிக்காவில் சில்லிக்கும் பெருவுக்கு மிடையிலுள்ளது.

மோகவா: (Mohava) தென்னமெரிக்காவில் சில்லிக்கும் பெருவுக்கும் இடையிலுள்ளது.

மக்கட் குலங்கள்
(Races of man)
அல்பைன் குலத்தினர்: நடுத்தரமான நிறமும், சிறிது குறுகிய வலிய உடற் கட்டும், அகன்ற தலையும் உடையர், ஐரோப்பாவின் மத்திய பகுதிகளில் வாழ்கின்றனர்.

காக்கேசியர்: இவர்கள் ஐரோப்பாவிலும் தூரகிழக்கிலும், இந்தியாவிலும் காணப்படுகின்றனர். இவர்களை மூன்று உட்பிரிவினராகப் பிரிக்கலாம். அப்பிரிவுகள் : நோர்டிக், அல்பைன்,மத்திய தரை என்பன. நோர்டிக் மக்கள் வெண்ணிறமும், நீலக்கண்ணும், நீண்ட உருவும், நீண்ட தலையுமுடையர்.

நிக்கிரோயிட்டுகள் : ,இவர்களுக்கு அகன்ற சப்பை மூக்கும், தடித் த உதடும், நேரிய கண்ணும், முன் தள்ளிய தாடை எலும்பும், கபில நிறம் முதல் பல அளவுகளில் மாறுபட்டுள்ள கரிய நிறமுண்டு. நிக்கிரோயிட்டுகள் சகாரா வனாந்தரத்துக்குத் தெற்கிலும்,மடகா° கரிலும், த°மேனியா விலும் ஆ°திரேலியாவுக்கு வடக்கிலுள்ள தீவுகளிலும் காணப்படு கின்றார்கள்.

மங்கோலிட்டுகள்: இவர்கள் புதிய உலக மங்கோலிட்டுகள் பழைய உலக மங்கோலிட்டுகள் என இரு பிரிவினராவர். பழைய உலக மங்கோலிட்டு களுக்கு ஒடுங்கிய மூக்கும், மெல்லிய உதடும், சாய்ந்த கண்களும், நேரிய மயிரும், மஞ்சள் கலந்த கபில நிறமுமுண்டு. கிழக்கு ஆசியா, வட ஐரோப்பாவில் வாழும் இலாப்பியர், ஆசியாவின் தென்கோடிக்கப் பாலுள்ள பெரிய தீவுகளில் வாழ்வோர் பழைய உலக மங்கோலிட்டுகள்.

மத்தியதரையினர்: இவர் அல்பைன் குலத்தினரைவிட மங்கிய நிறமும் மெல்லிய தோற்றமும், நீண்ட தலையினருமாவர். இவர்கள் தென் ஐரோப் பாவிற் காணப்படுவர். திராவிட சாதியினர் இப்பிரிவைச் சேர்ந்தவர் களாவர்.

மக்கட் சாதியினர்
அச்தெக்°: (Aztecs) மெக்சிக்கோவின் பழைய நாகரிகத்தைத் தோற்றுவித் தவர்கள்.

அபாச்செ°: (Apaches) அரிசோனாவிலும் நியுமெக்சிகோவிலும் வாழும் செவ்விந்திய ஆதிக்குடிகள்

அமெரிக்க இந்தியர்: இது அமெரிக்க செவ்விந்தியருக்குக் கொலம்ப° இட்ட பெயர். இவர்கள் செம்பு நிறமும், இருண்ட நேரிய மயிருடையர். இவர்களும் வடகிழக்கு ஆசிய மக்களும் ஒரே தொடக்கத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இபான்: (Iban) இவர்கள் போர்ணியோத் தீவில் வாழும் கடல் இடைக்கர் (Sea Diaks) என்னும் மக்கள், முற்காலத்தில் இவர்கள் மனிதத் தலை வேட்டை யாடுவோராக விருந்தார்கள்.
எ°கிமோவர்: வடஅமெரிக்க வடகிழக்கு ஆசிய துருவப்பகுதிகளில் வாழும் மக்கள், இவர்களும் அமெரிக்க செவ்விந்தியரும் ஒரு தொடக் கத்தைச் சேர்ந்தவர்களெனக் கருதப்படுவர்.இவர்கள் சிதறி வாழ்ந்தாலும் எல்லோருடைய மொழியிலும் பண்பாட்டிலும் ஒருமைப்பாடு காணப் படுகிறது.

கிப்சியர் (Gypsies): ஐரோப்பாவிற் காணப்படும் இந்திய நாடோடிகள். இவர் களின் மொழி சமக்கிருத சம்பந்த முடையது. கங்கேரி,உருமேனியா என்னுமிடங்களில் கிப்சிகளின் பெரிய முகாங்களுண்டு.

குரொட்டியர் (Croatins): தென்சிலாவிய மக்கள். சேப் (Serbs) மக்களுக்கு இனமுடையர்.

கொசொக்° (Cossocks): உருசியாவின் கிழக்கு, தெற்கு எல்லைப் புறங்களில் வாழ்பவர்.

ஒட்டன்டொட்° (Hottentots): வடகிழக்கு ஆப்பிரிக்காவில் வாழும் நிகிரோயிட்டு மக்கள்.

ஒமைட்° (Homites) ஆப்பிரிக்காவின் வடகிழக்கில் வாழும் நிகிரோவ ரல்லாத கறுப்புநிற மக்கள்.

சிலாவியர் (Slaves): மத்திய, கிழக்கு ஐரோப்பாப் பகுதிகளில் வாழும் மக்களை இப் பெயர் குறிக்கிறது. உருசியர், பல்கேரியர், சேர்பியர், குரோட்° (Croats) சிலாவேனியர், கங்கேரியருட் சிலர், செக்° (Czechs) சிலோவெக்°, போல்° என்போர் இப் பிரிவிலடங்குவர். இவர்கள் மொழியிலும் பார்க்க இனத்தில் ஒற்றுமையுடையர்.

தரத்தரிரியர் (Tatars): 13ஆம் நூற்றாண்டில் உருசியா, போலந்து, கங்கேரி முதலிய நாடுகள் மீது படையெடுத்த மங்கோலியர். இவர்கள் உருசியா வின் ஒரு பகுதியிற் காணப்படுகின்றனர்; துருக்கிய மொழியைப் பேசுவர்.

நிகிரிட்டோக்கள்: (Negritos) பிலிப்பைன், அந்தமான்தீவுகள், மலாய்த் தீபகற்பங்களிற் காணப்படும் குள்ளமான நிகிரோயிட்டுகள்.

பா°க்குகள் (Basques): இ°பேயின் நாட்டின் ஒரு பகுதியில் வாழும் மக்கள். இவர்களின் தொடக்கம் அறியப்படவில்லை. ஐரோப்பாவில் ஆரியமல் லாத மொழியைப் பேசுகின்றவர்கள் இக் கூட்டத்தினர் ஒருவரே. இவர்கள் மொழிக்கும் திராவிடமொழிக்கும் ஒற்றுமை உண்டு.

புஷ்மென் (Bushmen): தென்னாப்பிரிக்காவில் வாழும் பழைய நிகிரோயிட்டு மக்கள்.

பெடோனியர் (Bedonins): அரேபியாவிலும் வடஆப்பிரிக்காவிலும் நாடோடிகளாக வாழும் செமிட்டிக்சாதியார்.

பேர்பெர் (Berbers): இவர்கள் ஆப்பிரிக்காவிற் காணப்படுவர்; அராபியர்; நீக்கிரோக்கள், ஐரோப்பியர் என்போரின் கலப்பினர். இவர்களின் சமயம் இ°லாம்.
பொலினீசியர்: (Polynesians) மிகக்கிழக்கிலுள்ள பசிபிக் கடல் தீவுகளில் வாழும் மிக உயரமான கபிலநிறமக்கள்.

மலாயர்: மலாய்த்தீபகற்பம், கிழக்கிந்தியத் தீவுகள், பிலிப்பைன் தீவுகள், மற்றைய பசிபிக் கடல் தீவுகள் என்பவற்றிற் காணப்படும். கபிலநிறச் சாதி யினர், இவர்களில் மங்கோலிட்டு காக்கேசிய அடையாளங்கள் கலந்து காணப்படுகின்றன. இவர்களிற் பெரும்பாலினர் இ°லாம் மதத்தினர்.

மாகியர்: (Magyars) மத்திய கங்கேரியர்: தாத்தாரிய உற்பத்தியைச் சேர்ந்தவர் களெனக் கருதப்படுவர். இவர்களின் மொழி பின்னிய உக்கிரிய மொழி.

மாயோரியர்: (Maoris) சீர்திருத்தமடைந்த நியுசீலந்து வாசிகள்

மூர்கள்: (Moors) கறுப்பு நிறமுள்ள மொரக்கோ மக்கள் இவர்களில் பேர்பர், அராபியர் என்னும் சாதியினரின் கலப்புக் காணப்படும்.

மெலானேசியர்: (Melanesians) ஆ°திரேலியாவுக்கு வடக்கிழக்கிலுள்ள மெலினேசியத் தீவுகளில் வாழும் நிகிரோயிட்டு மக்கள்.

புகழ்பெற்ற மேல்நாட்டினர்

அம்பியர்: (Andre Marie Ampere) பிரான்சிய விஞ்ஞானி. இவருடைய ஞாபக மாக மின்சார அலகுக்கு அம்பீர் என்னும் பெயர் இடப்பட்டுள்ளது.
(1775 - 1836)

அர்க்ரைட்: (Sir Richard Arkwright) இங்கிலாந்தில் வறிய குடும்பத்தில் பிறந்து அம்பட்ட வேலை பழகிக்கொண்டிருந்தவர்; கடிகாரம் செய்யும் ஒருவரின் உதவியோடு நூல் நூற்கும் இயந்திரத்தை (Spinning frame) 1767இல் செய்தவர். (1732-1792)

ஆபிரகாம் இலிங்கன்: (Abraham Lincoln) வறிய குடும்பத்தில் பிறந்து 1860இல் ஐக்கிய அமெரிக்காவின் 16-வது குடியரசு தலைவராக வந்தவர். இவர் அடிமைச் சட்டத்தை எதிர்த்தமையால் தென்மாகாணங்கள் கலகஞ் செய்தன. 1865இல் கலகக்காரர் தோற்கடிக்கப்பட்டனர். அடிமைமுறை ஒழிக்கப்பட்டது. (1809-1865)

இடால்டன்: (John Dalton) அணுக்கொள்கையை வெளியிட்ட ஆங்கில விஞ்ஞானி (1766-1844)

இடீசெல்: (Rudolf Diesel) சேர்மன் பொறிவல்லார்; அமுக்கத்தினால் உள்ளெரிவு (Pressure Combustion System) உண்டாக்கி வேலை செய்வதும் பாரமான எண்ணெயைக் கொண்டு இயங்குவதுமாகிய எந்தி ரத்தைக் கண்டுபிடித்தவர் (1858-1913)

இடேவி: (Sir Humphry Davey) நிலக்கரிச் சுரங்கங்களில் பயன்படுத்தும் அபாயமில்லா விளக்கைக் கண்டுபிடித்த ஆங்கிலர். இது “இடேவியின் விளக்கு” எனப்படும் (1778-1829)

இரைட்: (Orville Wright) இவரும் இவருடைய சகோதரர் வில்பூரும் (Wilbur) அமெரிக்க பொறிவல்லுநர்கள் (விசையினால் உந்தி இயங்கும் (Power driven) விமானத்தில் 1903இல் பறந்தார்கள். விமானம் 300 அடி பறந்தது. 1905இல் இருபத்து நான்கு மைல் தூரம் பறந்தார்கள். (187 1 -1948)

இலவோய்சியர்: (Lavoisier) பிரான்சிய விஞ்ஞானி, நெருப்பு எரியும்போது காற்றிலுள்ள பிராண வாயுவைப் பயன்படுத்துகிறதென்பதைக் கண்டு பிடித்தவர் (1743-1794)

இலி°டர்: (Lord Joseph Lister) தொற்று நீக்கிகளின் பயனையும், காயங்களை யும் சத்திர சிகிச்சை செய்யும் கருவிகளையும் இரசாயன முறையாகக் கிருமி நீக்கம் செய்யும் முறையையும் கண்டுபிடித்த ஆங்கில சத்திர வைத்தியர் (1827-1912)

இலெசெப்°: (Ferdinand de Lesseps) கெய்ரோவில் பிரெஞ்சுத் தூதராக விருந்து சூய°கால்வாயை வெட்டத்திட்டமிட்டு அதனை 1869இல் முடித்தவர். பனாமாக் கால்வாயையும் வெட்ட இவர் திட்டமிட்டவர். அவருடைய கும்பனி முறிந்தமையால் அது 1888இல் கைவிடப்பட்டது. (1805-1894)

இ°கொட்: (Robert Talcon Scott) தென்துருவத்தை 1912இல் முதன் முதலாக அடைந்த ஆங்கிலர் (1868 - 1912)

(இ)டைமிளர்: (Gottieb Daimler) முதல் மோட்டார் சைக்கிளைச் செய்த (1885) செர்மன்பொறிவல்லார். கல்லெண்ணெய் மூலம் இயங்கும் வண்டியை இவர் 1887இல் செய்தார். (1834 - 1900)

இ°டிபின்சன் (George Stephenson): ஆங்கிலப் பொறிவல்லார். இவர் செய்த புகைவண்டி எந்திரம் 1814இல் ஓடியது (1781 - 1848)

உரொன்ட்சென் (Rontgen): எக்° ஒளிக்கதிர்களைக் (X- Rays) கண்டுபிடித்த (1895) செர்மன் விஞ்ஞானி (1845 - 1932)

எடிசன்: (Thomas Alva Edison) ஒலிப்பெட்டி (Gramaphone) வளர்ச்சி யடைவதற்கு ஏதுவாயிருந்த போனோகிராப் பெட்டியைக் கண்டு பிடித்த அமெரிக்கர். மின்விளக்குக் குமிழைக் (Bulb) கண்டுபிடித்தவரு மிவரே (1847- 1931)

கலிலியோ: (Galileo) இத்தாலிய வானசாத்திரி, கடிகாரம் ஊசலினால் இயங்கும் முறையையும் தொலைநோக்கி (Telescope) யையும் கண்டு பிடித்தவர். கிரகங்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன வென்பதையும் இவர் தொலைநோக்கிமூலம் சான்றுபடுத்தினார். இதற்காக இவர் போப்பினால் மறியலிலடைக்கப்பட்டார் (1564-1642)

கவென்டிஷ்: (Hentry Cavendish) காற்று நீர்என்பவைகளின் கூறுகளை (Composition)த் தீர்மானித்த பிரிட்டிஷ் விஞ்ஞானி. இவர் பூமியின் அடர்த்தியையும் (Density) கணக்கிட்டுள்ளார் (1731-1810)

காக்ச்சடன்: (William Caxton) இங்கிலாந்தில் முதன்முதல் அச்சியந்திரம் அமைத்தவர் (1422 - 1491)

காட்ரைட் (Edmand Cartwright) எந்திரத்தறியை (Power loom) கண்டுபிடித்த ஆங்கிலப் பொறிவல்லார் (1743 - 1823)

கார்வே (William Harvey): இரத்தம் உடலைச் சுற்றிப்பரவி ஓடுகின்றதென்னும் உண்மையை முதலில் கண்டுபிடித்த ஆங்கிலர் (1578 - 1657)

குறூக்° (Sir William Crookes): கதிர் மானியை (Radiometer) கண்டுபிடித்தவர் (1832- 1919)

கூரி (Piere Curie): இவரும் இவர் மனைவி மேரி கூரியும் (1867 - 1934) இரேடியத்தைக் கண்டுபிடித்தனர் (1859 - 1906)

கெல்வின்: (Williamson Thomson Kelvin) ஒலி எதிர்ஒலிப்பது மூலம் கடலாழத்தை அறியும் இயந்திரத்தை(Sounding Machine) கண்டுபிடித்தவர். அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் கடல் தந்திக்கம்பி போடுவதற்கு இவர் தந்தி எஞ்சினியராக விருந்தார் (1824 - 1907)

சுவான்: (Swan) ஆங்கில விஞ்ஞானி; நிழற்படம் பிடிக்கும்முறையில் (Photographic Process) பலதிருத்தங்கள் செய்தவர். கார்பன் இழை உள்ள மின்சார விளக்கை முதலில் செய்தவர் (1828 - 1914)

செப்பலின்: (Zeppelin) ஆகாயக்கப்பலைச் செய்த செர்மானியர். முதல் உலகப்போரில் இவ்வகை ஆகாயக்கப்பல்கள் எதிரிகள் மீது குண்டு களை வீசப் பயன்படுத்தப்பட்டன (1838 - 1917).

நோபல்: (Alfred Nobel) சுவிடின் நாட்டு விஞ்ஞானி. இடைனமெட் என்னும் வெடிமருந்து செய்யக் கண்டுபிடித்துப் பெரும் பொருளீட்டியவர். விஞ்ஞானம், இலக்கியம், சமாதானம் முதலிய துறைகளில் திறமை யுடையவர்களுக்கு ஆண்டுதோறும் ஐந்து பரிசுகள் வழங்கும்படி பெரும்பொருள் விட்டுச் சென்றவர் (1833- 1896)

பயாட்: (John Logic Baird) தொலைக்காட்சியை (Television) முதலில் கண்டு பிடித்தவர். (1888- 1946)
பார்சன்°: (Sir Charles Parsons) மின்சார உற்பத்தி எந்திரங்களையும் முன் தள்ளிக் கப்பல்களையும் (Propelling Ships) இயக்குவதற்கு நீராவி ரூபைனை (Tubine) கண்டுபிடித்தவர் (1854-1931)

பா°டூர்: (Lous Pasteur) பிரான்சு நாட்டு இரசாயன வல்லார். நுண் கிருமி களைப் (Bacteria) பற்றி ஆராய்ச்சி செய்தவர். ஊசி மூலம் மருந்து செலுத்து வதால் நோய்த்தடுப்பு முறையை (Immunisation) ஐக் கண்டுபிடித்தவர் (1822 - 1895)

பிக்காட்: (Piccard) இவர் ஏழு மைல் உயரத்திலுள்ள வாயு அமைதி நிலையை (Stratosphere) ஆராய வாயுக்கூட்டைச் செய்து 1931இலும் 1932இலும் மேலே சென்றார். நீரில் செல்லக்கூடிய அறை ஒன்றைச் செய்து மத்திய தரைக்கடலில் இரண்டுமைல் ஆழத்துக்குச் சென்றார் (1884-).

பிரீ°டலி: (Priestley) ஆங்கில விஞ்ஞானி. சீலி (Sheele) என்பவரும் இவரும் ஆராய்ச்சி செய்து பிராணவாயுவைக் கண்டுபிடித்-தார்கள் (1733 - 1804)

பிளெமிங்: (Sir Alexander Fleming) பெனிசிலின் என்னும் மருந்தைக் கண்டு பிடித்தவர் (1929) இது நுண் கிருமிகளால் உண்டாகும் நோய்களைக் குணப்படுத்தும் சிறந்த மருந்தாகும். (1881-)

பெல்: (Alexander Graham Bell) தொலைபேசியைக் (Telephone) கண்டு பிடித்தவர் (1847-1922)

பெ°மர்: (Sir Hentry Bessmer) உருகும் இரும்புக்கு ஊடாக காற்றோட்டங் களைச் செலுத்தும் முறையால் உருக்கைச் செய்யும் முறையைக் கண்டுபிடித்த ஆங்கிலர் (1813 - 1898)

போயில்: (Robert Boyle) ஐரி° விஞ்ஞானி. வாயுவின் கன அளவுக்கும் அமுக்கத்துக்குமுள்ள தொடர்பை நாட்டியவர். (1661) இம்முறை போயில் விதி (Boyle’Law) எனப்படும் (1627 - 1691)

மகாடம்: (Macadom) உடைக்கப்பட்ட கற்களைக் கொண்டு வீதிகளின் மேற்பரப்பை அமைக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் (1756 - 1836)

மார்க்கோனி: (Guglielmo Marconi) கம்பியில்லாத் தந்தியைக் கண்டு பிடித்த இத்தாலிய விஞ்ஞானி (1874 - 1937)

மொண்ட் கொல்பியர்: (Joseph Montgolfier) இவரும் இவருடைய சகோதரர் எட்டினும் (Ettine) வெப்பக்காற்றை நிரப்பிக் காற்றுக்கூட்டைப் பறக்க விட்டார்கள். 1783ல் ஒரு கோழி, வாத்து, ஆடு என்பவற்றை ஒரு கூடை யில் விட்டு அதனைக் காற்றுக்கூண்டில் கட்டிப் பறக்க விட்டார்கள்
(1740 - 1810)

மோர்°: (Morse) தந்தியடிக்கும் குறியீடுகளை (Code) அமைத்த அமெரிக்கர். இக்குறியீடுகள் இவர் பெயரால் அறியப்படும் (1791 - 1892)

யென்னர்: (Edward Jenner) அம்மைப்பால் குத்தும் முறையைக் கண்டுபிடித்த ஆங்கிலர் (1828 - 1906)

வாட்: (James Watt) இ°கொத்திய பொறிவல்லார். முதல் நீராவி எந்திரம் செய்தவர் (1736 - 1819)

விட்டிள் (Sir Frank Whittle): காற்று சிறுகுழாய் மூலம் வெளியேறுதலால் உண்டாகும் உந்துதலைக்கொண்டு இயங்கும் யெட் (Jet) எந்திரத்தைக் கண்டுபிடித்த ஆங்கிலர் (1907-)

வோல்டா: (Volta) இத்தாலிய விஞ்ஞானி. இவர் மின்சாரத்தைப்பற்றிய ஆராய்ச்சி நடத்தி மின்சார கடத்தை (Electric Battery) கண்டுபிடித்தார். மின்சார அமுக்கத்தின் அலகுக்கு வோல்ட் (Volt) என்னும் பெயர் இவரின் ஞாபகமாக வழங்குகிறது. (1745 - 1827)

புகழ் பெற்ற மேல்நாட்டறிஞர்
அண்ரூ: (Andrew) கிறித்து நாதரின் மூதற்சீடர். பீற்றர் ஞானியாரின் சகோதரர்; மீன் பிடிக்கும் குலத்தவர். இவர் பத்ரா.× (Patras) என்னுமிடத்தில் சிலுவை யில் அறையப்பட்டார் (X) எக்° வடிவான இச்சிலுவைகுறி இ°கொத் லாந்துக் கொடியிலுள்ளது.

அடிசன்: (Joseph Addison) பெரும்புலவரும், கட்டுரை வல்லுநரும் அரசியல் நிபுணருமாகிய ஆங்கிலர் (1672 - 1719).

அரி°தோத்திள்: (Aristotle) கிரேக்க தத்துவஞானி; பிளாட்hடோவின் மாணவர்; அலெக்சாந்திரன் ஆசிரியர் (கி.மு. 384 - 322)

அரி°தோபேனி° (Aristophanes): கிரேக்க நகைச்சுவை நாடக ஆசிரியர். 54 இன்பியல் நாடகங்கள் செய்தவர். அவற்றுள் 11 நாடகங்கள் மாத்திரம் பிழைத்துள்ளன. (கி.மு. 450 - 385)

ஆர்ச்சிமிடீ° (Archimedes): கிரேக்க பொறிவல்லுரும் கணித நிபுணரு மாவர். நீரிலிடப்படும் பொருள் வெளியே தள்ளும் நீரின் எடையைக் கொண்டு பொருளின் பாரத்தை அளக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்; ரைக்கூ° என்னும் பட்டினத்தை உரோமர் பிடித்தபோது இவர் கொல்லப்பட்டார்.

ஆபிரகாம்: ஊர் என்னும் பழைய சுமேரிய நகரில் வாழ்ந்தவர். இவர் ஊரை விட்டுக் கானான் தேசத்துக்குச் சென்று தங்கினார். இவர்× இ°ரவேலர் என்னும் சாதியாரின் தந்தை (கி.மு.2000).

இடார்வின்: (Charles Darwin) ஆங்கில விஞ்ஞானி. விரிவளர்ச்சிக் கொள்கையை, (Evolution Theory) வெளியிட்டவர் (1809 - 1882)

இடிக்கின்°: (Charles Dickens) ஆங்கில நாவலாசிரியர் (1812- 1870)

இடிபோ: (Daniel Defoe) உரொபின்சன் குருசோ என்னும் நூலினாசிரியர். (1660-1731)

இடோமொஸ்தீனிஸ்: (Demothenes): கிரேக்க பேச்சாளர் ( கி.மு. 384 - 322)

இர°கின் (John Ruskin): ஆங்கில எழுத்தாளர் (1819 - 1900)

இலாம்ப்: (Charlers Lamb): ஆங்கிலக் கட்டுரை வல்லார். ஷேக்ஸ்பியர் கதை களையும் பிற கட்டுரைகளையும் இவரும் இவர் சகோதரி மேரியும் சேர்ந்து எழுதியுள்ளனர். (1775 - 1834)

இலிவி: (Titus Livy) உரோம் நாட்டின் பெரிய எழுத்தாளர். உரோம் நகரின் வரலாற்றை 142 பகுதிகளடங்கிய புத்தகமாக எழுதியவர். இவற்றுள் 107 பகுதிகள் மறைந்துவிட்டன. இவர் ஆக°தஸ் சக்கரவர்த்தியின் ஆதரவைப் பெற்று விளக்கினார். (கி.மு. 59 - கி.பி.17)

இலின்னேய°: (Linnaeus) சுவிடன் நாட்டு உயிரியல் வல்லார். இவர் உயிர் களையும் தாவரங்களையும் வெவ்வேறு குடும்பங்கள், இனங்களாகப் பிரித்து அவற்றுக்கு விஞ்ஞானப் பெயரிட்டவர் (1701-1778)

ஈசோப்: (Aesop) ஆசியாமைனரில் கிரீச° என்னும் இலிபிய நாட்டரசனின் அரண்மனையிலிருந்து விடுதலையடைந்த கிரேக்க அடிமை. இவர் செய்த கற்பனைச் சிறு கதைகள் மிகப் புகழ்பெற்றவை. (கி.மு. 570)

உலூதர்: (Martin Luther) கத்தோலிக்க கிறித்துவ மதத்துக்கு மாறாகக் கிளர்ச்சி செய்து புரத்த°தாந்து மதத்தைத் தாபித்தவர். பைபிளைச் சேர்மன் மொழியில் பெயர்த்தவர் (1483 - 1546)

உலோங்பெல்லோ: (Hentry Wardsworth Longfellow) இவர் அமெரிக்க கவி (1807 - 1882)

உரூயிட்டர்: (Reuter) ஆங்கிலராகிய இவர் 1844இல் புதினங்களைத் தந்தி மூலம் கொடுக்கும் தாபனம் ஒன்றைத் தொடக்கினார். இது உலக முழு மைக்கும் புதினச் செய்திகளைக் கொடுக்கும் தாபனமாக மாறியுள்ளது, (1816 - 1899)

எமேர்சன்: (Ralph Waldo Emerson) அமெரிக்கக் கட்டுரை எழுத்தாளர். இவர் பல கவிகளும் செய்துள்ளார் (1803 - 1882)

என்°ரின்: (Albert Einstein) உலகம் முழுமையிலும் பேர்போன கணித வல்லார். செர்மனியில் பிறந்து சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவர் (1879-)

ஏசுக்கிறி°து: பெத்தலேமில் பிறந்து கிறித்துவ மதத்தைப் பரப்பிய உலகப் பெரியார் (கி.மு. 5 கி.பி. 30)

உமர்கையாம்: (Omer Khayyam) சிறந்த பாரசீக கவியும் கணிதவியல் வான வியல் வல்லுநருமாவர். தத்துவம், இயற்கணிதம், வடிவ கணிதம், வான வியல், பௌதீகம், இரசாயனம் முதலிய துறைகளில் இவர் இயற்றிய 14 சிறு நூல்களிருக்கின்றன (1050 - 1132)

கச்லி: (Thomas Huxley) இடார்வினோடொத்த விரிவளர்ச்சிக் கொள்கையை வெளியிட்ட இயற்கை வரலாற்றாசிரியர் (1825 - 1895)

கல்வின்: (John Calvin) சமய சீர்திருத்தக்காரரும் புரத்த°தாந்து மத வீரருமாவர். இவர்பிரான்சை விட்டுச் சுவிட்சர்லாந்தில் தங்கிக் கிறித்துவ போதகர்களுக்கு ஒரு கல்லூரியைத் தாபித்தார் (1509 - 1564)

கனன்டோயில்: (Sir Arthur Conan Doyle) ஆங்கில எழுத்தாளர் பல நாவல்கள் எழுதியவர். ஆவி ஆராய்ச்சியிலும் (Spiritualism) ஈடுபட்டிருந்தவர்
(1859 - 1930)

கார்லைல்: (Thomas Carlyle) சரித்திர வல்லுநரும் எழுத்தாளருமாகிய இ°கொத்தியர் (1795-1881)
கிரிம்: (Grimm) இவரும் இவருடைய சகோதரர் வில்கெம்காளும் (Wilhelm Carl) தேவதைக் கதைகளென்னும் கற்பனைக் கதைகளைச் செய்தனர். பழைய சேர்மன் மொழியிலுள்ள மெய்யெழுத்துக்கள், அம்மொழி கிளை மொழிகளாகப் பிரிந்த போது மாறுபட்ட வகைகளைக் கூறும் இவரின் விதிகள் “கிறிம் விதி” (Grim’s Law) என வழங்குகின்றன. இவர் செர்மானியர் (1785 - 1863)

கிளாக் மாச்வெல்: (Clerk Maxwell) இ°கொத்திய கணித வல்லாரும் விஞ்ஞானியுமாவர். மின்காந்த அலைகளைப்பற்றி அறியு முன் மின்காந்த அலைகள் உண்டு என்பதைக் காட்டியவர் (1831 - 1879)

கீற்°: (John Keats) ஆங்கில கவி (1795 - 1821)

கொன்பியூசிய°: சீனரின் பெரிய தத்துவ சாத்திரி (கி.மு. 551 - 479)

கோப்பநிக்க°: (Copernicus) கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன என் னும் இக்காலக் கொள்ளையை வெளியிட்ட வான சாத்திரி (1473 - 1543)

கோல்ட்சிமித்: (Oliver Goldsmith) ஆங்கில எழுத்தாளரும், நாடக நூலாசிரி யரும் நாவலாசிரியரும் (1728 - 1774)

கௌதம புத்தர்: கபிலவா°துவில் பிறந்த இந்திய ஞானி. பௌத்த மதத்தைத் தோற்றுவித்தவர். (கி.மு. 6 -ஆம் நூ).

கௌப்பெர்: (William Cowper) ஆங்கிலக்கவி (1731 - 1800).

செல்லி: (Shelley) ஆங்கிலக் கவிகளிலொருவர் (1792 - 1822)

சேக்°பீயர்: (William Shakespeare) ஆங்கில நாடக ஆசிரியருள் தலை சிறந்தவர் (1564 - 1616)
சேர்வியர்: (Francis Xavier) இ°பானிய கத்தோலிக்க பாதிரி. கிழக்கிந்தியத் தீவுகளிலும் இலங்கையிலும் கிறித்துவ மதத்தைப் பரப்பியவர். இவர் உடல் கோவாவில் வைக்கப்பட்டுள்ளது. (1506-1552)

சொகிரட்டி°: (Socrates) கிரேக்கத்தத்துவ ஞானி. பிளாட்டோவின் ஆசிரியர் (கி.மு. 469 - 399)

சோசர்: (Geoffery Chaucer) முதன் முதல் ஆங்கில மொழியில் பாடல்கள் எழுதியவர் (1340: 1400)

தாலமி: கி.பி. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வானசாத்திரியும் பூமி சாத்திர வல்லுநருமாகிய எகிப்திய கிரேக்கர். இவர் எகிப்திலே அலக்சாந்திரியா விலிருந்து தமது ஆராய்ச்சிகளை நடத்தினார். இவர் உலகத்தைக் காட்டும் பூமி சாத்திரப் படத்தை அக் காலத்திற் கிடைத்த சான்றுகளைக் கொண்டு வரைந்துள்ளார்.

தால்°ரோய்: (Tolstoy) உருசிய நாவலாசிரியர் (1828 - 1910)

தெனிசன்: (Tennyson) ஆங்கில கவிகளுளொருவர் (1809 - 1892)

நாப்பியர்: (John Napier) இ°கொத்திய கணித வல்லார். உலகரிதம் (Logari-thams) முறையையும் கணக்குப் போடும் இயந்திரத்தையும் கண்டு பிடித்தவர் (1550 - 1617)

நிக்கல° ஞானியார்: (Saint Nicholas) சிறுவரின் இரட்சகர். இவரே ஆதி சாந்தாக்குளோ° ஆவர். (கி.பி. 300)

நியூட்டன்: (Sir Isaac Newton)ஆங்கிலக் கணிதவல்லார். இவர் ஆப்பிள் பழம் நிலத்தில் விழுவதைக் கவனித்துப் புவியின் கவரும் சக்தியைப்பற்றி ஆராய்ச்சி செய்தவர். இவர் வானநூல், கணித நூல்களும் செய்துள்ளார் (1642 - 1727)

பத்திரிக் ஞானியார்: (Saint Patrick) அயர்லாந்தின் இரட்சகர். இ°கொத்லாந் தில் பிறந்தவர், இவர் அயர்லாந்துக்கு அடிமையாக எடுத்துச் செல்லப் பட்டார். இவர் அங்கிருந்து பிரான்சுக்குத் தப்பி ஓடி அங்கு துறவியாக வாழ்ந்தார். போப்பு அவரை அயர்லாந்துக்கு அனுப்பினார். அங்கு இவர் 12,000 பேருக்கு ஞான °நானம் கொடுத்தார். (373 - 468)

பிதகோர°: (Pythagoras) கிரேக்க தத்துவ சாத்திரி. எகிப்துக்கும் சாலதியா வுக்குஞ் சென்று திரும்பி வந்து ஒரு பள்ளிக் கூடத்தை இத்தாலியில் நிறுவினார். இவருடைய போதனைகள் பிளாட்டோவை வசியப்படுத்தி யது. இவர் பெயர் வடிவகணிதத்தேற்றங்களோடு சம்பந்தப்பட்டுள்ளது. (கி.மு. 570 - 504)

பிளாட்டோ: (Plato) கிரேக்க தத்துவ சாத்திரியும் சொகிரட்டிசின் மாணவரும் (கி.மு. 428 - 347)

புலுத்தாக்: (Plutarch) கிரேக்க எழுத்தாளர். கிரேக்க உரோமைப் பெருமக்க ளின் வரலாறுகளை எழுதியவர்(கி.பி. 46-120)

பெரிக்கிளி°: (Pericles) அதேனிய (கிரேக்க) இராசதந்திரியும் பேச்சாளரும், இவர் காலத்தில் ஏதேன்° பெரும் புகழ் பெற்று விளங்கிற்று (கி.மு.
490 - 429)

பேக்கன்: (Francis Bacon) ஆங்கில அரசியல்வாதியும் தத்துவ சாத்திரியும் கட்டுரை எழுத்தாளரும் (1561- 1626)

பைரன்: (George Byron) ஆங்கிலக் கவிகளிலொருவர் (1788- 1824)

போட்: (Johann Bode) செர்மன் வான சாத்திரி, சூரியனுக்கும் கிரகங்களுக்கு முள்ள தூரத்தை முறைப்படுத்திக்கூறியவர். “போட்° விதி”யைக் கொண்டு சிறு கிரகங்கள் (Asteriods) 1801இல் கண்டுபிடிக்கப்பட்டன (1747 - 1826)

போப்: (Alexander Pope) ஆங்கிலக்கவி, 12 வயது முதல் நொண்டியாகவும் நோயாளியாகவுமிருந்தவர் (1688 - 1744)

முகமது: இசிலாமிய மதத்தைத் தோற்றுவித்த அராபியப்பெரியார் (571 - 632)

மேர்கேட்டர்: (Mercator) இக்காலத்தில் வழங்கும் தேசப்படங்கள் வரையும் முறையைக் கண்டுபிடித்த இடச்சுக்காரர் (1512 - 1592)

மே°பீல்ட்: (Masefield) இப்போதுள்ள ஆங்கில அரசாங்கப்புலவர் (Poet-Laureate) (1878-)

மொசாட்: (Mozart) ஆ°திரிய இசைவல்லார். இவர் ஆறுவயதில் இசைக் கருவிகளை வாசிக்கத் திறமை பெற்றிருந்தார் (1756 - 1791)

யூகிளிட்: (Euclid) அலக்சாந்திரியாவில் வாழ்ந்த கிரேக்க கணிதவல்லார். இவர் பல கணித நூல்களையும் வடிவ கணித நூல்களையும் செய்தவர் (கி.மு. 300).

யோநாதன் சுவிவ்ட்: (Jonathan Swift) கலிவர் பயணங்கள் என்னும் நூலை எழுதிய அயர்லாந்தியர் (1667-1745)

வலே°: (Alfred Russel Wallace) விரி வளர்ச்சிக் கொள்கையில் இடார்வினின் கருத்துடைய இயற்கைப் பொருளாராய்ச்சி வல்லார் (1823 - 1913)

வேர்சில்: (Virgil) உரோமன் கவிஞர் (கி.மு. 70 - 19)

வெல்°: (Herbert George Wells) ஆங்கில எழுத்தாளர்களில் முதலிடம் பெற்றவர்; பல நூல்களை எழுதியவர் (1866 - 1946)

வைக்கிளிவ்: (John Wycliffe) பைபிளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உரோமன் கத்தோலிக்க மதம் உலகில் வகிக்கும் அதிகாரத்தைக் கண்டித்துப் பேசியும் எழுதியும் விளம்பரஞ் செய்தவர் (1320 - 1384)

வோட்°வோத்: (William Wordsworth) ஆங்கிலக்கவிகளுளொருவர்
(1770 - 1850)

அரசரும் அரசியல் சம்பந்தம் பெற்றவர்களும்
அலக்சாந்தர்: மசிடோனிய அரசன் அரி° தோத்தின் இவரின் ஆசிரியர். பாரசீகம் இந்தியாவின் வடபகுதி முதலியவற்றை வென்று புகழ் பெற்றவர் (கி.மு. 356-323)

இ°டாலின்: (Joseph Stalin) இலெனினுக்குப்பின் உருசிய குடியரசுத் தலைவராகவிருந்தவர் (1879 - 1953)

இலெனின்: (Lenin)சோவியத் குடியரசின் முதல் தலைவராவர்; 1917இல் தலை வராக வந்ததும் எல்லா நிலங்களும் உடைமைகளும் தனிப்பட்டவர் களுக்குச் சொந்தம் என்னும் உரிமையை நீக்கினார் (1870 - 1924)

உரூ°வெல்ட்: (Roosevelt) இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் அமெரிக்க குடியரசுத் தலைவராகவிருந்தவர். (1882 - 1945)

கனிபால் (Hannibal) காதேசிய தளபதி. உரோம் மீது படையெடுத்து இறுதியில் தோற்றோடி நஞ்சுண்டிறந்தவன் (கி.மு.247 - 183)

கிளியபத்திரா: எகிப்திய எழில் மிக்க இராணி (கி.மு. 60 - 30)

கிளைவ் (Robert Clive) கிழக்கிந்தியக் கும்பனியின் கீழ் போர் செய்த வீரனும் அரசியல் நிருவாகியுமாவர். இந்தியாவில் ஆங்கிலர் ஆட்சியை நாட்டியவர் (1725 - 1774)

குப்பிளாய்கான்: மார்க்கோப் போலோவின் காலத்தில் சீனாவை ஆண்ட மங்கோலிய சக்கரவர்த்தி. ஆசியாவின் பெரும் பகுதியும் கிழக்கு ஐரோப்பாவும் இவன் ஆட்சியின் கீழ் இருந்தது. (1216 - 1294)

சங்காய் சேக்: சீனக் குடியரசுத் தலைவராயிருந்தவர். இப்பொழுது பார்மோசாத்தீவில் ஓதுங்கியிருப்பவர் (1887-)

சாலமன்: (Solomon) இ°ரவேல் நாட்டு அரசன். எருசலேமில் பெரிய கோயிலைக் கட்டியவன் (கி.மு. 974 - 937)

திரேக்: (Sir Francis Drake) உலகத்தைச் சுற்றிப் பயணஞ்செய்த முதல் ஆங்கிலர். இவர் இங்கிலாந்து மீது படையெடுத்த இ°பானிய கடற் படையைத் தோற்கடித்தார். (1540 - 1596)
நீரோ: (Nero) கி.பி. 54 முதல் 68 வரை உரோமை ஆண்ட சக்கரவர்த்தி. இவன் பல கிறித்தவர்களைக் கொன்றான். உள்நாட்டுக் கலகம் மூண்டபோது இவன் தப்பி ஓடித் தற்கொலை செய்து கொண்டான்.

நெபுச்சட்நேசர்: (Nebuchadnezzar) பாபிலோனிய அரசன் எருசலேமை வென்று யூதரைச் சிறை பிடித்தவன்; தொங்கும் தோட்டத்தை அமைத்த வன் (கி.மு. 7ஆம் நூ.)
நெப்போலியன் பொனபாட்: இவன் சாதாரண போர் வீரனாக விருந்து 1793ல் பிரான்சிய தளபதியானான். பல வெற்றிகளுக்குப் பின் 1804-ல் சக்கர வர்த்தியாக்கப்பட்டான்; வாட்டர்லோ போர்க்களத்தில் வெலிங்கடனால் தோற்கடிக்கப்பட்டு சென்ட்கெலினாத் தீவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு மரணமானான் (1769 - 1821)

நெல்சன்: (Lord Nelson) ஆங்கில கடற்படைத் தளபதி; (இ) ரவல்காரில் நடத்தப்பட்ட கடற்போரில் மரணமானான் (1758 - 1805)

நைட்டிங்கேல்: (Florence Nightingale) ஆ°பத்திரிகளில் நோயாளரைக் கவனிக்கும் முறையில் சீர்த்திருத்தம் செய்த ஆங்கிலப் பெண், இவர் 38 தாதிமாரோடு 1854இல் துருக்கியிலுள்ள இ°கூதாரி (Scutari) என்னு மிடத்துக்குச் சென்று கிருமியன் போரில் காயப்பட்ட போர்வீரரைப் பரிகரித்த முறையில் பெரும்புகழ் பெற்றார் (1820 - 1910)

பிசாரோ: (Pizarro) பெரு நாட்டைக் கண்டுபிடித்து அதனை 1531இல் கைப்பற்றிய இ°பானிய வீரர் (1478 - 1541)

பி°மாக்: (Bismark) செர்மனியின் மிகப்பெரிய அரசியல் நிபுணர் (1815-1898)

பீட்டர்: (Peter the Great) உருசிய சக்கரவர்த்திகளில் மிகப்புகழ்பெற்றவர்.
(1672 - 1725)

புரூ°: (Robert Bruce) ஆங்கிலரைத் துரத்தி இ°கொத்லாந்துக்கு விடுதலை யளித்த வீரர் (1272 - 1325)

மார்க்°: (Karl Marx) செர்மன் பொருளாதார நிபுணர். இவர் செர்மனி பிரான்° பெல்சியம் முதலிய நாடுகளினின்றும் துரத்தப்பட்டு இலண்டனுக்குச் சென்று முதலாளி வருக்கத்துக்கு மாறாக நூலெழுதி இக்காலப் பொது உடைமைக் கொள்கைக்கு அடிகோலியவர் (1818- 1883)

முசோலினி: 1922இல் இத்தாலிய சர்வாதிகாரியானவர். இவர் 1945இல் கொல்லப்பட்டார் (1883 - 1945)

யூலிய° சீசர்: (Julius Caesar) உரோமன் சக்கராபதிபத்தியத்தைத் தாபித்த பெரிய சர்வாதிகாரி. இவரை இவருடைய நண்பர் அரசாங்க சபையில் வைத்துக் குத்திக் கொன்றார். (கி.மு. 102 - 44).

யோன் ஓவ் ஆக்: (John of Arc) பிரெஞ்சுப் படையை ஆங்கிலருக்கு எதிராக நடத்திச் சென்று வெற்றிபெற்ற பிரெஞ்சுக் கன்னிப்பென். இவளைப் பிரெஞ்சுக்காரர் பிடித்து ஆங்கிலரிடங் கொடுத்தனர். சமயத்தை நம்பாத வள் என்னும் குற்றச்சாட்டின்மீது இவள் உயிரோடு எரிக்கப்பட்டாள். 1920 முதல் இவள் கடவுள் அடியாளாக வணங்கப்படுகிறாள் (1412 - 1431)
ஹிட்லர்: (Hitler, Adolf) செர்மன் சர்வாதிகாரி (1889 - 1945)

நாடுகள்
அசாம்: இந்தியாவின் வடகிழக்கிலுள்ளதும் இந்திய ஐக்கியத்துக்குட் பட்டதுமாகிய நாடு.
அண்டார்டிக்கா: தென் துருவத்தைச் சுற்றியுள்ள பனிக்கட்டி மூடிய பகுதி. இதன்பரப்பு ஏறக்குறைய எண்பது லட்சம் சதுரமைல். இப்பகுதிகள் முற் றாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. அண்டாக்டிக்காவின் பெரும்பகுதி. ஆ°திரேலிய கொம்மன் வெல்தின் கீழ் உள்ளது. நோர்வேயராகிய அமண்ட்சென் (Captain R. Amundsen) 1911ïல் தென் துருவத்தையடைந்து மீண்டார்.

அண்டாக்டிக் வளையம்: (Antartic Circle) தென் துருவத்திலிருந்து 23 1/2 பாகை தூரம் சுற்றியுள்ள பரப்பு. இங்கு கோடைக்காலத்தில் சூரியன் ஒருபோதும் மறைவதில்லை. ஆர்க்டிக் வட்டத்திலும் இவ்வாறிருக்கும்.

அண்டோரா: (Andora) பிரான்சுக்கும் இ°பேயினுக்குமிடையிலுள்ள பிரினீ° (Pyrenees) மலையிலிருக்கும் சிறிய குடியரசு நாடு. இதன் தலைநகரம் அண்டோரா. பரப்பு: 175 ச.மை; மக்: 5,200

அத்லாந்தி°: சிபிரால்டர் நீரிணைக்கு மேற்கே அத்லாந்திக் கடலிலிருந்த தாகக் கிரேக்கரும் உரோமரும் நம்பிவந்த பூகண்டம்.

அபிசீனியா: (Abyssinia) ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் மலை களும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளுமுள்ள நாடு. நைல் ஆறு இங்கு ஊற் றெடுக்கிறது. மத்திய வெப்ப மலை நாடுகளில் வெள்ளாடுகள் வளர்க்கப் படுகின்றன. தாழ்ந்த பள்ளத்தாக்குகளில் வெப்ப மண்டலப் பயிர்களிடப் படுகின்றன. கோப்பி, தோல் முதலியன இங்கிருந்து வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் தலைநகர் அடிசபாபா. பரப்பு: 395,000 ச.மை; மக்: 18000,000; ஆட்சி: முடியாட்சி.

அப்கானி°தான்: பாகி°தானுக்கும் உருசியாவுக்குமிடையில் ஆசியாவி லுள்ள ஒரு மலைநாடு. இங்கு பாரசீகமும் புஷ்து மொழியும் வழங்கும். புஷ்து அரசாங்க மொழியாக இருந்து வருகிறது. மலை நாட்டில் வாழும் மக்கள் மந்தை மேய்ப்பர். செழித்த பள்ளத்தாக்குகளில் வாழ்வோர் பயிரி டுவர். கைபர் கணவாயின் வாயிலில் உள்ள கபூல் இதன் தலைநகரம். பரப்பு : 245,000 ச.மை. மக்: 12,000,000; ஆட்சி அமைப்புக்குட்பட்ட முடியரசு (Constitutional Monarchy)

அமெரிக்கா: அமெரிக்கா என்னும் பெயர் அமெரிக்கோ வெ°புக்கி (Amerigo Vespucci 1451: 1512) என்னும் இத்தாலிய மாலுமியின் பின் இடப்பட்ட பெயர். வடஅமெரிக்கா ஆக்டிக் வலயத்திலிருந்து கிட்டத் தட்ட மத்திய ரேகை வரையுமுள்ளது. பரப்பு: 8,000,000 ச.மை; வட அமெரிக்காவின் பரப்பு ஏறக்குறைய 4,500,000 ச.மை.

அயர்லாந்து: பிரிட்டிஷ் தீவுகளில் ஒன்று. பரப்பு. 27,137 ச.மை. மக் : 2,989,700 ஆட்சி : குடியரசு. அயர்லாந்தின் வடபகுதி ஆங்கிலர் ஆட்சியைச் சேர்ந்தது

அயோனியா: ஆசியா மைனரின் மேற்குப்பகுதியிலுள்ள ஒரு பழைய பகுதி. 30 நூற்றாண்டுகளின் முன் இப்பகுதியில் அயோனியர் வந்து குடியேறினமையால் இப்பகுதி இப்பெயர் பெற்றது.

அரக்கன்: பர்மாவின் ஒரு மாகாணம். ப: 16,000; தலைநகர் அகர்யாபு. இங்கு வாழும் மக்களிற் பெரும்பகுதியினர் பௌத்த மதத்தினர்.

அரேபியா: பாரசீகக் குடாக்கடல் அராபிக்கடல் செங்கடல் என்பவற்றை எல்லையாகவுடைய தீபகற்பம். இதில் பல இலட்சமைல் பரப்பு வனாந்தர மாகவுள்ளது. வனாந்தரங்களில் மந்தை மேய்ப்போர் நாடோடிகளாகத் திரிவர். ப: 1,000,000 ச.மை; மக்: 10,000,000. இங்கு மிகச்செழிப்புள்ள இடம் யேமென்.

அர்த்தகோளம்: பூமியை மத்திய ரேகைக்கு நேரே குறுக்காக வெட்டினால் இரண்டு பாதிகளாகும். இவ்வாறு வெட்டியதுபோலப் பாவித்து வடக்கே உள்ள பகுதி வட அர்த்த கோளமென்றும் தெற்கே உள்ள பகுதி தென் அர்த்த கோளமென்றும் வழங்கப்படும்.

அல°கா: வடஅமெரிக்காவில் வடமேற்கு அந்தத்திலுள்ள நாடு; ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிக்குட்பட்டது. வடஅமெரிக்காவின் மிக உயர்ந்த மலைச்சிகரம் இங்குள்ளது. இதன் தலைநகரம் யுனோ (Juneau) ப: 586,400 ச.மை. மக்:205,000.

அல்சீரியா: (Algeria) வடஅமெரிக்காவில் மத்தியதரைக்கடல் ஒரமாக வுள்ளது. பிரான்சின் ஆட்சிக்குட்பட்டது. ப: 8,47,000 ச.மை. மக்: 9,530,000; தலைநகர் : அல்சியர்° (Algiers)

அல்பேனியா: அட்ரியாட்டிக் கடலின் ஒரத்திலுள்ள சிறிய மலைநாடு. ப: 10,629; மக் : 1,394,310; தலைநகர்: திரானா (Terana); ஆட்சி : குடியரசு

அன்கோலா: ஆப்பிரிக்காவில் பெல்சியன் கொங்கோவுக்குத் தெற்கிலுள்ள போர்ச்சுக்கீசியரின் நாடு. இது போர்ச்சுக்கீசிய மேற்கு ஆப்பிரிக்கா எனவும் அறியப்படும். தலைநகர் : சலோ போலோடி லொன்டோ (Sao Paulo de Loando)

ஆசியா: எல்லாக் கண்டங்களிலும் பெரியது. ப: 17,000,000 ச.மை; மக் : 1,000,000,000
ஆசியா மைனர்: மேற்கு ஆசியாவில் கருங்கடலுக்கும் மத்திய தரைக் கடலுக்கு மிடையிலுள்ள ஒரு தீபகற்பம். இப்பொழுது இது துருக்கி வசமுள்ளது. இது நாகரிகமடைந்த பழைய நாடுகளி லொன்று.

ஆப்பிரிக்கா: மூன்றாவது பெரிய கண்டம். இது ஏறக்குறைய 5,000 மைல் நீளமும் 4,000 மைல் அகலமும் (மிக அகன்ற பகுதியில்) உள்ளது. வடக் கில் மிகப்பெரிய சகாராப்பாலைவனமும் தெற்கில் காலகரி வனாந்தரமு முள்ளன. ப:1,17,10,424 ச.மை; மக்: 158,000,00. ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய பட்டினம் கெய்ரோ.

ஆர்சந்தைனா: தென்னமெரிக்காவில் இரண்டாவது பெரிய நாடு. ப: 1,112,743 ச.மை; மக்: 19,102,000; தலைநகர்:பூனோ° ஏரீ° (Buenos aires) ஆட்சி குடியரசு. இங்கு பம்பா° என்னும் புல்வெளிகளுண்டு.

ஆ°திரியா: மத்திய ஐரோப்பாவிலுள்ள நாடு. இதன் தலைநகரம் வியன்னா. ப: 34,064 ச.மை; மக்: 6,968,500.

ஆ°திரேலியா: பெரிய தீவுக்கண்டம்.ப: 2,974,581 ச.மை; மக்: 9,149,477; தலைநகர் கன்பேரா; ஆட்சி: குடியரசு.

ஆ°திரலேசியா: ஆசியாவுக்குத் தெற்கே பசிபிக் கடலிற்கிடக்கும் நிலப் பரப்பு இப்பெயர் பெறும். இதில் ஆ°திரேலியா, நியுசீலந்து, நியுகினி முதலியனவும் அடுத்துள்ள தீவுகளும் அடங்கும்.

இசிரவேல்: இ°ரேயில் என்னும் அரபுச்சொல் கடவுளுக்காகப் போர் புரிபவர் என்னும் பொருள் படும். கடவுள் இப்பெயரை யாக் கோப்புக்குக் கொடுத்தார். இவர் சந்ததியினர் இசிரவேலர் எனப்பட்டனர். இவர்களில் 10 கூட்டத்தினர் வடபால°தினத்திலும் இரண்டு கூட்டத்தினர் தென் பால°தினத்திலும் வாழ்ந்தனர். அதனால் வடபகுதி இசிரவேல் என்றும், தென்பகுதி யூதேயா என்றும் பெயர் பெற்றன. இப்பொழுது இசிரவேல் என்பது பல°தீனத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியரசின்பெயராக இருந்து வருகிறது. இதன் தலைநகர் எருசலேம். ப: 8,048 ச.மை; மக்: 1,717,834

இடென்மாக்: மேற்கு ஐரோப்பாவிலுள்ள நாடு. தலைநகர் கொபென் கேகன் (Copenhagen). கடல் கடந்த இதன் நாடுகள் கீரின்லாந்து, பாரோ° (Farues) ப: 16,575 ச.மை; மக்: 3,805,000; ஆட்சி: வரம்புடை முடியரசு.

இத்தாலி: கிரீசுக்கயலிலுள்ள ஐரோப்பிய நாடு. ப: 131,000 ச.மை; மக்: 47,515,557; தலைநகர்: உரோம். ஆட்சி; குடியரசு.

இத்தாலிய சோமாலிலந்து: கிழக்காப்பிரிகாவிலுள்ள இத்தாலிய குடியேற்ற நாடு.ப. 194,000; ச.மை; மக்; 1,300,000 தலைநகர்: மொகாடிஸ்கியா (Mogodiscio)

இந்துச்சீனம்: இதில் இலைஓ°, கம்போதியா, வியட்நாம் முதலிய பகுதிகள் அடங்கும். வியட்நாம் குடியரசில் கொச்சின் சீனம், அன்னம், தென்கின் என்னும் மூன்று பகுதிகளடங்கும். ப: 4,281,174 ச.மை; மக்: 24,461,251; தலைநகர்: ஹனோய்; ஆட்சி: பகுதி குடியரசு, பகுதி பொதுவுடைமை.

இந்தியா: ப: 1,050,000 ச.மை. மக்: 432,000,000; தலைநகர்: இடில்லி (பாகி° தான்: கராச்சி)
இந்தோனேசியா: சாவா, சுமத்திரா, மதுரா, போர்ணியோ, இடைமேரா, பப்புவா, செலிபிசி, மொலுக்க°, பாலி, பிளோரல் முதலிய சிறு தீவுக ளடங்கிய மலாய தீவுக்கூட்டம். இங்கு 95 எரிமலைகளுள்ளன. ப: 735,865 ச.மை. மக்: 80,000,000.

இராமரணை: இராமேசுவரம் முதல் மன்னார்த்தீவுவரையும் 30 மைல் தூரம் நீண்டுகிடக்கும் மண்ணும் பாறையும் சேர்ந்து கிடக்கும் திட்டு. முன் பூசந்தியாகவிருந்த இப்பகுதியில் 1480இல் உடைப்பு உண்டானதாகக் கோயில் சாசனங்களால் தெரிகிறது.
இரையோடிசெனரோ: பிரேசில் நாட்டின் ஒரு மாகாணம். இதன் தலைநகர் இரையோடிசெனரோ.

இலக்சம்பேக்: செர்மனி பெல்சியம் பிரான்° நாடுகளின் ஓரங்களிலுள்ள சிறிய சுதந்திர நாடு. ப: 999 ச.மை; மக்: 311,000; தலைநகர்: இலக்சம்பேக்.

இலத்வியா: (Latvia) வடஐரோப்பாவில் எ°தோனியாவுக்கும் இலுதுவேனி யாவுக்கும் இடையிலுள்ள குடியரசு நாடு. ப: 25,402 ச.மை; மக். 2,000,000; தலைநகர்: இறிகா (Riga)
இலபரடோர்: (Labrador) நியூபவுண்லாந்தின் ஒருபகுதி. இங்கு எ°கிமோவர் வாழ்கின்றனர்.

இலிதுவேனியா: (Lithuenia) உருசியக் குடியரசைச் சேர்ந்த சிறிய நாடு ப: 22,959 ச.மை; மக்: 2,879,070; தலைநகர்: வில்னா (Vilna).

இலிபியா: ஆப்பிரிக்காவின் வடக்குக் கரையிலுள்ள சுதந்திர நாடு. திரிப் பொலி, பென்காசி (Benghazi) என்பன இதன் ஒன்று சேர்ந்த தலைநகர். ப: 679,358; மக்: 1,091,830.

இலிச்தென்°தென்: (Liechtenstein) ஆ°தியாவுக்கும் சுவிற்சலாந்துக்கு மிடையிலுள்ள சிறிய சுதந்திர நாடு. தலைநகர்: வடு° (vaduz). ப: 65 ச.மை; மக்: 14,757.

இலைபேரியா: (Liberia) மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு நிகிரோவ குடியரசு. ப: 43,000 ச.மை; தலைநகர்: மொன்ராவியா (Monrovia).

இ°காந்திநேவியா: (Scandinavia) நார்வே சுவிடின் இடென்மார்க் முதலிய நாடுகளுக்கு இப்பெயர் வழங்கும்.

இ°கொத்லாந்து: இங்கிலாந்தின் வட பகுதி .

இ°பேயின்: தென்மேற்கு ஐரோப்பாவிலுள்ள நாடு. ப : 196,700; மக் : 29,212,631; தலைநகர்: மாட்ரிட்; ஆட்சி: குடியரசு.

இ°ரெப்: (Steppe) உருசியாவிலுள்ள அகன்ற புற் சமவெளி.

ஈராக்: தென்மேற்காசியாவிலுள்ள நாடு (பழைய மெசபெதேமியா).இங்கு செழிப்பு மிக்க எண்ணெய் வயல்களுண்டு. ப: 172,000 ச.மை; மக்: 4,948,000; ஆட்சி: வரம்புடை முடியரசு. தலைநகர்: பாக்டாட்.

உகண்டா: (Uganda) கிழக்காப்பிரிக்காவிலுள்ள பிரிட்டிஷ் பாதுகாப்பு நாடு. இதன் முக்கிய பட்டினம் கம்பாலா (Kampala). ப: 93,381 ச.மை.; மக்: 5,343,000; ஆட்சி: உடொமினிகன் குடியரசு (Dominican Republic).

உருகுவே: (Uruguay) தென்னமெரிக்காவின் தெற்கிலுள்ள நாடு. ப: 72,172 ச.மை.; மக்: 3,000,000; தலைநகர்: மொண்டிவிடியோ (Montivideo); ஆட்சி: குடியரசு.

உருசியா: ஆசியாவிலும் ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய பொதுவுடைமை நாடு ப: 8,707,870 ச.மை.; மக்: 200,200,000; தலைநகர்: மொ°கோ; ஆட்சி: குடியரசு.

உருமேனியா: (Rumania) தென் ஐரோப்பாவிலுள்ள நாடு; ப: 91;611 ச.மை.; மக்: 17,489,794; தலைநகர்: புதாபெ°டு; ஆட்சி: குடியரசு.

எகுடோர்: (Ecuador) தென்னமெரிக்காவிலுள்ள நாடு.எக்குடோர் என்பதற்கு மத்தியரேகையிலுள்ளதென்பது பொருள்.இங்கு கொதோபாக்சி (Cotopaxi)என்னும் விழி எரிமலை (19,612 அடி)உண்டு.ப:276,008 ச.மை.; மக்: 3,514,812; தலைநகர்: குட்டோ (Quito); ஆட்சி: குடியரசு.

எரித்திரியா: (Eritrea) கிழக்காபிரிக்காவில் முன் இத்தாலியைச் சேர்ந்த நாடு.ப: 45,000 ச.மை; மக்: 1,000,000; தலைநகர்: அ°மாரா.

எல் சல்வடோர்: (El Salvador) மத்திய அமெரிக்காவில் மிகச் சனத்தொகை கூடிய நாடு.ப: 13,176 ச.மை; மக்: 2,000,000; தலைநகர்: சல்வடோர்; ஆட்சி: குடியரசு.

எ°தோனியா: (Estonia) உருசிய குடியரசைச் சேர்ந்தபால்கன் நாடு.ப: 18,353 ச.மை; மக்: 1,100,000 தலைநகர்: தாலின்; (Tallinm); ஆட்சி: குடியரசு.

ஏடின்: தென்மேற்கு அராபியாவிலுள்ள பிரிட்டிசாரின் குடியேற்ற நாடும் காப்பு நாடும். இதில் பெரிம்,கமரம்,சொகற்றா என்னும் தீவுகளும் அடங்கும்.ஏடின் கடற்படைத் தளமாகவும் சூய°கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கரியும் தண்ணீரும் உணவும் கொடுக்கும் தளமாகவும் முக்கியமுடையது. ப; 75 ச.மை; மக்: 139,600. பாதுகாப்பு நாடு 112,000 சதுர மைல்.

ஏ.பீ.சி: (A.B.C.) நாடுகள் - ஆர்சண்டைனா, பிரேசில், சில்லி என்னும் மூன்று நாடுகளையும் குறிக்கும் ஆங்கிலப் பெயர்களின் முதலெழுத்துக்களாக கொண்டு அமைக்கப்பட்ட இப்பெயர் மூன்று நாடுகளையும் குறிக் கின்றது.

ஐக்கிய அமெரிக்கா: இதில் 48 நாடுகள் சேர்ந்துள்ளன. ப: 3,022,387 ச.மை; மக்: 167,181,000 (1956இல்) தலைநகர்: வாசிங்கடன்

ஐபீரியா: (Iberia) ஐரோப்பாவில் இ°பேயினும் போர்ச்சுக்கல்லும் சேர்ந் துள்ள தீபகற்பத்தின் பெயர்.

ஒண்டுரா°: (Honduras) மத்திய அமெரிக்காவிலுள்ள சுயேச்சை நாடு. ப: 43,227 ச.மை; மக்: 1,608,000; தலைநகர்: தெகுசிகல்பா (Tegucigalpa)

ஒல்லாந்து: பெல்சியத்துக்கும் செர்மனிக்கும் இடையிலுள்ள மேற்கு ஐரோப் பிய முடி ஆட்சி நாடு. இது நெதர்லாந்து எனவும் வழங்கும். இடச்சு மேற் கிந்தியத்தீவுகள், தென்னமெரிக்காவிலுள்ள இடச்சுகயனா முதலியன ஓல்லாந்தின் ஆட்சிக்குட்பட்டவை. இதன் தலைநகரம் அம்°ரடாம் : ப : 12670 ச.மை ; மக்: 10,822,000.

கங்கேரி: (Hungary) மத்திய ஐரோப்பாவிலுள்ள நாடு. பரப்பரளவு; 35,912 மக்; 9,9000,00; ஆட்சி; குடியரசு, தலைநகர் புடாபெஸ்ட்.

கம்பியா: (Gampia) மேற்கு அமெரிக்காவிலுள்ள பிரிட்டிஷ் குடியேற்ற நாடு. நாட்டுப் பெயர் கம்பியா என்னும் ஆற்றுப் பெயரினின்று வந்தது.

கனடா: பிரிட்டிஷ் கொம்மன் வெல்தைச் சேர்ந்த வடஅமெரிக்க நாடு. ப: 3,845,744 ச.மை; மக்: 15,482,000; தலைநகர்: ஒட்டாவா (Ottawa); ஆட்சி : குடியரசு.

கிட்டிய கிழக்கு: (Near East) ஆசியாவின் தென்மேற்குப்பகுதியிலுள்ள அராபியா, பாரசீகம், ஆசிய துருக்கி முதலிய நாடுகள்.

கிரீ°: ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள நாடு. ப: 51,246 ச.மை; மக் : 7,603,599; தலைநகர்; அதேன்°; ஆட்சி: வரம்புடை முடியரசு.
கெனியா: (Kenya) கிழக்காப்பிரிக்காவில் பிரிட்டிஷ் குடியேற்ற நாடும் காப்பு நாடும். ப: 224,960 ச.மை; மக் : 5,947,000; தலைநகர்: நைரோபி (Nairobi).

கொதிமலா: (Guatemala) மத்திய அமெரிக்காவிலுள்ள குடியாட்சி நாடு. ப: 42,042 ச.மை. மக்: 3,284,269 தலைநகர்: கொதிமலா

கொலம்பியா: தென்னமெரிக்காவின் வட பகுதியிலுள்ள ஒரு நாடு. ப: 439,520; ச.மை: ம: 12,657,070; தலைநகர்: பொகொத்தா (Bogota); ஆட்சி: குடியரசு

கொரியா: யப்பான் கடலுக்கும் மஞ்சட் கடலுக்குமிடையிலுள்ள குடியரசு நாடு. ப: 85,246 ச.மை; மக்: 25,000,000; வடகொரிய தலைநகர்: பிஒங் யாங் (Pyong Yang); தென்கொரிய தலைநகர்: சோல் (Seoul)

கோல் கோ°ட்: (Gold Coast) தென்னாப்பிரிக்காவிலுள்ள பிரிட்டிஷ் குடி யேற்ற நாடு. ப: 78,802 ச.மை; மக்:3,962,520; முக்கிய பட்டினம் : அக்கிரா (Accra). இது இப்பொழுது கானா(Ghana) என்னும் குடியரசு நாடாக வுள்ளது.

கோ°டா ரிக்கா: (Costa Rica) மத்திய அமெரிக்காவிலுள்ள நாடு. ப: 19,690 ச.மை; மக்: 951,000; தலைநகர் : சான்யோ° (San Jose); ஆட்சி: குடியரசு.

சாவன்னா: (Savannas) பிரயரீ°, பம்பா° போன்ற மத்திய மண்டலப் புல்வெளிகள்

சான் மரினோ: (San Marino) இத்தாலியில் அல்பைன் மலைகளிலுள்ள பழைய குடியரசு நாடு. ப:38 ச.மை; மக்:14,545

சிபிரால்டர்: மத்திய தரைக்கடல்வாயிலிலுள்ள பிரிட்டிசாரின் குடியேற்ற நாடும் கோட்டையும். சூய°கால்வாயிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல்களுக்குத் தண்ணீர் கரி உதவும் தளமாகவும் இது முதன்மை பெற்றுள்ளது. ப: 2 ச.மை; மக்: 25,000.
சியோரா லியோன்: (Sierra Leone) மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பிரிட்டிஷ் குடியேற்ற நாடு. தலைநகர்: பிறீடௌன் (Free Town)

சிரியா: (Syria) மத்தியதரைக்கடலோரத்தில் ஆசிய துருக்கியிலுள்ள நாடு. சிரியாவும், (சிரியாவும் லெபனானும் (Lebanon) சேர்ந்து) ப: 57,000 ச.மை; மக்: 3,630,000; தலைநகர்: இடம°க°; லெபனானின் தலைநகர்: பெய்ரூட் (Beirut).

சில்வி: தென்னமெரிக்காவில் பசிபிக் கடல் ஓரமாக உள்ள நாடு. மிளகாயைக் குறிக்கும் சில்லி என்பது. இந்நாடு சம்பந்தமானதாகலாம். ப: 296,717 ச.மை; மக்: 6,400,000; தலை நகர்: சந்தியாகோ; ஆட்சி: குடியரசு.

சீயம் (சையம்): தென்கிழக்காசியாவிலுள்ள நாடு. ப: 198,247; ச.மை; மக்: 19,500,000; தலைநகர்: பாங்கொக்; ஆட்சி: வரம்புடை முடியாட்சி.

சீனா: ஆசியாவிலுள்ள பெரியநாடு. ப: (ஏறக்குறைய) 4,500,000 ச.மை;
மக்: 581,709,702; தலைநகர்: பீக்கிங்; ஆட்சி : பொதுவுடைமைக் குடியரசு.

சுவிடின்: வடஐரோப்பாவிலுள்ள நாடு. ப: 173, 436 ச.மை; மக் : 7,234,664; தலைநகர் : (இ) °டொக்கோம்; ஆட்சி : வரம்புடை முடியாட்சி.

சுவிற்சலாந்து : மத்திய ஐரோப்பாவிலுள்ள மலைநாடு ப: 15,950 ச.மை. மக் : 4,877,000; ஆட்சி : குடியரசு; தலைநகர் : பெர்னி(Berne)

சூடான்: வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதிக்கு இப்பெயர் வழங்கும். பிரெஞ்சுச் சூடான் பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்காவின் பகுதியிலடங்கும். ஆங்கிலோ எகிப்திய சூடான் எகிப்துக்கும் எதியோப்பியாவுக்குமிடை யிலுள்ளது. தலைநகர் : கார்த்தூம் (Khartoum) ப: 967,500: மக்: 8,971,720

செக்கோசிலோவாகியா: மத்திய ஐரோப்பாவிலுள்ள நாடு. தலைநகர் : பிறேக் (Prague) ஆட்சி; குடியரசு. ப: 53,700 ச.மை.; மக் : 13,258,000

செல்வா°: (Selvas) பிரேசிலில் அமேசன் வடிநிலத்திலுள்ள நெருங்கிய காடுகள்.

செர்மனி: மத்திய ஐரோப்பாவிலுள்ள நாடு, ப: 180,985 ச.மைல்; மக்: (உலகப் போருக்குமுன்) 4,50,00,00; தலைநகர்: பெர்லின். ஆட்சி: குடியரசு.

சைபீரியா: உருசியக்குடியரசைச் சேர்ந்தநாடு.

தக்காணம்: இப்பெயர் இந்தியத் தீபகற்பத்தின் தெற்கிலுள்ள பீடபூமிக்கு வழங்கும் பெயர். இங்கு பஞ்சு அதிகம் விளைகிறது.

தங்கநிக்கா: பிரிட்டிஷ் கிழக்காப்பிரிக்காவின் பகுதி. ப: 362,688 ச.மை; மக்: 7,965,500; தலைநகர்: தர் எ° சலாம் (Dar es Salaam).

தாய்கா (Taiga): சைபீரியாவிலுள்ள கூம்பு வடிவான காடு.

திபெத்: தலாய்லாமாவால் ஆளப்படும் சீனாவையடுத்த மலைநாடு. தலை நகர்; இலாசா ப: 470,000 ச.மை; மக்: 3,000,000.

துண்ட்ரா: (Tundra) ஆக்டிக் அண்டாட்டிக் கடலோரங்களிலுள்ள தாவரங் களுருகிய சமவெளி.
துருக்கி: தென்மேற்கு ஐரோப்பாவிலும் தென்மேற்கு ஆசியாவிமுலுள்ள நாடு. ப: 296,185 ச.மை; மக்: 24,111,778; ஆட்சி: குடியரசு; தலைநகர்; அன்காரா (Ankara)

துனீசியா: (Tunisia) வடமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள குடியரசு நாடு. ப: 48,195 ச.மை. மக்:3,430,000 தலைநகர் துனி° (Tunis)

தென்னமெரிக்கா: 4500 மைல் நீளமும் (மிக அகன்ற பகுதியில்) 3000 மைல் அகலமுமுள்ள நாடு.

தைலந்து: சீயம் (சையம்) பார்க்க.

நிகரகுவா: (Nicaragua) மத்திய அமெரிக்காவிலுள்ள நாடு. ப: 57,143 ச.மை; மக் : 1,224,450; தலைநகர் : மனகுவா (Managua); ஆட்சி : குடியரசு.

நியாசலந்து: (Nyasaland) பிரிட்டிஷ் தென் மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள காப்பு நாடு. மக்: 2,500,000.

நேபாளம்: இமாலயத்திலுள்ள சுயேச்சை நாடு. இது கூர்க்கரின் தாய்நாடு.
ப: 54,000 ச.மை; மக்: 8,431,537; கத்மண்டு (Kathmandu.)

நைகீரியா: மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பிரிட்டிஷ் குடியேற்றநாடு.
ப; 372,250 ச.மை; மக்: 31,800,000; தலைநகர் : இலகோ° (Lagos)

நோர்வே: ஐரோப்பாவில் இ°காந்தினேவிய தீபகற்பத்திலுள்ள நாடு
ப: 124,525 ச.மை.; மக்: 3,375,000; தலைநகர்: ஓ°லோ; ஆட்சி வரம்புடைய முடியரசு
.
பம்பா°: தென்னமெரிக்காவிலுள்ள புல்வெளி.

பால°தீனம்: மத்தியதரைக்கடலை அடுத்த பகுதியிலுள்ள நாடு. இதன் ஒரு பகுதி (8,048 ச.மை.) இ°ரேயில் நாடாக்கப்பட்டுள்ளது. மற்றது யோர் தானைச் சேர்ந்தது. ப: 10,429; மக்: 1,585,500; தலைநகர் தெல்அவிவ் (Telaviv) ஆட்சி : குடியரசு.

பரகுவே: (Paraguay) தென்னமெரிக்காவிலுள்ள நாடு. ப: 174,854; ஆட்சி: குடியரசு மக் : 1,565,000; தலைநகர்: அசங்கியன் (Asuncion)

பர்மா: இந்தியாவை அடுத்துள்ள சுதந்திர நாடு. ப: 261,789; மக்: 19,242,000; தலைநகர்: இரங்கூன்.

பல்கேரியா: தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள நாடு. ப: 42,808 ச.மை; மக்: 7,450,00; தலைநகர்: சாவியா (Safia); ஆட்சி: குடியரசு.

பனாமா : மத்திய அமெரிக்காவிலுள்ள சிறிய நாடு. ப: 33,667 ச.மை.; மக் : 635,836; தலைநகர் : பனாமா; ஆட்சி : குடியரசு.

பாகிரின் : (Bahrein) பாரசீகக் குடாக்கடலிலிருக்கும் சுதந்திரநாடு. இதில் பல தீவுகளடங்கும் ப: 213 ச.மை; மக் :120,000. இங்கு மண்ணெண்ணெய் சுத்தி செய்யும் நிலையங்கள் பல உண்டு.

பாகி°தான்: இந்தியாவிலுள்ள முசிலிம் மாகாணம். இது வடக்குப் பாகி° தான் மேற்கு பாகி°தான் என இருபிரிவுகளாகும். ப: 364,737 ச.மை; மக்: 81,540,000 தலைநகர்: கராச்சி.

பாரசீகம்: (ஈரான்) தென்மேற்கு ஆசியாவிலுள்ள நாடு. ப: 628,000 ச.மை. மக்: 15,055,115; தலைநகர்: தெஃரான் (Teheran) ஆட்சி: வரம்புபடுத்திய முடியரசு.

பிரயரி: (Prairie) வட அமெரிக்காவிலுள்ள அகன்ற புல்வெளி.

பிரான்°: ஐரோப்பாவில் பிரிட்டனுக்கு அண்மையிலுள்ள நாடு. ப: 212,895 ச.மை. மக் : 3,430,000; தலைநகர் : பாரி°; ஆட்சி: குடியரசு

பிரிட்டிஷ் ஒண்டுரா° (British Honduras): மத்திய அமெரிக்காவிலுள்ள பிரிட்டிசாரின் குடியேற்ற நாடு. இது தலைநகர் பெலிசி (Belize)

பிரிட்டிஷ் கயனா (British Guiana) தென்னமெரிக்காவில் பிரிட்டிஷ் ஆட்சிக் குட்பட்ட நாடு, இதன் தலைநகரம் சோட்° டௌன்: (ழுநடிசபநவடிறn)
ப: 83,000 ச.மை; மக் : 470,000

பிரிட்டிஷ் கிழக்காபிரிக்கா: (1) கெனியா குடியேற்ற நாடும் காப்பு நாடும் (2) உகண்டா காப்பு நாடு (3) சான்சிபார் காப்பு நாடு (4) தங்கனிக்கா முதலிய நாடுகளை ஐக்கிய தேசிய சபையின் தர்மகர்த்தாவாக பிரிட்டன் ஆட்சி புரிகின்றது.

பிரிட்டிஷ் கொம்மன் வெல்த்: பிரிட்டன், கனடா, ஆ°திரேலியா, நியுசீலந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகி°தான், இலங்கை மத்திய ஆப்பிரிக்கா பெடரேசன் முதலிய நாடுகள் இதிலடங்கும்

பிரிட்டிஷ் சொமாலிலந்து: கிழக்காப்பிரிக்காவிலுள்ள பிரிட்டிஷ் காப்பு நாடு. இதன் முக்கிய நகரம் பேர்பேரா (Berbera) ப: 68,000 ச.மை மக்: 600,000.

பிரிட்டிஷ் தீவுகள்: (British Islands) இவை பிரிட்டிஷ் கொம்மன் வெல்த் சக்கராதிபத்தியத்தின் தாய்நாடுகள். இக் கூட்டத்தில் இங்கிலாந்து, அயர்லாந்து, இ°கொத்லாந்து என்னும் தீவுகளடங்கும் ப: 94,279 ச.மை; மக்: 47,888,958; தலைநகர் : இலண்டன்; ஆட்சி: வரம்புபடுத்திய முடியரசு.

பிரிட்டிஷ் தென் மத்திய ஆப்பிரிக்கா: இதில் வட உரோடேசியா, தென் உரொடேசியா, நியாசலாந்து முதலிய நாடுகளடங்கும்.

பிரேசில்: (Brazil) தென்னமெரிக்காவில் மிகப்பெரிய குடியரசு நாடு. இது ஐக்கிய அமெரிக்காவிலும் பெரியது; ஐரோப்பா அளவு நிலப்பரப் புடையது. இதன் தலைநகரம் இரையோடியெனிரோ (Rio de Janeiro) ப: 3,287,842 ச.மை; மக் : 58,456,000
பின்லாந்து: (Finland) வடஐரோப்பாவிலுள்ள நாடு. ப: 134,588 ச.மை. ம : 3,887,217 தலைநகர் : ஹெல் சிங்கி (Helsinki); ஆட்சி : முடியரசு.

பூதான்: (Buthan) கிழக்கு இமயமலைப் பகுதியிலுள்ள நாடு. இதன் தலைநகரம் பும்தாங் (Bumthang.)

பெல்சியன் கொங்கோ: தென்னமெரிக்காவிலுள்ள பெல்சிய குடியேற்ற நாடு. இதன் தலைநகர் இலியோபொல்ட் வில்லி (Leopoldville) ப : 909,654 மக்: 12,317,326
பெரு: (Peru) தென்னமெரிக்காவின் வடபகுதியிலுள்ள நாடு. ப: 487,616 ச.மை; மக் : 7,023,111; தலைநகர்: இலிமா (Lima); ஆட்சி: குடியரசு.

பெல்சியம்: ஐரோப்பாவில் மக்கள் மிக நெருக்கமாகக் குடியேறியிருக்கும் நாடு. ப: 11,755 ச.மை. மக் : 8,896,000. இதன் தலைநகர் பிரசெல்° (Brussels) ஆட்சி : வரம்பு படுத்திய முடியாட்சி.

போர்ச்சுக்கல்: தென்மேற்கு ஐரோப்பாவிலுள்ள நாடு. ப: 4,500 ச.மை. ; மக் : 8,654,436; தலைநகர் : இலி°பன்; ஆட்சி : குடியரசு.

பொல்வியா: (Bolvia) தென்னமெரிக்காவிலுள்ள நாடு. நாட்டின் பாதி அண்டீ°மலையிலுள்ளது. ப: 404,388 ச.மை; மக் : 3,990,000; தலைநகர்; இலாபா° (La Paz); ஆட்சி: குடியரசு

போலந்து: ஐரோப்பாவின் வடமத்திய பகுதியிலுள்ள நாடு. ப: 120,360 ச.மை; மக் : 27,500,000; தலைநகர் : வார்சோ (Warsaw); ஆட்சி- குடியரசு.

மலாயா பெடரசேன்: இதில் மலாயத் தீபகற்பமும் பினாங்கும் சிங்கப்பூரும் அடங்கும். தலைநகர் : கோலாலம்பூர் ப : 50,690 ச.மை; மக் : 5,900,000 ஆட்சி : குடியரசு.

மெக்சிக்கோ: ஐக்கிய அமெரிக்காவுக்குக் கீழுள்ள நாடு. ப: 60,375 ச.மை.; மக்கள் : 28,849, 465; தலைநகர் : மெக்சிக்கோ; ஆட்சி : குடியரசு.

மொசாம்பிக்: (Mozambique) கிழக்காப்பிரிக்காவிலுள்ள போர்ச்சுக்கீசிய குடியேற்றநாடு. இது போர்ச்சுக்கீசிய கிழக்காப்பிரிக்கா எனப்படுவது முண்டு. தலைநகர் : உலோன்ரன்கோ மார்குவி° (Louerenco Marques).

மொராக்கோ: வடமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நாடு. ப : 173,150 ச.மை; தலைநகர் : இராபாட் (Rabat); மக் : 9,252,000; இது அண்மையில் பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது.

மொனாகோ: (Monaco) மத்தியதரைக் கடற்கரையிலுள்ள சிறிய முடி ஆட்சி நாடு. ப : 360 ஏக்கர்; மக்: 2,200 தலைநகர்: மொனாகோ.

யுக்கோசிலேவியா: தென் ஐரோப்பிய நாடு. ப: 95,588 ச.மை, மக்: 16,200,000; தலைநகர்: பெல்கிரேட் (Belgrade). ஆட்சி: குடியரசு.

யோர்தான் (Jordan) மத்திய கிழக்கிலுள்ள முடி ஆட்சி நாடு. இதில் அராபிய பால°தீனமும் சேர்ந்துள்ளது. தலைநகர்: அம்மன் (Amman). ப. 37,700 ச.மை; மக்: 866,080

வடஉரொடேசியா: தென்மத்திய ஆபிரிக்காவில் பிரிட்டிஷ் கொம்மன் வெல்தைச் சேர்ந்த நாடு. இதன் தலைநகர் உலூசாக்கா (Lusaka).

வத்திக்கான்: உரோமிலுள்ள போப்பின் ஆட்சிக்குட்பட்ட நாடு ப: 0.16 ச.மை; (1087 ஏக்கர்) மக்: 1025; ஆட்சி: போப் ஆட்சி; இது உரோமன் கத்தோலிக்க கோயில்களுக்குத் தலைமையிடம்.

வெனிசுவெலா: (Venezuela) தென்னாப்பிரிக்காவின் வடபகுதியிலுள்ள நாடு. ப: 352,051 ச.மை; மக்: 5,858,000; தலைநகர்: கரகா° (Caracas); ஆட்சி: குடியரசு.

பட்டினங்கள்
அசங்கியன்: (Asuncion) பரகுவேயின் தலைநகர். பரகுவே தென்னமெரிக்கா விலுள்ள குடியரசு; ஆர்சந்ததைனாவுக்குக் கிழக்கிலுள்ளது.

அடிசபாபா: (Addis ababa): எதியோப்பியாவின் (அபிசீனியா) தலைநகர். இதன் சனத்தொகை பத்துலட்சமளவில்.

அதேன்சு: கிரீசின் தலைநகர்; பழங்கால அழிபாடுகளுக்குப் பேர்போனது.

அமராவதி: கிருட்டிணா நதிக்கரையிலுள்ளதும் பழையசிற்பங்களுக்குப் பேர் போனதுமாகிய நகரம். இது சாதவாகனரின் கிழக்குத் தலைநகராக விருந்தது. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் சலவைக் கல்லாற் கட்டப்பட்ட பௌத்த தூபி ஒன்று இங்கு காணப்படுகின்றது. புத்தரின் நினைவுப் பொருள் மீது எடுக்கப்பட்ட இத்தூபியில் கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை பல சிற்பவேலைகள் செய்யப்பட்டன. அமராவதி சிறந்த இந்தியச் சிற்பங்களுக்குப் பேர்போனது. இப்பொழுது அவ்விடம் சிறந்த சிவன் கோயிலாக விளக்குகின்றது.

அம்மான்: யோர்தானின் (Jordan) தலைநகர்.

அம்°ரடாம்: ஒல்லாந்தின் தலைநகர்.

அனுராதபுரம்: இலங்கையில் கொழும்புக்கு வடக்கே 126 மைல் தொலைவி லுள்ள பழங்காலத் தலைநகர். பாண்டுக்கபயனால் கட்டப்பட்டது. இது 11ஆம் நூற்றாண்டுவரையில் தலைநகராக விருந்தது.

அன்கார: துருக்கியின் தலைநகர்; ஆகிய துருக்கியிலுள்ளது.

இடாம°க°: (Damascus) சிரியா நாட்டின் தலைநகர்.இது உலகில் மிகப் பழைய நகர் எனக்கருதப்படும்.

இடில்லி: இந்தியக் குடியரசின் தலைநகர். அரசாங்கக் கட்டடங்கள் புதுஇடில்லி யிலுள்ளன.

இரெக்யாவிக்: ஐ°லாந்தின் தலைநகர்.

இலண்டன்: கிரேட் பிரிட்டனின் தலைநகர். இது உலகில் மிகப்பெரிய பட்டினம்; சனத்தொகை 8,250,000.

இலாசா: (Llasa) திபெத்தின் தலைநகர்.

இலிமா: (Lima) பெரு நாட்டின் தலைநகர்.

இலி°பன்: (Lisbon) போர்ச்சுக்கலின் தலைநகர்.

இ°தான்புல்: கி.பி.330-இல் கொன்°தாந்தின் என்னும் உரோமானிய சக்கவரத்தியால் கட்டப்பட்ட நகரம். இது 7ஆம் நூற்றாண்டு முதல் பிசாந் தியம் எனப்பட்டது. 1929இல் இது இஸ்தான்புல் எனப்பட்டது. இது துருக்கியின் தலைநகராக விருந்தது. 1923இல் தலைநகர் அங்காராவுக்கு மாற்றப்பட்டது.

உரோம்: இத்தாலியின் தலைநகர்.

எடின்பேக்: (Edinburgh) இ°கொத்லாந்தின் தலைநகர்.

எருசலேம்: பால°தீன் நாட்டின் தலைநகர்.

எல்சிங்கி: (Helsinki) பின்லாந்தின் தலைநகரும் துறைமுகமும்.

ஒற்றவா: (Ottawa)-கனடாவின் தலைநகர்.

ஓ°லோ: (Oslo) நார்வேயின் தலைநகர்.

கபூல்: அப்கானி°தானத்தின் தலைநகர்.

கரகா°: (Caracas)-வெனுசுவெலாவின் (Venezuela) தலைநகர்.

கராச்சி: பாகி°தானின் தலைநகர்.

கன்பேரா: (Canberra) ஆ°திரேலியாவின் தலைநகர்.

குயிட்டோ: (Quito) எக்குடோரின் தலைநகர்.

கெய்ரோ: எகிப்தின் தலைநகர், ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய பட்டினம்.

கேக்: (Hague) ஒல்லாந்திலுள்ள மிகப்பெரிய பட்டினம். இங்கு உலகக் கோர்ட் (International Court) உள்ளது.

கொப்பென்கேகன்: (Copenhagen) இடென்மாக்கின் தலைநகர்.

சந்தியாகோ: (Santigo) சில்லி நாட்டின் தலைநகர்.

சான் சல்வான்டர்: (San Salvandor) எல்சல் வான்டரின் தலைநகர்.

தெஃரான்: (Thehran) பாரசீகத்தின் தலைநகர்.

தொக்கியோ: யப்பானின் தலைநகர்.

நியுயோக்: ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பெரிய நகர்.

பாக்டாட்: ஈராக்கின் தலைநகர் .

பாங்கொக்: சீயத்தின் தலைநகர்.

பாரி°: பிரான்சின் தலைநகர்.

பிரசெல்°: பெல்சியத்தின் தலைநகர்.

பிறேக்: (Prague) செக்கோசிலோவகியாவின் தலைநகர்.

பீக்கிங்: சீனாவின் தலைநகர்.

புச்சாரெ°ட்: (Buch Arest) உருமோனியாவின் தலைநகர்.

புனோ° ஏரீ°: (Buenosaires) ஆசன்தைனாவின் தலைநகர்.

பெல்பா°ட்: (Belfast) வடக்கு அயர்லாந்தின் தலைநகர்.

பேர்லின்: (Berlin) செர்மனியின் தலைநகர்.

பொகொதா: (Bogota) கெலம்பியா நாட்டின் தலைநகர்.

மாட்ரிட்: இ°பெயின் நாட்டின் தலைநகர்.

மொ°கோ: உருசிய நாட்டின் தலைநகர்.

யக்கர்தா: (Djakarta) இந்தோனேசியாவின் தலைநகர்.

வாசிங்டன்: ஐக்கிய அமெரிக்காவின் தலைநகர்.

வீயன்னா: ஆ°திரியாவின் தலைநகர்.

வெலிங்டன்: (Wellington) நியுசீலந்தின் தலைநகர்.

தீவுகள்
அசோர்°: (Azores) அத்லாந்திக் கடலிலுள்ள போர்ச்சுக்கீசியருக்குச் சொந்தமான தீவு கூட்டம்.
அட்மிரால்டித் தீவுகள்: நியுகினித் தீவின் வடக்கேயுள்ள பி°மாக் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த தீவுகள்; ப: 800 ச.மை; மக்: 13,607; இவை ஆ°திரேலியாவின் ஆட்சிக்குட்பட்டவை.
அந்தமான் தீவுகள்: வங்காளக்குடாக் கடலிலுள்ள தீவுகள். இக் கூட்டத்தில் 204 தீவுகளுள்ளன. பரப்பு: 3,143 ச.மை; தலைநகர்: போட்பிளேர் (Port Blair) இது இந்தியக் குடியரசின் கீழுள்ளது.

அமீன் தீவுகள்: இலட்சத் தீவுகளில் வடக்குத் தொகுதியைச் சேர்ந்த ஐந்து தீவுகள். கொங்கணக் கடற்கரையிலிருந்து 200 மைல் மேற்கே உள்ளவை.

அயோனியத் தீவுகள்: அல்பேனிய நாடுகளின் மேற்குக் கரையை அடுத் துள்ள ஏழு பெருந் தீவுகளும் பல சிறு தீவுகளுமடங்கிய கூட்டம்; கிரீசு நாட்டைச் சேர்ந்தவை. ப:725 ச.மை.

அலூசியன் தீவுகள்: (Aleutian Islands) அல°காக் கரையிலிருந்து வட பசிபிக்குக் கடலுக்குட் செல்லும் தீவுத் தொடர்கள். ஐக்கிய அமெரிக் காவைச் சேர்ந்தவை.

ஆ°திரேலியா: பெரிய தீவுக்கண்டம். தலைநகர்: கன்பேரா; ப:2,974,581 ச.மை; மக்: 9,149,477; ஆட்சி: குடியரசு.

இலங்கை: பிரிட்டிஷ் கொம்மன் வெல்துக்குட்பட்ட தீவு. தலைநகர்: கொழும்பு.

இலீவாட்: (Leeward) தீவுகள்: மேற்கிந்தியத் தீவுகளிலுள்ள ஒரு கூட்டம்; பிரிட்டிசாரைச் சேர்ந்தவை. தலைநகர்: செயிண்ட் யோன்°.

எல்பா: மத்திய தரைக் கடலிலுள்ள மலைப் பாங்கான தீவு. ப: 140 ச.மை; தலைநகர்: போட்டோபெராயோ.

ஐசியன் தீவுகள்: மத்திய தரைக் கடலை அடுத்த தீவுகள். ப: 1,035 ச.மை; தலைநகர்: உரோட்° (Rhodes); மக்: 140,848.

கயித்தி: (Haiti)-மேற்கிந்திய தீவுக் கூட்டத்திலுள்ள நிகிரோக்களின் தீவு. தலைநகர்: போட்டோ பிரின்° (Port-au-Prince) இங்கு பிரெஞ்ச அரசாங்க மொழியாகவுள்ளது.

கியூபா: மேற்கிந்தியத் தீவுகளில் மிகப்பெரியது. ப: 44,164 ச.மை; மக்: 4,777,284; தலைநகர்: காவனா (Havana); ஆட்சி:குடியரசு.

கிரீன்லாந்து: வடகனடாவுக்கு வடக்கிலுள்ள இடானிய (Danish)குடியேற்றத் தீவு. பெரும்பகுதி பனிக்கட்டியால் மூடப்பட்டடுள்ளது. இங்கு எ°கி மோவர் வாழ்கின்றனர். ப: 840,000 ச.மை; மக்: 25,000; தலைநகர்: கொட்தாப் (Godthaab.)

கில்பெட் எலி° தீவுகள்: (Gillbert and Ellice Islands) பிரிட்டிசாரைச் சேர்ந்த பசிபிக் கடல் தீவுகள்.
கிழக்கிந்தியத் தீவுகள்: மலாயா முதல் போர்னியோ வரையிலுள்ள தீவுகள்.

கொங்கொங்: (Hongkong) தென் சீனாவில் காண்டன் முகத்துவாரத்திலுள்ள பிரிட்டிஷ் தீவுகள். ப: 32 ச.மை. கொங்கொங் என்பதில் கௌலூன் (Kawlon) என்பதும் அடங்கும் கௌலூன் உட்பட பரப்பு: 391 ச.மை.; மக்: 1,071,893.

கொன்சியு: (Honshiu) யப்பாடன் தீவுகளுட் பெரிய தீவு. இதில் யப்பானின் தலைநகராகிய தோக்கியோவுள்ளது.

சரவாக்: போர்னியோத் தீவைச் சேர்ந்த தீவு. ப: 47,000 ச.மை.; மக்: 613,879; தலைநகர்: குச்சிங் (Kuching) ஆட்சி: பிரிட்டிஷ்.

சவுத் ஐலண்ட்: (South Island) நியூசிலாந்தைச் சேர்ந்த தீவுகளுட் பெரியது; பிசிபிக் கடலிலுள்ளது.

சனால் தீவுகள்: இங்கிலிஷ் கால்வாயிலுள்ள தீவுகள். இவை பிரிட்டனைச் சேர்ந்தவை.

சிங்கப்பூர்: மலாயா தீபகற்பத்தின் இறுதியிலுள்ள பிரிட்டிஷ் குடியேற்றத் தீவு. கிறி°ம° தீவு. கொக°கீலிங் தீவுகள் (Cocos Keeling) தீவுகள் உட்பட ப: 217 ச.மை.

சுமத்திரா: கிழக்கிந்தியத் தீவுகளில் போர்னியோவுக்கு அடுத்தபடியில் பெரிய தீவு. தலைநகர்: படாங் (Padang).

செசெலீ° (Seychelles): இந்தியக் கடலிலுள்ள பிரிட்டிஷ் குடியேற்றத் தீவுக் கூட்டம்.

செலிபீ° (Celebes): இந்தியக்கடலிலுள்ள தீவு. தலைநகர்: மக்கசார் (Macassar).

சைப்பிர°: மத்திய தரைக் கடலிலுள்ள பிரிட்டிசாரின் தீவு. ப: 3,584; மக்: 348,000 தலைநகர்: நிக்கோசியா.

த°மோனியா: ஆ°திரேலியாவைச் சேர்ந்த தீவு. தலைநகர்: ஹோபாட் (Hobart).

திரினிடாட்: (Trinidad) மேற்கிந்தியத் தீவுகளிலுள்ள பிரிட்டிஷாரின் குடியேற்றத் தீவு. தலைநகர்: போட் அவ்-இ°பெயின் (Port of Spain)

நிக்கோபார் தீவுகள்: வங்காளக் குடாக்கடலிலுள்ள தீவுகள். இந்தியக் குடியரசைச் சேர்ந்தவை.

நியுகினி: (New Guinea) ஆ°திரேலியாவுக்கு வடக்கே பசிபிக் கடலிலுள்ள பெரிய தீவு. தென்மேற்குப் பகுதி ஒல்லாந்துக்கும் கிழக்கு ஆ°திரேலி யாவுக்கு முரியவை.

நியூசீலந்து: தென் பசிபிக்கடலில் ஆ°திரேலியாவிலிருந்து 1,200 மைல் தூரத்திலுள்ள தீவு. இதனைச் சேர்ந்த பல தீவுகளுண்டு. இங்குள்ள உயர்ந்த மலை குக்மலை (12,349 அடி உயரம்) நியூசீலந்து மக்கள் மயோரியர் எனப்படுவர். இது பிரிட்டிஷ் கொம்மன் வெல்துக்குப்பட்ட சுய ஆட்சி நாடு. ப: 103,939 ச.மை; மக்: 2,153,356; தலைநகர்: வெலிங்டன் (Wellington.)

நியுபவுண்லந்து: கனடாவுக்கு வடக்கிலுள்ள கனடாவைச் சேர்ந்த தீவு.
ப: 42,734 ச.மை.; மக் : 300,000; தலைநகர் : செயின்ட் யோன்° (St.John’s.)

பஃறெயின்: (Bahrain) பாரசீகக் கடலிலுள்ள தீவு. தலைநகர்: மானமா (Mana-meh).இது சுயேச்சை நாடு.

பகமா°: (Bahamas) புளோரிடாக் கரைக்குத் தென்கிழக்கிலுள்ள ஒரு கூட்டத் தீவுகள். பிரிட்டிசாரைச் சேர்ந்தவை. தலைநகர்: நாசோ (Nassau).

பவழத் திட்டுகள்: (Atoll) பசிபிக் கடலில் காணப்படும் வட்ட வடிவமான பவழப் பாறைத் திட்டுகள்.

பப்பின் லாந்து: (Bufffin Land) கனடாவுக்கு வடக்கே ஆக்டிக் கடலிலுள்ள பெரிய தீவு. இங்கு எ°கிமோவர் வாழ்வர், இது கனடாவைச் சேர்ந்தது.

பார்மோசா: (Formosa) சீனாவுக்குப் பக்கத்திலுள்ள தீவு ப: 13,890 ச.மை.; மக்: 7,591,298. முக்கிய பட்டினங்கள்: தைனான் (Tainan), தைபேய் (Taipei).

பிசித் தீவுகள்: பசிபிக் கடலிலுள்ள பிரிட்டிசாரின் குடியேற்றத் தீவுகள்; தலைநகர்: சுவா (Suva).

பிரிட்டிஷ் தீவுகள்: (British Islands) இது பிரிட்டிஷ் கொம்மன் வெல்த் சக்கராதிபத்யத்தின் தாயகம். இக் கூட்டத்தில் இங்கிலாந்து அயர்லாந்து, இ°கொத்லாந்து என்னும் தீவுகளடங்கும். ப: 94,279 ச.மை; மக்: 47,888,958; தலைநகர்: இலண்டன்; ஆட்சி: வரம்புபடுத்திய முடியாட்சி.

பிலிப்பைன் தீவுகள்: பிசிபிக் கடலிலிருக்கும் தீவுக் கூட்டம், இதில் 7,089 தீவுகளுண்டு. ப: 4,830 ச.மை.; மக்: 21,039,000; தலைநகர்: மனிலா; ஆட்சி: குடியாட்சி.

போர்ணியோ: மலாய தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த பெரிய தீவு. இதன் பெரும் பகுதி இந்தோனேசிய குடியரசையும் வடபகுதி பிரிட்டிசாரையும் சேர்ந்தவை.

மால்டா: (Malta) மத்தியதரைக் கடலிலுள்ள தீவு. பிரிட்டிசாரைச் சேர்ந்தது. ப: 1218 ச.மை.; மக்: 315,952; தலைநகர்; வலெட்டா (Valletta).

மாலைதீவு: இலங்கைக்குத் தென்மேற்கில் 400 மைல் தூரத்திலுள்ள தீவுகள். ப: 115 ச.மை.; மக்: 80,000க்கு மேல்.

மொரிச°: இந்தியக் கடலிலுள்ள தீவு. இதன் தலைநகர் போட் லூயீ°.

யமிக்கா: (Jamica) மேற்கிந்தியத் தீவுகளிலுள்ள மிகப்பெரிய தீவு. பிரிட்டி சாரைச் சேர்ந்தது. ப: 4,411 ச.மை.; ம: 1,503,047. தலைநகர்: கிங்°டன் (Kingston).

யாவா: இந்தோனேசியாவைச் சேர்ந்த தீவு.

வாக்லண்ட தீவுகள்: (Falkland Island) தென் அத்லாந்திக் கடலிலுள்ள தீவுகள்; பிரிட்டிசாரைச் சேர்ந்தவை. இவற்றின் முக்கிய பட்டினம் இ°டான்லி (Port Stanley) ப: 4,618 ச.மை.; மக்: 2,793.
வின்ட்வாட் (Windward) தீவுகள்: மேற்கிந்தியத் தீவுகளில் ஒரு கூட்டத் தீவுகள், பிரிட்டிசாரைச் சேர்ந்தவை.

புல்வெளிகள், காடுகள்
இலனோ°: (Llanos) தென்னமெரிக்காவின் வடபகுதியிலுள்ள புல் வெளிகள்.

இ°ரெப்: (Steppe) உருசியாவிலுள்ள அகன்ற புல்வெளி.

சாவன்னா: (Savannas) பிரயாரீ°, பம்பா° போன்ற மத்திய மண்டலப் புல்வெளிகள்.

செல்வா°: (Selvas) பிரேசில் அமேசன் வடிநிலத்திலுள்ள நெருங்கிய காடுகள்.

பம்பா°: தென்னமெரிக்காவிலுள்ள புல்வெளி.

பிரயரி: (Prairie) வட அமெரிக்காவிலுள்ள அகன்ற புல்வெளி.

வெல்ட்: (Veldt) தென்னாப்பிக்காவிலுள்ள உயர்ந்த புல்வெளி.

தாவரங்கள்

அகில்: இது அகர் எனவும் படும். இது இந்தியாவின் வடகிழக்குப் பாகங் களில் காடுகளில் வளர்கிறது. இது 60-70 அடி உயரமும் 5-8 அடிச் சுற்றள வும் உள்ளதாக வளரும். இதில் வயிரமாகிய கறுப்புப் பகுதியே அகிற் கட்டை எனப்படுகிறது. இக்கட்டை வாசமூட்டுவதற்காக எரிக்கப்படு கிறது. இதிலிருந்து வாசணை எண்ணெய்
எடுப்பதுமுண்டு.

அதிமதுரம்: வட அமெரிக்காவிலும் மத்தியதரைக் கடலோரங்களிலும் பயிரிடப்படும். அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த செடியின் வேரும், அதிலிருந்தெடுக்கும் சத்தும் அதிமதுரமெனப்படும். வேரை இடித்து நீரில் கொதிக்க வைத்த கியாளத்தை சுண்ட வைத்தால் கருநிறமான அதி மதுரங் கிடைக்கும். அது அதிமதுரப்பால் எனப்படும். குன்றிமணி வேரும் அதிமதுரம் எனப்படுகிறது. இதிலும் ஐரோப்பிய அதிமதுரத்தி லுள்ள சத்துக்களுண்டு.அதிமதுரம் இருமலுக்கு நல்ல மருந்து.

அப்பிள்: இது சீமை இலந்தைப்பழம் எனப்படும். அப்பிளில் 7,000 வகை களுண்டு. இவற்றுள், 36வகைளே பெரிதும் பயிரிடப்படுகிறன. வேரி லிருந்து உண்டாகும் செடிகளை நல்ல இனச் செடிகளில் ஒட்டி, ஒட்டுக் கன்றுகளாக அப்பிள் செடி பயிரிடப்படுகிறது.

அல்கே: (Algae) இது தாவர இனங்களில் மிகக் கீழானதும் கண்ணுக்குப் புலப்படாததும். இது நல்ல நீரிலும் உப்பு நீரிலும் மிதந்துகொண்டு திரியும். இவற்றுக்குப் பூவோ, வேரோ, இலையோ இல்லை. சில சமயங் களில் இவை குளத்து நீரில் பச்சை நிறமாக மூடியிருக்கும். இவை பல சேர்ந்து நெருங்கி வாழ்தலின் கண்ணுக்குத் தெரிகின்றன. இவை நீரில் திரியும் சிறிய உயிர்களுக்கு உணவாகும்.

அவுரி: இது 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நீலச்சாயம் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. நிலக்கரித் தாரிலிருந்து செயற்கைச் சாயம் செய்ய அறியப்பட்டபின் அவுரியிலிருந்து நீலச்சாயம் எடுப்பது நின்றுவிட்டது.

அன்னாசி: இது பெருநாட்டுச் செடி. பெரு மொழியில் இதற்கு “நாநா°” என்பது பெயர். அன்னாசியின் காய் உண்மையில் அதன் பூவாகும். இது 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. இது இப் பொழுது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கனரித்தீவுகள், இலங்கை, மலாய்த் தீவுகள் முதலிய இடங்களிற் பயிரிடப்படுகிறது.

ஆளிச்செடி: (Flax) சணல் வகையிலொன்று. இது இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. ஆளி நாரிலிருந்து ஆடைகள் நெய்யப்படுகின்றன. இதன் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இவ்வெண்ணெயிலிருந்து மெருகெண்ணெய்களும், வர்ணங்களும் செய்யப்படுகின்றன.

இலவு: இந்தியா, இலங்கை, பர்மா, யாவா முதலிய நாடுகளில் பயிரிடப்படு கிறது. காயிலிருந்து பஞ்சு கிடைக்கிறது. விதையிலிருந்து எண்ணெ யெடுக்கப்படுகிறது. முள்ளிலவின் பூ சிவப்பாகவும், முள்ளில்லாத இலவின்பூ வெண்மையாகவுமிருக்கும்.

இலை உதிராத் தாவரங்கள்: மரங்களும் செடிகளும் குறித்த பருவ காலத்தில் இலைகளை உதிர்திதுவிடுகின்றன.சில இவ்வாறு செய்வதில்லை. அவற்றின் இலைகள் சில ஆண்டுகளுக்குப் பின்பே ஒன்று இரண்டாக உதிர்கின்றன. அவ்வாறு உதிர்வதை நாம் அறியாமலிருக்கும் அவ் வகைத் தாவரங்கள் இலை உதிராத் தாவரங்கள் எனப்படும்.

இலைக்கன் (Lichen): இது பூஞ்சணமும் அல்கா என்னும் நுண்ணிய கடல் தாவரமும் ஒன்று சேர்ந்து வாழும் கூட்டுத்தாவரம். இலைக்கன் வெறும் நிலம், பாறைகள் மரப்பட்டைகளில் வளரும். இத் தாவரத்திலிருந்து இரசாயனத்தில் பயன்படும் இலித்ம° (Litmus) என்னும் சாயம் எடுக்கப் படுகிறது.

ஈரப்பலா: இது ஆசினி எனவும் படும். ஒரே மரத்தில் ஆண்பூ மஞ்சரி, பெண்பூ மஞ்சரி என இரண்டும் காணப்படும். காய்போலப் காணப்படு வது பூமஞ்சரி. ஆண்பூ மஞ்சரியைப் போலத் தொங்கும். சில நாட்களில் உதிர்ந்துவிடும் வேரில் நின்று முளைக்கும் கன்றுகளிலிருந்து இது உண்டாக்கப்படுகிறது.

ஈ°ட் (Yeast): பூஞ்சணம் வகையைச் சேர்ந்தது. இது காயப்பட்ட பழங்களின் தோலிற் காணப்படுவது. மனிதன் இதனைப் பழங்காலம் முதல் மது வகைகளைச் செய்யப் பயன்படுத்தி வருகிறான். இது பீயர் என்னும் குடி வகை செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ஈ°ட் சக்கரையை நொதிக்கச் செய்து அல்கஹாலை உண்டாக்குகிறது.

உருத்திராக்கம்: தெற்கு, கிழக்கு ஆசியாவிலிருந்து மலாயா வழியாக ஆ°திரேலியா, பசிபிக் தீவுகள்வரையில் பரவியுள்ள ஒருவகை மரத்தின் விதை.

உருளைக்கிழங்கு: இது தென்னமெரிக்காவுக்குரிய ஒரு செடியின் கிழங்கு. இது இப்பொழுது உலகின் பல பாகங்களிற் பயிரிடப்படுகிறது. இ° பானியர் இதனை முதன் முதல் 1570-ல் தமது நாட்டுக்குக் கொண்டு சென்று பயிரிட்டனர். அங்கிருந்தும் இது மற்றைய நாடுகளுக்குப் பரவிற்று. 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்ச்சுக்கீசியர் இதனை இந்தியாவுக்குக் கொண்டு சென்றனர். கிழங்கில் கண்கள் போன்ற பகுதிகள் காணப்படும். அவற்றை வெட்டி நிலத்தில் ஊன்றினால், அவற்றினின்று செடிகள் முளைக்கும். இதில் 4/5 பகுதி நீர். மீதியில் 80 பகுதிமாவும், 5 பகுதி சர்க்கரை சிறிது புரோட்டீன் முதலியன உண்டு. இதில் கொழுப்பு இல்லை. வைட்டமின் C, வைட்டமின் b உண்டு. தக்காளியும் உருளைக்கிழங்கும் ஒரு இனச்செடிகள்.

எண்ணெய்ப் பனை: தென்னையைப் போன்ற ஒரு வகை மரம்; மேற்கு ஆப்பிரிக்கா, மலாய்த் தீவுக் கூட்டங்கள், சண்டாத் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகளில் வளர்வது. இதன் காய் பேரீச்சங்காய்ப் பருமையுடையது. இதன் விதைகள், மட்டைகள், கனிகளிலிருந்து எண்ணெயெடுக்கப் படுகிறது.

ஏலம்: வாழை, மஞ்சள், இஞ்சி, ஏலம் முதலியன ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை. ஏலச் செடிகளுக்குக் கிழங்குண்டு. அடியிலிருந்து வரும் மட்டங்களிலிருந்து புதிய செடிகள் வளரும். செடிகளின் அடிப் பாகத்தி னின்றும் பூங்கொத்துக்கள் உண்டாகும். இக் கொத்துக்களில் காய்கள் தோன்றும். மலையாளம், மைசூர், இலங்கை, யாவா முதலிய நாடுகளில் இது பயிரிடப்படுகிறது. இது மலைகளில் தானாக வளர்வதுமுண்டு.

ஓட்°: (Oats) தானிய வகைகளிலொன்று; சைபீரியா, உருசியா, இ°கொத் லாந்து, அல°கா, இந்தியா முதலிய நாடுகளில் பயிரிடப் படுகிறது. இது 4 அடி உயரம் வளரும். இதில் ஏறக்குறைய 70 இனங்களுண்டு. இந்தியா வில் 14 இனங்கள் உண்டு. மஞ்சள், வெள்ளை, சிவப்பு, கருமை, ஊதா, சாம்பல், முதலிய நிறத் தானியங்களுண்டு.

கறுவாப்பட்டை: இது கறுவாச் செடியின் பட்டை. தென்னிந்தியாவின் மேற்குக் கரை, இலங்கை, சாவா, மேற்கிந்தியத் தீவுகள், பிரேசில், எகிப்து முதலிய நாடுகளில் கறுவா பயிரிடப்படுகின்றது. இலங்கையிலுண்டா வதே உயர்ந்த சரக்கு. இப்பட்டையை இடித்துக் கடல் நீரில் ஊறவிட்டு வாலையில் வடித்துக் கறுவாத் தைலம் எடுக்கப்படுகிறது. இது தமாலம் (காசியா) என்னும் பெரிய இலவங்கப் பட்டையை விட உயர்ந்தது. பெரிய இலவங்க மரம் (கறுவாவில் இன்னொரு வகை) இமயமலைப் பகுதிகளில் வளர்கிறது. இதன் இலை இலவங்க பத்திரி எனப்படும்.

காளான்: பச்சையமும் இலையுமில்லாத் தாவரம். இது அழுகிப் போன தாவரங்கள் அல்லது விலங்குகளின் எச்சங்கள் மீது முளைக்கின்றது. காளானின் குடைக்குக் கீழ் அளவில்லாத விதைத் தூள்கள் இருக்கின் றன. இவை காற்றோடு பறந்து செல்கின்றன.
கிடை: (Cork) இது மத்தியதரைக் கடலை அடுத்துள்ள நாடுகளில் வளரும் ஒரு வகை மரத்தின் பட்டை. மரத்தில் காயம்படாமல் ஒரு முறை பட்டையை உரித்துவிட்டால் மறுபடியும் பட்டை வளர்கிறது. இப் பட்டையிலிருந்து. புட்டிகளை அடைக்கும் மூடிகள் (தக்கைகள்) செய்யப்படுகின்றன.

சந்தன மரம்: இது தென்னிந்தியாவில் மைசூர், குடகு, கோயம்புத்தூர், சேலம், வேலூர், ஆகிய பகுதிகளில் மாத்திரம் வளரும் மரம்.சந்தனக் கட்டையி லிருந்து எண்ணெய் வாலையில் வடித்து எடுக்கப்படுகிறது. சந்தன எண்ணெய் வாசணைப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

சாம்பிராணி: சுமத்திராவிலும் சாவாவிலும் வளரும் ஒரு வகை மரத்தின் பிசின் (Gum**enzoin) சாம்பிராணி எனப்படும். இதன் பட்டையைத் துளைத்தால் வெண்மையான பால் வெளிப்பட்டு இறுகிப் பிசினாகிறது. இது தூபப் பொருளாகப் பயன்படுகிறது. இதன் புகை ஒரளவு நஞ்சு கொல்லித் தன்மையுள்ளது.

சீமை அத்தி: இது சிறந்த பழ வகைகளுள் ஒன்று; மேற்கு ஆசியாவிலும் தென் ஐரோப்பாவிலுமுள்ள மக்களுக்கு ஒரு முக்கிய உணவுப் பொருள். இது பச்சையாகவும், வற்றலாகவும் வேறு வகையாகப் பக்குவஞ் செய்தும் உண்ணப்படுகிறது.

சீனப்புல்: இராமி (Rami) எனவும் பெயர் பெறும். பல நூற்றாண்டுகளாகச் சீனாவில் பயிராகி வந்த இச்செடி இப் பொழுது பர்மோசா, யப்பன், பிலிப்பைன் தீவுகளில் பயிரிடப்படுகிறது. இதன் தும்புகள் ஏறக்குறைய ஓரடி நீளமுள்ளன. இராமி இழைகளிலிருந்து வாயுவிளக்கு எரி வலைகள் (Mantle) காகிதம் கித்தானாடை, கயிறு முதலியன செய்யப் படுகிறது.

பீட்(Beet): ஐரோப்பாவில் சீனி செய்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஒருவகைக் கிழங்கு வகை.முள்ளங்கி போன்றது.

பூச்சி தின்னுந் தாவரங்கள்: சில தாவரங்களின் இலைகளும் வேறு உறுப்பு களும் பூச்சிகளைப் பிடிப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. தாவரத்தி னின்றும் வெளிவரும் ஒரு வகைச்சாறு பூச்சியை மெதுவாக்கிக் கரையச் செய்கிறது. தாவரம் அதன் சாற்றை இழுத்துக் கொள்கிறது.

பெரணி: (Fern) பூவாத தாவர வகை. இலையின் பின்புறத்தில் விதைகள் தோன்றி நிலத்தில் விழுந்து இதயவடிவில் வளர்கின்றன. இவற்றிலிருந்து பெரணிகள் முளைக்கின்றன. பெரணியின் இலைகள் மரக்கிளைகள் போல மரத்திலிருந்து சுருண்டு வெளிவந்து சிறிது சிறிதாகச் சுருள் விரியும்.

போபாப்: (Boabab) 20 முதல் முப்பதடிச் சுற்றளவுக்கு வளரும் ஓர் ஆப்பிரிக்க மரம்.

வாளி: இது வாற் கோதுமையெனவும் அறியப்படும். இது மேற்கு நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இதன் அரிசியை அதிகம் திரித்து எடுக்கப் படுவது ‘பேள் வாளி’ எனப்படும். பீயர், இ°டௌட், மோல்டட்மில்க் முதலியவை செய்வதற்கு முளையுண்டாக்க இது பெரிதும் பயன்படுத்தப் படுகிறது.

வைர°: உயிருள்ளது உயிரில்லாதது என்னும் இருவகைச் சடப்பொருள் களுக்கு மிடைப்பட்ட ஒரு வகைப்பொருள். வைரசுகள் பிராணிகளின் உடலிற் புகுந்து பெருகி சில நோய்களை விளைக்கின்றன. தடிமன், இன்புளூவன்சா, சின்னமுத்து, கூகைக்கட்டு, சின்னம்மை, பெரியம்மை, சிறுபிள்ளைவாதம், மஞ்சட்சுரம், முதலியனவும் மனிதருக்கும் பிராணி களுக்கும் தோன்றும் பல நோய்களும் வைரசுகளாலுண்டாகின்றன. சில வைரசுகள் படிகவடிவில் காணப்படுகின்றன.

பறவைகள்
அடைக்கலாங்குருவி: சிட்டுக்குருவி, ஊர்க்குருவி எனப்படும் சிறிய பறவை. இது வீட்டின் இறப்புகளிலும் சந்துகளிலும் கூடுகட்டி வாழும்.

அண்டாங்காக்கை: இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படும் இரண்டு காக்கை இனங்களுள் பெரியதும் கருமைக் கூடியதும்.

அல்பாற்றொ°: (Albatross) பறக்கும் பறவைகளுள் மிகப்பெரியது. பறக்கும் போது இதன் ஒரு இறக்கையின் முனையிலிருந்து மற்ற முனைக்குள்ள தூரம் ஏறக்குறைய 17அடி. இது தென் கடற்பகுதிகளிற் காணப்படுகிறது. இது எப்பொழுதும் கடலின் மீது பறந்துகொண்டு திரியும். முட்டையிடுங் காலத்தில் மாத்திரம் இது கரைக்கு வரும். பேடு 5 அங்குல நீளமுள்ள முட்டையிடும், சேவலும் பேடும் மாறி மாறி அடைகாக்கும்.

ஆக்: (Auk) ஆக்டிக் கடலை அடுத்த இடங்களில் வாழும் நீர்ப்பறவை; கடற் காக்கைக்கு இனமுடையது. இதன் நீளம் 8 அங்குலம். இது ஒரு முட்டையை வெறுந்தரையிலிட்டுக் குஞ்சு பொரிக்கும்; நீரில் நன்றாக நீந்தும். இதில் பெரிய ஆக் என்னும் இனம் வாத்தளவு பருமையுடைய தாகவிருந்தது.

அன்னம்: வாத்து இனத்தைச் சேர்ந்த அழகிய பறவை; ஐரோப்பாவின் சில பகுதிகளிற் காணப்படுகிறது. தேம்° நதியில் வளர்க்கப்படும் அன்னங்கள் நீந்தித் திரிகின்றன. இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளிலும் அன்னம் காணப்படுகிறது. அன்னத்தில் பத்துவகை உண்டு. ஊமை அன்னம் வளர்க்கப்படுகிறது. இது சத்தமிடுவதில்லை. இவ்வன்னம் 5அடி நீளமும் 30 இராத்தல் எடையுமுள்ளது. சீழ்க்கை அன்னம், காரன்னம், கருங் கழுத்தன்னம் என்பன அன்னத்தில் சில இனங்களாகும்.

இருவாய்க்குருவி: (Hornbill) பருந்தின் பருமையுடைய பறவை. இதன் நீண்ட பெரிய மூக்கின் மேற்பகுதியில் இன்னொரு மூக்கு ஒட்டிக்கொண் டிருப்பது போன்ற அமைப்பு இருப்பதால் இதற்கு இருவாய்ப்பறவை என்னும் பெயர் வழங்கும். முட்டையிடுங் காலத்தில் பேடு மரப்பொந்துள் இருக்கும். சேவல் ஒரு சிறு துவாரம் இருக்கத் தக்கதாகப் பொந்தைக் களிமண்ணால் அடைத்துவிடும். குஞ்சு பொரிக்கும் வரையில் ஆண் பறவை பெண் பறவைக்கு உணவு கொடுக்கும். குஞ்சு பொரித்ததும் சேவல் அடைப்பைத் திறந்துவிடும். இதற்கு மலைமொங் கான் என்னும் பெயரும் வழங்கும்.

உயிரியல்: (Biology) இது இயங்கும் உயிர்களைப் பற்றியும் இயங்காத தாவரங்களைப்பற்றியும் ஆராயுங்கலை.

உயிர் வகைகளை உயிர்களாலழித்தல்: (Biological Control) 1925இல் ஆ°திரேலி யாவில் ஐந்து கோடி ஏக்கர் நிலத்தை நாகதாளி மூடியிருந்தது. நாகதாளி யில் முட்டையிடும் ஒருவகை அந்துப்பூச்சி அங்கு எடுத்துச்செல்லப் பட்டு விடப்பட்டது. இப்பொழுது 100க்குத் 95சதவீத நாகதாளி அழிந்து போயிற்று. உலகின் பெரும் பகுதியில் நுளம்புகளை அழிக்கப் புசியா என்னும் மீன் பயன்படுத்தப் படுகிறது. இது நுளம்பின் முட்டைகளை உண்டுவிடும். மேற்கிந்தியத் தீவுகளில் கரும்புப் பயிரிலிருக்கும் நச்சுத் தேளை ஒழிக்கப் பெரிய தேரை வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உயிர்களை உயிர்களாலழிப்பதற்குக் காட்டப்பட்ட சில எடுத்துக் காட்டுகள். சில சமயங்களில் அழிக்கப் பயன்படுத்துமுயிர்கள் பீடையாக மாறி விடுவதுமுண்டு.

கிவி: நியூசீலந்தில் காணப்படும் பறக்கமாட்டாத பறவை; பெரிய கோழியின் பருமையுள்ளது. கிவி என்று சத்தமிடுவதால் இது கிவி எனப்படுகிறது. நியூகீலந்து மக்கள் இதனை இறைச்சிக்காக வேட்டையாடி அதிகம் கொன்றுவிட்டமையால் இதனை வேட்டையாடுதல் சட்டம் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.

குயில்: இது வேறு பறவைக் கூடுகளில் முட்டையிடுகிறது. இது 20 முட்டைகள் வரையிலிடும். இது ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குச் சென்று மீளும்பறவை. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று கறுப்பு நிறமாகவும், மற்றது கறுப்பில் வரியுடையதாகவுமிருக்கும்.

சுவர்க்கப்பறவை: (Bird of Paradise) இது மலாய்த்தீவுக் கூட்டங்களிற் காணப் படும் பறவை. இதன் சேவலுக்கு அழகிய இறக்கைகள் உண்டு.

தாரா: இது நீர்ப்பறவை; அன்னம், வாத்து என்பவற்றுக்கு இனமுடையது. இதற்குச் சவ்வினைப்புள்ள பாதமும் தட்டையான மூக்குமூண்டு. இதன் இறகுகளில் எண்ணெய்ப்பசை இருப்பதால் தண்ணீர் இறக்கையில் தங்கமாட்டாது.

தீக்கோழி: இது ஆப்பிரிக்காவில் காணப்படும் பெரிய கோழி; இது பறக்கமாட்டாது: வேகமாக ஓடும். நன்றாக வளர்ந்த தீக்கோழியின் உயரம் எட்டடி. இதன் முட்டை மனிதனின் தலையளவு பருமனுடையது. முட்டையின் எடை மூன்று இராத்தல். இது 12 முதல் 16 முட்டைகளை மணலில் குழிதோண்டி இட்டு அடைகாக்கும். குஞ்சுகள் 42 நாட்களில் பொரியும். ஆண் பறவை இரவிலும், பெண்பறவை பகலிலும் அடை காக்கும். எமு, கசோவாரி என்னும் இதற்கு இனமுள்ள கோழிகள் ஆ°தி ரேலியாவிற் காணப்படுகின்றன.

பறவை: முதுகெலும்புள்ள உயிர்வகை. இது பாலூட்டிகளைப் போல வெப்ப இரத்தமுள்ளது. கூட்டமாக வாழும் இயல்புடையது. முட்டையிடுவது. விலங்குகளுக்குள்ள முன்கால்கள் பறவைகளுக்கு இறக்கைகளாக அமைந்துள்ளன. சில பறவைகள் பறக்க மாட்டாதனவாக மாறியுள்ளன. தீக்கோழி, கிவி, பெங்குயின் போன்றவை அவற்றுட் சில.

பறவைகளின் அலகுகள்: பறவைகளின் அலகுகள் அவை உண்ணும் உணவுகளுக்கேற்ப அமைந்துள்ளன. நடுத்தரமாக நீண்ட மூக்குள்ள பறவைகள் புலால் வகைகளையும் தானியங்களையுமுண்ணும். குறுகிய மூக்குடைய பறவைகள் விதைகளை உண்ணும். மாமிசம் உண்ணும் பறவைகளின் மூக்கு மிகக் குறுகிக் கூருடையதாகவிருக்கும்.

பென்குயின்: (Penguin) தென் துருவப்பகுதிகளில் மாத்திரம் காணப்படும் நீர்ப்பறவை. இது பறக்கமாட்டாது. இது இறக்கைகளைத் துடுப்புகளாகப் பயன் படுத்தி நீந்தும். பெண் பென்குயின் ஒரு முட்டையிட்டுப் பாதங் களின் இடையே வைத்து நின்ற நிலையில் அடைகாக்கும். எம்பயர் பெங்குயின் என்னும் இனம் ஒருபோதும் தரைக்கு வருவதில்லை. அது பனிக்கட்டியில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.

பூச்சிகள், புழுக்கள்
அசுகுணி: (Plant Louse) இது செடிப் பேன் எனவும் படும். இது மரங்களின் இளங்கிளைகள் மீதும் வேர்கள் மீதும் இருந்துகொண்டு வாயிலுள்ள ஊசி போன்ற உறுப்புகளால் குத்திச் சாற்றை உண்ணும். இவற்றில் பச்சை, வெள்ளை, கறுப்பு நிறமுடையனவுமுண்டு. சில இனங்களுக்கு இறக்கை களுண்டு. இவை பின்புறத்திலுள்ள சுரப்பியால் தேன்போன்ற இனிப்புப் பொருளை வெளியிடும். இதனைப் பெறுவதற்காக எறும்புகள் இவற்றைத் தமது புற்றுகளில் வைத்து வளர்க்கும். இவை எறும்பின் பால்மாடுகளெனப் படும். அசுகுணி முட்டையிடுவதில்லை. குஞ்சுகள் வயிற்றினின்றும் வெளிவரும்.

அணுக்கிருமிகள்: இவை பாக்டீரியா என்றும் அறியப்படும். இவை வெறுங் கண்ணுக்குப் புலப்படா; தாவர இனத்தைச் சேர்ந்தவை. இவற்றுட் சில தடிபோல் நீண்டும், சில நெளிந்தும், சில சுருண்டும், சில வட்டமாகவும் பல வடிவிலுள்ளன. இவற்றுட் பெரும்பாலன தீமை விளையாதவை. சில, பிராணிகளின் உடலிற்புகுந்து தீமை விளைப்பன; தொண்டைக் கரப்பான், க்ஷயரோகம், பிளேக், நியுமோனியா, இ°காளட்சுரம் போன்ற நோய்களை உண்டாக்குவன. பாலைப் புளிக்கச் செய்தல். பாலைப் பாற்கட்டியாக்குதல், தாவரங்களை உக்கச்செய்தல் போன்றன வும் அணுக்கிருமிகளால் உண்டாகின்றன.

அட்டை: இது மண்புழுவுக்கு இனமுடையது; பிற உயிர்களின் இரத்தத்தை உண்டு வாழ்வது; நீரிலும் சகதியிலும், வாழ்வது. முற்கால வைத்தியர் நோய்களைக் குணப்படுத்த அட்டைகளைக் கடிக்க விட்டு இரத்தத்தை உறிஞ்சச் செய்தனர். அட்டை இருபாற்பிராணி. ஒரே அட்டையில் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இரண்டும் உண்டு.

அமீபா: (Amoeba) வெறுங்கண்ணுக்குப் புலப்படாத புரோட்டோசோவா என்னும் ஓரணு உயிரைச் சேர்ந்தது. இதன் உடல்முழுவதும் ஒரு அணுவினாலானது.

அரக்கு: அரக்குப்பூச்சி தனது பாதுகாப்புக்காகத் தன்னைச் சுற்றி உடலி லிருந்து கசியும் ஒருவகைப் பிசினினால் கூடுகட்டும். அரக்குப்பூச்சி மூட்டைப்பூச்சி இனத்தைச் சேர்ந்தது. நன்கு வளர்ந்த பூச்சி 1/8 அங்குலக் குறுக்களவுள்ள முட்டை வடிவாக அல்லது வட்ட வடிவாகவிருக்கும். பூவன், இலந்தை, பலாசு, காசுக்கட்டி, சாலாரி, துவரை, முதலிய மரங்களில் இப்பூச்சிகள் பெரும்பாலும் வாழ்கின்றன. பர்மாவிலும் சீயத்திலும் இயற்கையாக அரக்குப் பயிராகிறது; இந்தியாவில் பீகார், மத்தியப் பிரதேசம், ஒரிசா, திருவிதாங்கூர், வங்காளம், அசாம் முதலிய இடங் களில் இது பயிராகிறது.

அனாபிலி°: (Anopheles) மனிதருக்கு மலேரியச் சுரத்தை உண்டாக்கும் கொசு. இதில் பெண்ணே நோயைப் பரப்புகிறது.

இடையன்பூச்சி: இது கும்பிடுபூச்சி எனவும் வழங்கும்; கரப்பான், வெட்டுக் கிளிகளுக்கு இனமுடையது. இதன் பெண் காய்ந்த நுரைபோன்ற கூட்டுக் குள் முட்டைகளை இட்டுவைக்கும். சில நாட்களின் பின் இடையன் பூச்சி அவற்றினின்றும் பொரித்து வெளிவரும்.

இலார்வா: வண்ணாத்திப்பூச்சிபோன்று உருமாற்றமடையும் பிராணிகளின் முட்டையினின்றும் புழு வெளிவரும். இது இலார்வா எனப்படும்.

இலேடிபேட்: (Ladybird) கறுப்புப் பொறியுள்ள சிவப்பு வண்டு. இதன் லார்வா அசுகுணிகளைத் தின்று அழிக்கிறது. இவ்வகையில் இது மனிதனுக்குப் பெரிதும் பயனுடையது.

ஈ: ஈக்களில் வீட்டு ஈ, மாட்டு ஈ, மணி ஈ எனப் பலவகை உண்டு. ஈ எறும்பு வகையைச் சார்ந்து. அழுக்கு எங்கு இருக்கிறதோ அங்கு ஈயும் இருக்கும் ஒரு பெண் ஈ வாழ்நாளில் ஐந்து அல்லது ஆறு தடவை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் இடும் முட்டை 150 இருக்கும். 24 மணி நேரத்தில் முட்டைகள் பொரித்ததும் புழுவாக வெளிவரும். இரண்டு நாட்களில் அது கூட்டுப்புழு நிலையை அடையும், மூன்று நாட்களின் பின் ஈக்கள் வெளிவரும்; வெளிவந்தபின் மேலும் பெரியதாக வளர்வதில்லை. ஈக் களுக்குக் கூட்டுக்கண்கள் உண்டு. வயிற்றுளைவு, நெருப்புக் காய்ச்சல், கயரோகம் முதலிய நோய்களுக்குக் காரணம் ஈயாகும்.

ஈசல்: இறக்கை முளைத்த கறையான் ஈசல் எனவும் படும். செல்லு, சிதல் என்பன கறையானின் மறுபெயர்கள். மழைக்காலங்களில் ஈசல் வெளிவரும்.

ஈப்புலி: சிலந்திவகையிலொன்று. இது வலைகட்டி அதில் இரையைப் பிடியாது பதுங்கியிருந்து பாய்ந்து ஈக்களைப் பிடிக்கும்.

உயிரியல் முறையால் பீடை ஒழித்தல்: (Biological Control) மனிதனுக்குத் தொல்லை கொடுக்கும் உயிரினங்களை அவற்றை அழிக்கக்கூடிய பிற உயிரினங்களைக் கொண்டு அழித்தல். கொசுக்களின் நெளி புழுக்களை அழிப்பதற்கு 200க்கு மேற்பட்ட மீனினங்கள் 41-நாடுகளாற் பயன் படுத்தப்படுகின்றன. இது இதற்கு எடுத்துக்காட்டாகும்.

கறையான்: காரப்புப்பூச்சி, தத்துக்கிளி, உழுவான் பூச்சிகளுக்கு இன முடையது. தாய்க்கறையான்,போர் செய்வன, வேலை செய்வன என்னும் மூன்று பிரிவுகள் கறையான் புற்றில் உண்டு. கறையான்களின் வளர்ச்சி யின் ஒரு பருவத்தில் அவற்றுக்கு இறக்கைகள் முளைக்கும். ஈசல்க ளென்பன இறக்கை முளைத்த கறையான்களாகும்.

சிலந்தி: இது தேளைப்போன்று மற்றைய பூச்சிகளினின்று பிரித்தறியப்படக் கூடியது. இதற்கு எட்டுக்கால்களுண்டு. இது பூச்சிகளை உண்ணும். ஒரு வகைச் சிலந்தி. நிலத்தில் அறையையும் அதனை மூடும் கதவையும் அமைத்து வாழும். இதில் நூற்றுக் கணக்கான இனங்களுண்டு. இவை வெண்ணிறப்பை போன்ற கூட்டுக்குள் முட்டைகளை இட்டு வைக்கும். குஞ்சுகள் உருமாற்றமடைவதில்லை; தாயைப் போன்ற வடிவில் வெளி வருகின்றன.

தும்பி: இது இளம் பூச்சியாக இறக்கைகள் முளைத்து நீரிலிருந்து வெளி வருவது. இது சிறு பூச்சிகளை உண்டு வாழும். தும்பிகள் அங்குமிங்கு மாகப் பறந்து திரிவது சிறு பூச்சிகளைப் பிடித்துத் தின்பதற்காகவாகும். இது இளம் பூச்சி நிலையிலிருந்து தும்பியாக மாறுவதற்கு 2 முதல் 3 ஆண்டுகளாகும்.

தெள்ளு: இது விலங்கு பறவைகளிலும் மனிதனிலும் இருந்து இரத்தத்தை உறிஞ்சி வாழும். இதன் மூன்றாவது சோடிக்கால்கள் நீண்டிருக்கும். இக் கால்களினுதவியால் தெள்ளு பாய்கிறது. இரத்தத்தை உறிஞ்சுவதற்கு வாயில் குத்தும் குழல் போன்ற உறுப்பு உண்டு. எலிகளிலுள்ள தெள்ளி லிருந்து பிளேக் நோய் பரவுகிறது.

தேள்: இது நண்டைப்போல் முன்புறத்தில் சாவணம் போன்ற கால் களுடைய பிராணி. இதன் வாலிலுள்ள கொடுக்கில் நஞ்சுண்டு. குஞ்சுகள் தேளின் வயிற்றிலிருந்து வெளிவருகின்றன. அவை சில காலம் தேளின் முதுகிலிருக்கும்.

தேனீ: இது எறும்புக்கும் குளவிக்கும் இடைப்பட்டது. இவற்றுட் பல வகை யின கூடுகட்டாது தனி ஈக்களாகத் திரியும். கூடுகட்டி வாழும் ஈக்களில் தாய் ஈ, வேலை செய்வன, ஆண்கள் என மூன்று பிரிவுகளுண்டு. ஒரு கூட்டில் வாழும் பல ஆயிரம் வேலைசெய்யும் ஈக்களும் நூற்றுக்கணக் கான ஆண்களும் ஒரு தாய் ஈயும் இருக்கும். தேனீக்கள் மகரந்தத்தை ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்குக்கொண்டு சென்று பரப்புதலால் மரஞ்செடிகள் காய்கின்றன.

பூச்சிகள்: பூச்சிகளுக்கு இரண்டு உணர் இழைகளும் மூன்று சோடி கால்களு முண்டு. பூச்சிகளிற் பல பறப்பவை. அவற்றுக்கு இரண்டு சோடி இறக் கைகள் உண்டு. தெள்ளு, மூட்டைபூச்சி போன்றவை பறக்கமாட்டா. உலகில் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட பூச்சி வகைகள் உள்ளன. ஒவ் வொரு ஆண்டிலும் ஆயிரக்கணக்கான பூச்சி வகைகள் கண்டுபிடிக்கப் படுகின்றன.

பேன்: இறக்கையில்லாத பூச்சி; பறவைகளிலும் பாலூட்டிகளிலும் இருப்பது. பறவைகளிலிருக்கும் பேன் இறகுகளிலுள்ள சிறு பகுதிகளைக் கடித் துண்கின்றது. மனிதனிலிருக்கும் பேன் கடித்து இரத்தத்தை உறிஞ்சி கின்றது. ஒரு பெண் பேன் நாளொன்றுக்குப் பத்து முட்டைகள் வீதம் 300 முட்டைகளிடும். பேன்கள் மூன்று அல்லது நான்கு வாரங்கள் வாழும்.

மண்புழு: நிலத்தைத் துளைத்து மண்ணுள் வாழும்; புற்றின் வாயை இலைச் சருகால் மறைக்கும்; மண்ணை விழுங்கி அதிலுள்ள உயிர்ப்பொருளை உண்ணும். ஆ°திரேலியாவில் பத்தடிக்குமேல் நீளமுள்ள மண் புழுக்கள் உண்டு. மண்புழுக்கள் கீழேயுள்ள மண்ணை மேலே கொண்டு வருதலால் நிலம் பயிர்ச்செய்கைக்கு வாய்ப்புடையதாகிறது.

மூட்டை: சாறுகளை உறிஞ்சுவதற்கு ஏற்றவாயுறுப்புகளையுடைய பூச்சி. இவற்றில் பலவகை உண்டு. இவை படுக்கையிலிருக்கும் மூட்டைப் பூச்சியைப்போல இரத்தத்தை அல்லது இறந்துபோன உடலின் ஊனத்தை அல்லது தாவரங்களின் சாற்றை உறிஞ்சி வாழும்.

வண்டு: பூச்சி வகையைச் சேர்ந்தது. இதன்மேல் இறக்கைகள் ஓடு போன்று உறுதியாக விருக்கும். அவை பறக்க உதவமாட்டா. கீழ் இறக்கை களுக்குப் பாதுகாப்பாகவிருக்கும். சில வண்டுகள் மனிதனுக்குத் தீமை விளைக்கும் பூச்சிகளைப் பிடிகின்றன. சில பயிர்களைத் தின்று அழிகின்றன.

வண்ணாத்திப் பூச்சிகள்: அந்துப்பூச்சியும் வண்ணாத்திப்பூச்சியும் ஒரு இனத்தைச் சேர்ந்தவை. வண்ணாத்திப் பூச்சியின் உணர் இழை நுனியில் திரட்சியிருக்கும். இருக்கும்போது இறக்கைகள் மேல் நோக்கி மடிந்து ஒன்று சேர்ந்திருக்கும். அந்துப்பூச்சி இரவிற் பறக்கும். அந்துப்பூச்சி வண்ணாத்திப்பூச்சிகளின் முட்டைகளிலிருந்து புழுக்கள் பொரித்து வெளிவரும். இவை பின் கூட்டுப் புழுக்களாக மாறி அந்துப் பூச்சிகளாக வும் வெளிவரும். வண்ணாத்திப் பூச்சிகளில் ஏறக்குறைய 70 வகை களும் அந்துப் பூச்சிகளில் 2000 வகைகளும் உண்டு.

நீர்வாழ்வன
ஆமை: ஆமையில் கடலாமை, தரையாமை எனப் பலவகை உண்டு. கடலாமை 100 முதல் 200 முட்டைகளிடும். அவை கோழி முட்டைப் பருமையுடையனவாகவும் மெது மெதுப்பாகவுமிருக்கும். ஆமை நிலத்தில் குழி தோண்டி முட்டையிடும். தோணி ஆமை 6 முதல் 6½ அடி நீளமும் முக்கால் தொன்(டன்) எடையும் உள்ளதாகவிருக்கும். தரை ஆமைகளிற் சில 250 ஆண்டுகள் வாழும்.

ஆனகொண்டா: (Anaconda) தென்னமெரிக்காவில் சகதிகளிலும், ஆறுகளி லும் காணப்படும் மிகப்பெரிய பாம்பு. 30 அடி நீண்ட பாம்புகள் பிடிக் கப்பட்டுள்ளன.

கடற்குதிரை: ஒரு சிறுமீன். இதன் தலை குதிரையின் தலை போன்றது. இது பெரும்பாலும் மத்திய தரைக்கடலிலும் வெப்பமண்டலக் கடல்களிலும் காணப்படும். ஆண் கடற்குதிரை பெண் இடும் முட்டைகளை வயிற்றின் மேற்புறத்துள்ள பைக்குள் வைத்துக் குஞ்சு பொரிக்கும் வரையும் காப்பாற்றும்.

கடற்சாமந்தி (Sea Anemone): செவ்வந்திப்பூப் போன்ற தோற்றமுள்ள கடலுயிர்; பவளப் பூச்சிக்கும் சொறி மீனுக்கும் இனமுடையது. இதன் மேற்புறத்திலுள்ள கூந்தலில் முட்கள் போன்ற சொறிகளுண்டு.
கடற்பஞ்சு: இது கடற்பிராணி. இது கடலின் அடியிலுள்ள பாறைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும். வள்ளங்களிற் சென்று கொளுவு தடிகளால் இதனைப் பிடுங்கி எடுப்பார்கள். சுளிஓடுவோர் நீரில் மூழ்கிப் பாறை களிலிருந்து இவற்றைப் பிடுங்கி எடுப்பதுமுண்டு. கடற்பஞ்சைத் துண்டு களாக வெட்டிக் கடலிற்போட்டால் துண்டுகள் தனித்தனிக் கடற்பஞ்சு களாக வளரும்.

கணவாய்: இதற்கு முன்புறத்தில் உணர்ச்சி இழைகள் போன்று பல நீண்ட உறுப்புகளுண்டு. இவற்றால் அது இரையைப் பிடிக்கும்; எதிரிகள் தாக்கினால் ஒரு வகை மையைக் கக்கிவிட்டுத் தப்பி ஒடும். இதில் ஒரு இனத்துக்கு முதுகுத்தோலின் கீழ் வெண்ணிறமாக ஒடு உண்டு. இவ் வோடு பொருள்களை உரைஞ்சிச் சுத்தஞ்செய்ய உதவும்.

சல்மன்: (Salmon) கடலில் வாழ்ந்து நல்ல தண்ணீரில் முட்டையிடும் மீன். இது தான் பிறந்து வாழ்ந்த ஆற்றுக்கே முட்டையிடச் செல்கிறது. இது வடஐரோப்பிய வடஅமெரிக்கக் கடல்களில் காணப்படுகின்றது.

கெரிங்: (Herring) வடகடலிற் பெருங்கூட்டங்களாகத் திரியும் மீன். ஒரு பெண் மீன் முப்பதினாயிரம் முட்டைகள்வரை இடும்.

கொட் (Cod) வடகடலில் பிடிக்கப்படும் மீன். ஐ°லந்துக் கரைகளில் அதிகம் பிடிக்கப்படுகிறது. இது 5-6 அடி நீளம் வளர்கிறது.

சொறிமீன்: (Jelly fish) இதன் உடல் சளிபோன்று வழு வழுவழுப்புள்ளது. இதன் உடலில் சிறுமுட்கள் போன்ற சொறிகளுண்டு. சில சமயங்களில் பல அடி விட்டமுள்ள சொறிமீன்கள் கடலோட்டத்தோடு மிதந்து கொண்டு செல்லும். இதில் போர்ச்சுக்கீசிய போர்க்கப்பல் (Portuguese man of war) என்னும் ஒருவகை உண்டு. இதன் சொறி மனித உடலிற்பட்டால் அபாயம் விளையும்.

தலைப்பிரட்டை: வாலொடு உள்ளதும் வளர்ச்சியடையாததுமாகிய தவளைக் குஞ்சு இப்பெயர் பெறும்.

தவளை: நிலத்திலும் நீரிலும் வாழும் பிராணி. இது முட்டைகளைக் குளம் குட்டை நீர்நிலைகளில் இடும். முட்டைகள் பொரித்துத் தலைப்பிரட்டை களாக வளரும். தலைப்பிரட்டைக்குப் பிறந்தவுடன் வாயிருக்காது. அதன் தலைக்குக் கீழுள்ள சுரப்பியினின்று வரும் பசையினால் அது நீர்த் தாவரம் கல் என்பவற்றைப் பற்றிக்கொண்டு கிடந்து செவிள்களால் மூச்சு விடும். சில நாட்களின் பின் மூக்குத்துவாரங்களும் நுரையீரலும் தோன் றும். அப்பொழுது அது காற்றிலுள்ள பிராணவாயுவைச் சுவாசிக்கும். இந் நிலையில் ஒட்டும் பசைவரும் சுரப்பி மறைந்துவிடுகிறது. வாய் தோன்றுகிறது. பின்வால் சுருங்கி விட நான்கு கால்களுடைய தவளை யாக மாறுகிறது. தவளை நுரையீரல் வழியாகவும் தோல் வழியாகவும் மூச்சுவிடுகிறது. அது பூச்சிகளைத் தனது பிசுபிசுப்புள்ள நாக்கினால் பிடித்து உண்கிறது. ஆ°திரேலியாவை தவிர பிறநாடுகளில் தவளை காணப்படும். பிரான்சிலும் பிறநாடுகள் சிலவற்றிலும் இது உண்ணப் படுகிறது.

திமிங்கிலம்: கடல் வாழ் விலங்குகளில் மிகப்பெரியது. இதில் பல்லுள்ளது; பல்லில்லாததென இருவகையுண்டு. பல்லில்லாத திமிங்கிலத்துக்குப் பல்லுக்குப் பதில் தகடு போன்ற எலும்பமைப்பு உண்டு. பல்லுள்ள திமிங்கிலங்கள் பல்லில்லாதவற்றினும் சிறியவை. திமிங்கிலம் பாலூட்டி களைச் சேர்ந்தது.

நட்சத்திரமீன்: நட்சத்திர வடிவுடையது. இதற்கு ஐந்து கைகளுண்டு. இதன் கைகளில் ஒன்றோ பலவோ ஒடிந்து விட்டால் அவை மறுபடியும் வளரும். இது கைகள் போன்ற பாதங்களால் இரையைப் பிடித்து வயிற்றினால் உண்டுவிடும். இது சிப்பிகளைக் கைகளினால் இழுத்துத் திறந்து அவற்றின் இறைச்சியை உண்டுவிடும்.

நீர் நில வாழ்வன: தவளை, பாம்பு, ஆமை, முதலை போன்ற பிராணிகள் இவ்வகையில் அடங்கும்.

பறக்கும் மீன்: இது வாலினால் நீரைப் பலமாக அடித்துத் துள்ளி மேலே எழுந்து சறுக்கிக்கொண்டு ஒரே திசையில் 200 யார் தூரம் செல்லும்; செல்லும்போது உடலின் முன் பாகத்திலுள்ள முன்னிணையாகிய பெரிய நீண்ட தோள் துடுப்புகளை அகலமாக விரித்துக்கொள்ளும். அவை விமானக்குடை போல உதவும்.

மீன்: முதுகெலும்புள்ள உயிரினத்தைச் சேர்ந்தது. இது துடுப்புகளினுதவி யால் நீந்திச் செவிள்களால் மூச்சுவிடும். திருக்கை, சுறா முதலிய மீன்களுக்குக் குருத்தெலும்பாலாகிய முள்ளுண்டு. சில மீன்களுக்கு நுரையீரலுண்டு. அவை நிலத்தில் பல நாட்கள் வாழமுடியும். ஆ°தி ரேலியா, தென்னாப்பிரிக்கா, தென்னமெரிக்கா, இந்தியா, இலங்கை முதலிய இடங்களில் இவ்வகை மீன்கள் காணப்படுகின்றன.

விலாங்கு: விலாங்குகள் ஆறுகளிலும் குளங்களிலும் வாழும். பத்து ஆண்டு களின்பின் இவை கடலுக்குச் சென்று அங்கே முட்டையிடும். ஐரோப்பிய நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலுமுள்ள விலாங்குகள் அத்லாந்திக் கடலைத் தாண்டி மேற்கிந்தியத் தீவுகள் வரையுஞ்சென்று அங்கே முட்டையிடும்.

விலங்குகள்
அகூட்டி: (Agouti) அமெரிக்காவிற் காணப்படும் கொறிக்கும் பிராணிகளுள் ஒன்று; முயலளவு பருமையுடையது. இலை, கிழங்கு, வேர், கொட்டை முதலியவற்றை உண்டு வாழ்வது; செம்பட்டை நிறமும் குறுகிய வாலுமுள்ளது. கரும்புத் தோட்டங்களுக்கு இதனால் அதிக கெடுதி விளைவதுண்டு.

அங்கோரா ஆடு: கம்பளிக்குப் பேர் போன வெள்ளாடு. இதன் தாய்நாடு ஆசியாமைனர். இதன் உரோமம் வெண்மையாகவும் சுருளாகவும் தொங்கும். ஆண்டில் 8 அங்குலம் முதல் 10 அங்குல உரோமம் வளரும். பொதுவாக ஒரு ஆடு 2 1/2 இராத்தல் மயிர் கொடுக்கும். மெக்சிக்கோ, ஐக்கிய நாடுகள், பசிபிக் கடல் தீவுகளில் இது வளர்க்கப்படுகிறது.

அலிகேட்டர்: (Alligator) அமெரிக்காவிலும், சீனாவிலும் காணப்படும் ஒருவகை முதலை; நல்ல தண்ணீரில் வாழ்வது. இது 10 முதல் 11 அடிநீளம் வளரும்.

அல்பக்கா: தென்னமெரிக்காவில் பெரு, சில்லி முதலிய நாடுகளில் வளர்க் கப்படும் ஒருவகை ஆடு; ஒட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தது; தோள் மட்டத்தில் 4அடி உயரமுள்ளது; இது உரோமத்துக்காக வளர்க்கப்படு கிறது. உரோமம் 8 முதல் 16 அங்குல நீளம் வளரும். உரோமம் கருமை, வெண்மை, சாம்பல் முதலிய நிறங்களாக விருக்கும்.

அழுங்கு: இது இந்தியாவிலுள்ள எறும்பு தின்னும் பிராணி. இதனுடலில் மயிருக்குப் பதில் கேடகம் போன்ற செதில்களுண்டு. இது எறும்பு களைத் தின்று வாழும்; குட்டிகளீனும். இதற்குப் பல்லில்லை.

அனுசரணை: (Adoption) தாவரங்களும் பிராணிகளும் சூழல்களுக்கேற்ப வாழ்தற்கு உதவியாகிய அமைப்பு. தவளைக்குப் பின்னங்கால்களி னிடையே சவ்விணைப்பு, மின்னல் வேகத்தில் நீட்டி இழுக்கக்கூடிய பிசுபிசுப்புள்ள நாக்கு, தோலால் மூச்சுவிடக்கூடிய அமைப்பு முதலியன அது சகதியில் வாழ்ந்து பூச்சிகளைப் பிடித்துத் திண்பதற்கு ஏற்றனவாக விருக்கின்றன.

ஆர்ட்வாக்: (Ardvaak) ஆப்பிரிக்காவிற் காணப்படும் பன்றியளவு பருமை யுடைய எறும்பு தின்னி. இது பசையுள்ள தனது நாக்கினால் புற்றுகளி லிருக்கும் எறும்புகளையும் கறையான்களையும் பிடித்து உண்ணும். இதற்குப் பன்றிக்கிருப்பது போன்ற நீண்ட மூக்குண்டு.

ஆர்மடிலோ: (Armadillo) தென்னமெரிக்காவிலும் வடஅமெரிக்காவின் தென்பகுதியிலும் வாழும் எறும்பு தின்னும் விலங்கு. இதில் பெரிய இனம் மூன்றடி நீளமும், சிறிய இனம் 5 அங்குல நீளம் உள்ளன. இதற்கு அழுங்குக்கிருப்பது போன்ற செதில் உடல் முழுமையும் இருக்கும். இது குட்டிக்குப் பால் கொடுக்கும் விலங்கு.

இந்திரி: (Indri) தேவாங்கு வகையில் மிகப்பெரியது; மடகாசிகர் தீவில் காணப் படுவது. இதன் தலையும் உடலும் சேர்ந்து இரண்டடி நீளமிருக்கும்.

இலம்மிங் (Lemming): கனடா, நார்வே, கிரீன்லாந்து முதலிய நாடுகளிற் காணப்படுவது. இது மிக விரைவிற் பெருகும். உணவு கிடையாத காலத் தில் இவை கூட்டமாகச் சென்று மலைகளிலிருந்து கடலிற் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளும். இது ஒரு வகை எலி.
எறும்பு தின்னிகள்: பலவகைப் பாலூட்டி விலங்குகள் எறும்பு தின்னிகள் எனப்படுகின்றன. இவற்றுக்குப் பற்களில்லை; புழுப்போல் நீண்ட நாக்குண்டு. இவை பிசுபிசுப்புள்ள நீண்ட நாக்கைப் புற்றுகளில் விட்டு எறும்புகளைப் பற்றி உண்ணும்.

ஒக்காப்பி: (Okapi) ஒட்டைச் சிவிங்கிக்கு இனமுள்ள விலங்கு; மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள காடுகளிற் காணப்படுவது. இதன் கால்களும் கழுத்தும் ஒட்டைச்சிவிங்கிக் கிருப்பதைவிடக் குட்டையானவை. இதன் தோளருகில் 5 அடி உயரமிருக்கும்.

ஒப்போசம்: (Opossum) கங்காருவைப்போல் அடி வயிற்றிற் பாற்பையுள்ள பூனையளவினதாகிய சிறுவிலங்கு. இது வட அமெரிக்காவிற் காணப் படுகின்றது. இதன் குட்டி பிறக்கும்போது 4 குன்றிமணி எடையுள்ளதாக விருக்கும். ஒப்போசம் கோழி, அணில் முதலியவற்றைப் பிடித்துத் தின்னும். இதை எதிர்த்தால் செத்துப்போனது போலப் பாசாங்கு செய்யும்.

கங்காரு: ஆ°திரேலியாவிற் காணப்படும் விலங்கு. இதன் பெண்ணின் அடிவயிற்றிற் பாற்பை உண்டு. இதன் பின்னங்கால்கள் முன்னங்கால் களிலும் நீளமானவை. கங்காரு பின்னங்கால்களால் தாவிப் பதினைந்தடி தூரம் பாய்ந்து வேகமாகச் செல்லும்.

கடலில் வாழும் பாலூட்டிகள்: வால்ர° (Walrus), கடல் நாய் (Seal,) கடற்பசு, திமிங்கிலம், கடற்சிங்கம், கடல் யானை முதலியன.

கரடி: நாய், ஓநாய், நரி என்பவற்றுக்கு இனமுடையது. கரடியிற் பெரும்பாலான கிழங்கு, தேன் முதலியவற்றை உண்ணும். அமெரிக்காவிற் காணப்படும் சாம்பல் நிறக்கரடியும் வட துருவப்பகுதிகளிற் காணப்படும் வெள்ளைக் கரடியும் மீன், நண்டு வகைகள், கடற்பறவைகளை உண்ணும்.

கற்படி உருவம்: (Fossil) பாறைகளில் காணப்படும் மிகப்பழங்காலத்திய தாவரங்கள், பறவைகள், விலங்குகள், பல்லிகள், பூச்சிகளின் உருவங்கள். இவற்றைக் கொண்டு பழங்கால உயிர் வகைகளைப்பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்துவர்.

bகாறிக்கும் பிராணிகள்: எலி, அணில், முயல் முதலியன முக்கிய கொறிக்கும் பிராணிகள். கொறிப்பதினாலுண்டாகும் பல்லின் தேய்வுகள் வளர்ந்து கொண்டிருக்கும்.
கோலா: இது பாற்பையுள்ள ஆ°திரேலிய கரடி. இது இலைகளைத் தின்று யூகாலிப்ட° மரங்களில் வாழும்.

குளிரொடுக்கம் (Hibernation): முள்ளெலி, வெளவால், சுண்டெலி, கரடி போன்ற சில பிராணிகள் மாரிகாலந் தொடங்கும்போது குளிரொடுக்கத் துக்குச் செல்கின்றன. அப்பொழுது உடலின் வெப்பநிலை சிறிது விழுகிறது. பிராணி அசைவின்றிக் கிடக்கின்றது. நாடித்துடிப்பு மாத்திரம் தெளிவாகவிருக்கும். குளிர்காலங் கழிந்ததும் அவை மறுபடியும் விழித்தெழுந்து சுறுசுறுப்படைகின்றன.

தாராமூக்கு எலி: ஆ°திரேலியாவிலும் தா°மேனியாவிலும் காணப்படும் ஒருவகை எலி; 20 அங்குல நீளமுள்ளது; முட்டையிடுவது; குட்டிக்குப் பால் கொடுப்பது. இதன் மூக்குத் தாராவின் மூக்குப் போன்றது.

நாய்: இது நரி, ஓநாய் முதலியவற்றுக்கு இனமுடையது. வளர்க்கும் நாய் ஓநாயின் சந்ததியிலிருந்து வந்தது.

நீர்நாய்: இது நீரில் நீந்தி மீன்களைப் பிடித்துத் தின்னும் விலங்கு; வீசல் (Weasel), பாட்சர், (Badger) என்னும் விலங்குகளுக்கு இனமுடையது. இதற்குச் சவ்விணைப்புள்ள விரல்களுண்டு.

நீல ஓநாய்: இதற்கு அர்த்வுல்ப் (Aardwolf) என்னும் பெயர் இடச்சு மொழியில் வழங்கும். இச்சொல்லுக்கு நீல ஓநாய் என்பதுபொருள். இது தென்னாப் பிரிக்காவிலும் கிழக்காப்பிரிக்காவிலும் காணப்படுகின்றது. பார்வைக்குக் கழுதைப் புலிபோல் தோன்றும். மயிரின் நிறம் பழுப்பு. இதில் ஐந்தாறு குறுக்குப் பட்டைகள் இருபுறமும் உண்டு. இதன் முக்கிய உணவு கறை யான், பூச்சி, புழு முதலியன.

பண்டா: (Panda) இமயமலை, திபெத்து, சீனா முதலிய இடங்களிற் காணப் படும் ஒருவகைக் கரடி. கறுப்பும் வெண்மையும் கலந்த நிறமுள்ள பண்டாக்கள் திபெத்திலும் சீனாவிலும் மாத்திரம் காணப்படுகின்றன.

பறக்கும் அணில்: அணிலில் பறக்குமணிலென ஒருவகை உண்டு. முன்னங் காலுக்கும் பின்னங்காலுக்குமிடையில் உடற்பக்கமாகத் தோல் வளர்ந் திருக்கும். இதனை விரித்துச் சறுக்கிக் கொண்டு இவ்வணில் ஒரு மரத்தி லிருந்து இன்னொரு மரத்துக்கு ஏறக்குறைய 70 யார் அல்லது 80 யார் சறுக்கிக்கொண்டு செல்லும். இத் தோல்மடிப்பு விமானக்குடைபோலப் பயன்படுகிறது. இவ்வணில் போர்ணியோ முதலிய மலாய்த்தீவுகளிலும், இலங்கையிலும் காணப்படுகிறது.

பாட்சர்: (Badger) கரடி இனத்தைச் சேர்ந்த சிறிய விலங்கு. நிலத்தில் குழி தோண்டி வாழ்வது.

பாபூன்: (Baboon) நாய்முகக் குரங்கு எனப்படும் பாபூன் ஆப்பிரிக்காவிலும் அராபியாவிலும் காணப்படுகிறது. இது மரத்தில் வாழும். நிலத்தில் நான்கு கால்களில் நடந்து திரியும்.

பாற்பை விலங்குகள்: (Marsupials) இவை குட்டிகளை ஈன்றவுடன் வைத்துக் காப்பாற்ற அடிவயிற்றில் பையுடைய விலங்குகள். குட்டிகள் பாற்பையு ளிருந்து தாயின் பாலை உண்டுவளரும். ஆ°திரேலிய விலங்குக ளெல்லாம் இவ்வகையின.

பிராணிகள் தாவரங்களின் விஞ்ஞானப் பெயர்கள்: இப்பிரிப்பு இனம் (Species) என்னும் அலகிலிருந்து ஆரம்பிக்கின்றன. இனங்கள் பிரிவு (Genera) என்னும் கூட்டமாகப் பிரிக்கப்படுகின்றன. பிரிவுகள் வகை (Class) என்னும் வகையாகவும், வகை தொகுதியாகவும் (Phyla), தொகுதி தாவரங்கள் பிராணிகளாகவும் பிரிக்கப்படுகின்றன.

பீவர் (Beaver): வட அமெரிக்காவில் காணப்படும் கொறிக்கும் பிராணி. இது பெரிதும் நீரில் வாழும். போதிய நீரில் வாழ்வதற்காக ஒரு கூட்டம் பீவர்கள் பல்லினால் மரங்களைக் கடித்து விழுத்தி அம்மர அடிகளைக் கொண்டு அணைகட்டி நீரைத்தடுக்கும்.

பூச்சி தின்னும் பாலூட்டிகள்: மூஞ்சூறு, முள்ளெலி, மரமூஞ்சூறு முதலியன.

மார்கோப்போலோ ஆடு: பார்மீர் பீடபூமியில் 16,000 அடி உயரத்தில் ஒவி° போளை என்னும் அழகிய ஆடுகள் காணப்படுகின்றன. மார்க்கோப் போலோ இவற்றைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே இவை போலோ ஆடுகள் எனப்படும். முதிர்ந்த கடா ஆடுகளின் கொம்பு மிகப் பெரியது; 52 அங்குல நீளமும் அடியில் 15 அங்குலச் சுற்றளவுமுள்ளது. காலின் தோளருகே 44 அங்குல உயரமிருக்கும். சில ஆடுகளின் எடை 250 இராத்தல் வரையில் உண்டு.

முள்ளெலி: (Hedgehog) பூச்சிகளைத் தின்னும் சிறிய விலங்கு. இதனுடலில் மயிருக்குப் பதில் சிறிய முட்கள் கிடக்கும். இது இராக்காலத்தில் வெளியே வந்து நத்தைகள், பறவைக்குஞ்சுகள், பாம்புகள், பழங்கள், பூச்சிகளை உண்ணும்.

யானை: நிலத்தில் வாழும் விலங்குகளுள் மிகப்பெரியது. இதில் ஆப்பிரிக்கா யானை, ஆசிய யானை என இருவகை உண்டு. ஆப்பிரிக்க யானையின் காதுகள் மிகப்பெரியவை. ஆசிய யானையின் ஆணுக்குக் கொம்புண்டு; பெண்ணுக்கு இல்லை. ஆப்பிரிக்க யானைகளின் ஆணுக்கும் பெண் ணுக்கும் கொம்புண்டு. யானைகள் தமது பெரியவயிற்றை நிரப்புவதற்கு நாளில் 18 மணி நேரம் மேயும். அவை துதிக்கையினால் உணவை எடுத்து வாய்க்குள் வைத்துண்ணும்.

வரிக்குதிரை: குதிரைக்கும் கழுதைக்கும் இடைப்பட்ட விலங்கு. அது ஆப்பிரிக்காவில் மாத்திரம் காணப்படுகின்றது. அதற்குக் கறுப்பு நிறத்தில் வெள்ளை வரிகளுண்டு.

வாலில்லாக்குரங்கு: மனிதரைப்போன்ற தோற்றமுடைய விலங்கு. கவிந்து நடத்தல், நீண்ட கைகளுடையனவாதல், உடலில் நெருங்கி வளர்ந்த உரோமமிருத்தல் போன்ற சில வகைகளில் இது மனிதனிலிருந்து வேறுபடும். இப்பொழுது காணப்படும் வாலில்லாக் குரங்குகள் நால் வகை, கிபன், ஒராங் ஊத்தாங் என்பன கிழக்காசியாவிலும், சிம்பன்சி, கொறிலா என்பன ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன.

பௌதிகம்
அடைகாக்கும் பெட்டி: (Incubator) பறவைகள் முட்டை மேலிருந்து அடை காத்து வெப்பமளிப்பதற்குப் பதில் அமைக்கப்பட்ட செயற்கை முறை. முற்காலத்தில் குழாய்கள் மூலம் வெந்நீரைச் செலுத்திக் காற்றுக்கு வெப்பமூட்டப்பட்டது. இப்பொழுது காற்றைச் சூடேற்றி உள்ளே புகுத் தும்முறை கையாளப்படுகிறது. வாயுவிளக்கினாலும் எண்ணெயடுப்பி னாலும் வாயுவைச் சூடாக்கலாம். பெட்டிகளில் ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டுக் குஞ்சு பொரிக்க வைக்கலாம்.

ஆகாயக்கப்பல்: இது காற்றிலும் பாரங்குறைந்தது; சுருட்டு வடிவுடையது; ஹைடிரோசில் அல்லது ஹெலியம் வாயு நிரப்பி அடைக்கப்படுவது. இவ்வகை ஆகாயக் கப்பலை முதலிற்செய்து பறக்க விட்டவர் செப்ப லின் (Zeppelin) என்னும் செர்மானியர். ஆகவே இது செப்பலின் எனப் பட்டது. இது இப்பொழுது பயன்படுத்தப்படுவ தில்லை.

ஆழங்காணல்: (Sounding) கயிற்றில் அல்லது கம்பியில் ஈயக்குண்டைக் கட்டிக் கடலுள் விட்டு ஆழங்காணல் பழைய முறை. இப்பொழுது ஒலியைக் கீழே செலுத்தி அது அடிக்குச் சென்று திரும்பி வரும் நேரத்தைக் கொண்டு கடலாழத்தை அளக்கும் முறை கையாளப்படு கிறது. நீரில் செல்லும் ஒலியின் வேகம் வினாடிக்கு 1,600 யார் இவ்வாறு ஆழங்காண்பதற்கு அமைக்கப்பட்ட எந்திரக்கருவி உண்டு.

ஆழவெடி: (Depth Charge) கடற்சுரங்க வெடிகளிலொன்று. குறிப்பிட்ட ஓர் ஆழத்தை அடைந்ததும் நீரின் அழுத்தத்தால் இதன் திரி இயங்கி இதை வெடிக்கச்செய்யும். நீர்மூழ்கி எந்த ஆழத்திலுள்ளதோ அதற்கு ஏற்ப வெடிக்குமாறு இதன் திரியை மாற்றியமைக்கலாம். ஆழவெடி நீர் மூழ்கியை நேராகத் தாக்காவிட்டாலும் நீருக்குள் வலுவான அழுத்த அலைகளைத் தோற்றுவித்து நீர்ழூழ்கி பல யார் தூரத்திலிருந்தாலும் அதற்குச் சேதம் விளைக்கும். கப்பலின் மேல்தட்டிலிருந்து உருட்டி விட்டோ பீரங்கியைக்கொண்டு சுட்டோ இதனைக் கடலில் எறிவார்கள்.

இடிக்தாபோன்: (Dictaphone) இது ஒருவர் பேசுவதை நீண்ட உருளை வடிவான மெழுகில் பதிந்து கொண்டு அதை மறுபடி திருப்பி ஒலிப்ப தாகிய கருவி. இதன் அமைப்பு 1877இல் எடிசன் கண்டுபிடித்த போனோ கிராப் என்பதைப் பின்பற்றியது. இது கையச்சு அடிக்கவேண்டிய வாசகங்களைச் சொல்லுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கையச்சடிப் பவர் ஒலிபதியப்பட்டுள்ள உருளையிலிருந்து சொல்லப்படுவதைக் கேட்டுக் கையச்சடிப்பார்.

இடீசெல் எஞ்சின் (Diesel Engine) இது உள்ளெரி எஞ்சின். இது மோட்டார் வண்டிக்குப் பயன்படுத்தும் கல்ணெண்ணெயி (Petrol) லும் பார்க்க விலை குறைந்த பாரமான எண்ணெயை எரித்து இயங்குவது. இதற்கும் பொறி உண்டாகும் அடைப்பு (Plug) அல்லது வெடிக்கச் செய்யும் உபாயங்கள் இல்லை. எண்ணெய் மிகக்கூடிய அழுத்தத்திலிருக்கும் போது அது உருளைக்குள் (சிலிண்டருக்குள்) புகுத்தப்படுகிறது. இவ்வாறு உண்டான அழுத்தத்தினால் உண்டாகும் சூடு எண்ணெய்க்கு நெருப்பு மூட்டி வெடிக்கச் செய்கிறது. இவ்வாறு உண்டாகும் வெடி பி°டனைத் (Piston) தள்ளுகிறது. இவ்வகை எஞ்சினைப் பாரி° நகரில் பிறந்த உருடோல்வ் இடீசெல் (Rudolf Diesal) 1895ல் செய்தார். இன்று இடீசெல் எந்திரங்கள் உலோரிகள், (lorry) கப்பல்கள், புகைவண்டிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இராடர் (Radar) இரேடியோ அலைகளைக் கண்ணுக்குத் தெரியாத தொலைவிலுள்ள பொருள்மீது செலுத்த அவ்வலைகள் அப்பொருள்கள் மீது பட்டு மீள்வதால் அப்பொருள்களைக் காட்டக்கூடிய கருவி. இது யுத்தகாலத்தில் எதிரியின் விமானங்களைக் கண்டுபிடித்தற்கும், எதிரியின் தளங்களில் குண்டு வீசுவதற்கும் உதவியாகவிருந்தது. இது இப்பொழுது விமானங்களிலும் கப்பல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. வான ஆராய்ச்சியாளர் இதனுதவியால் பல புதிய செய்திகளை அறிந்துள்ளனர். (Ra - radio; D - detection; A - and ; R - ranging)

இரும்பு நுரையீரல்: (Iron Lung) தொண்டைக் கரப்பன், இளம்பிள்ளை வாதம் போன்ற சில நோய்களில் மூச்சுத் தசைகள் தமது சக்தியை இழந்து விடுகின்றன. அதனால் மார்பின் இயக்கம் நின்றுபோய் நோயாளி இறக்க நேரும். அப்பொழுது செயற்கை முறையாக மூச்சுவிடச் செய்யும் சாத னங்களில் இதுவுமொன்று. இதனை இடிரிங்கர் (Drinker) என்னும் மருத்துவர் 1928இல் கண்டுபிடித்தார்.

இலைனோ அச்சு: (Linotype) இது அச்சுக்களை வரி, வரியாகக் கோக்கும் எந்திரம். இதில் சாதாரண கையச்சுப் பெட்டியில் (Typewriter) இருப்பது போல எழுத்துக்கள் குறிக்கப்பட்ட பொத்தான்கள் கொண்ட வரிசைகள் இருக்கும். ஏதாவது ஒரு பொத்தாளை அழுத்தினால் அது சில கம்பி களை இயக்கி அச்செழுத்துக் கொண்ட பெட்டியிலிருந்து அப்பொத் தானுக்குள்ள எழுத்தை வெளியே எடுத்து ஒரு கால்வாய் வழியே ஓர் இடத்துக்குக் கொண்டு போகும். பொத்தானை அழுத்திக்கொண்டு வந்தால் எழுத்துக்கள் வரிசையில் அவ்விடத்தை அடையும். இவ்வாறு எழுத்துக்கள் சேர்ந்தவுடன் வார்ப்புப்பெட்டி என்பதற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு உருகிய அச்சு ஈயம் இருக்கும். வார்க்க வேண்டிய வரி இதனை அடைந்ததும் உருகிய ஈயம் ஒரு குழாயின் வழியாக எழுத்துக்களின் மேல் பாய்ந்து ஒரு வரி அச்சைத் தோற்றுவிக்கும். இவ்வாறு வரிவரியாக அச்சை வார்ப்பதினால் இதற்கு “இலைனோ டைப்” என்னும் பெயருண்டாயிற்று. இது ஐந்து திறமையுள்ள தொழிலாளர் செய்யும் வேலையைச் செய்யவல்லது.

ஈருருளி: (Bicycle) இது பான்டிரேயில் (Baron Drail) என்னும் செர்மனியரால் 1818இல் முதன் முதல் செய்யப்பட்டது. முதன் முதற்செய்யப்பட்ட ஈரு ருளியை ஒட்டுபவர் ஒருமுறை ஒரு காலாலும் மற்றமுறை மற்றக் காலாலும் நிலத்திலுதைந்து அதை உருட்டிக்கொண்டு சென்றார். இதன் பின் மரச்சக்கரங்களும் இரும்பு வளையமும் உள்ள எலும்பு உலுப்பி (bobe shaker) என்னும் வண்டி செய்யப்பட்டது. இதன்பின் பெரிய முன் சக்கரமும் சிறிய பின் சக்கரமுள்ள பென்னி பார்திங் (Penny farthing) என்னும் வண்டி செய்யப்பட்டது. இக்கால முறையான ஈருருளி 1885இல் செய்யப்பட்டது.

உருப்பெருக்கு ஒளிப்படம்: (Microphotography) இது அணுப்பெருக்கி ஆடி மூலம் சிறிய படங்களைப் பெரியனவாகப் படம் பிடிக்கும்முறை. இது சினிமாப்படம் பிடிக்கும் முறையில் மிகப் பயன்படுகிறது. 1880 முதல் இது விஞ்ஞானிகளால் கையாளப்பட்டு வருகிறது.

உள்ளெரி எஞ்சின் (internal Combustion engine): எரி பொருளின் இரசாயன சக்தி எந்திரத்தினுள்ளே எரிந்து வெடித்து வெளியாவதால் இயங்கும் எந்திரம். இச் சக்தியினால் விரிவடையும் வாயு எந்திரத்தை உருளச் செய்கிறது. இவ் வகையில் இயங்கும் எந்திரங்களில் முதன்மையானவை பெட்ரோல், இடீசெல் எந்திரங்களாகும். முதல் பெட்ரோல் எந்திரத்தை அமைத்தவர் ஒட்டோ (N.A.Otto) என்னும் பொறிவல்லாராவர். காள் பென்°, இடயம் பிளர் (Karl Benz and Daimler)என்போர் முதல் மோட்டார் வண்டியை 1885இல் செய்தனர்.

உரொக்கெட்: (Rocket) இதற்கு ஆகாச வாணம் என்பது பொருள். சீனர் இதனை கி.பி.1200க்கு முன் அறிந்திருந்தனர். இது வேடிக்கைக்கு மாத்திர மல்லாமல் கப்பல், விமானங்களுக்கு சைகை (சிக்நல்) காட்டவும், கப்பல் களுக்கு வடக்கயிற்றைக் கொண்டுபோகவும் வேறு பலவகைகளிலும் பயன்படுகிறது. இப்பொழுது போரிற் பயன்படுத்தும் ஏவு படைக் கலங்கள் (guided missiles) உரொக்கெட் எனப்படுகின்றன. இவற்றுள் திண்மையான எரிபொருள்களுக்குப் பதில் திரவப் பிராணவாயு போன்ற வாயுக்கள் அடித்துச் செலுத்தப் பட்டிருக்கும். இவற்றின் செலவை இரேடியோ அலைகளால் கட்டுப்படுத்தலாம். செர்மனியர் பயன்படுத்திய பறக்கும் குண்டு (v.2) இவ்வகையினது.

எக்°-கதிர்கள்: இது உரொன்ட்சென் (Roentgen) என்பவரால் 1895-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒளிக்கதிர். இது ஒளிபுகாப் பொருள்களை உருவிப் பாயக் கூடியது. இதன் தன்மைகள் நன்றாக அறியப்படாமலிருந்தமை யின் இதற்கு எக்° கதிர் (X-rays) எனப் பெயரிப்பட்டது. உடற் கோளாறுகள் முறிவு தறிவுகளைப் ஒளிப்படம் பிடித்துப் பார்ப்பதற்கு மருத்துவத்துறையில் இது பெரிதும் பயன்படுகிறது.

எந்திரக் கலப்பை: கல்லெண்ணெயால் ஓட்டப்படும் எந்திரக்கலப்பையை பேக்கர் (Burgher) என்னும் அமெரிக்கர் 1889-ல் செய்தார். ஹென்றிபோட் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய எந்திரக் கலப்பைகளை வியாபார முறையில் செய்தார்.

எந்திரத்தறி (Fly Shuttle) யோன் கே (John kay) யால் 1733-ல் கண்டுபிடிக்கப் பட்டது. இது ஊடுநூலை கையாலெறிந்து வாங்குவதற்குப் பதில் நெம்புகோலால் செய்யக்கூடிய அமைப்பு. இதனால் சாதாரண நெசவில் நெசவாகக்கூடிய துணியிலும் பார்க்க இதில் இருமடி துணி நெய்யக் கூடியதாக விருந்தது.

எலிகோப்தர் (Helicopter) காற்றிலும் பார்க்கப் பாரங்கூடிய பறக்கும் எந்திரம். இதற்கு இறக்கைகள் இல்லை; மூன்று அலகுகளாலான சுழலுங்காற்றாடி மேலே உண்டு. முதன் முதல் (1923இல்) இவ்வகை விமானத்தில் பறந்தவர் பிரெஞ்சுப் பொறிவல்லாராகிய உரோல்டி பா°கரா (Raoul de Pascara) இதனால் நேர்குத்தாக இறங்கவும் எழும்பவும் முடியும். இதன் வாற்புறத் திலும் மூன்று அலகுகளாலான சிறிய சுழலும் காற்றாடியுண்டு. விமான நிலையங்களில்லாத இடங்களிலும் இதனால் இறங்கவும் எழும்பவும் முடியும்.

எறிகுண்டு (Grenade): 25 யார் தூரம் வரையில் எறியப்படும் எறிகுண்டு. குண்டு வெடிக்குமிடத்திலிருந்து 30 அடி தூரத்திலுள்ள பொருள்களெல் லாம் அபாயத்துக்குள்ளாகும். இது கைகலப்புப் போரில் எதிரிகள் மீது எறியப்படுவது.

ஏரியல்: (Aerial) வானொலிக்கருவியின் பகுதி; சூழ்ந்துள்ள இடங்களுக்கு மின் சக்தியைப் பரப்புவது. இது காப்பு இடப்பட்ட (Insutaled)கம்பி அல்லது கம்பிச்சுருளாகவிருக்கும்.

ஒட்டோ கைரோ (Autogyro) காற்றிலும் பாரமான பறக்கும் எந்திரம். இது எலிக்கோப்தர் (Helicopter) விமானத்தைப்போல நேர்குத்தாக எழும்ப வும் இறங்கவும் கூடியது. இதன் இறக்கைகள் உறுதியாக இருப்பதற்குப் பதில் சுழலுக்கூடியவை. இது இறங்குவதற்கு அதிக இடம் வேண்டிய தில்லை. இது வீட்டுக் கூரைகளிலும் இறங்கக்கூடும். இதனை முதலிற் செய்தவர் Jaun de la cierva என்னும் இ°பானியர் (1924)

ஒலிபரப்புதல்: (Broadcasting) வானொலி நிலையத்திலுள்ள கருவி மூலம் செய்திகளையும் இசைகளையும் பரப்புதல். இவ்வாறு ஒலி பெருக்கக் கூடும் செய்திகளை வாங்கி வெளிவிடக்கூடிய கருவி இரேடியோப் பெட்டி (Receiving set) எனப்படுகிறது.

ஒலிபெருக்கி: (Loud Speaker) இது ஒலியை மின்சார சக்தியாக மாற்றி அதைத் திரும்ப அதே ஒலியாக உரக்கக்கேட்கும்படி மாற்றக்கூடிய கருவி.

ஒலிப்பதிவுள்ள சினிமாப்படம்: (Sound film): சினிமாப்படக் காட்சி தொடங்கிய காலம் முதல் படங்களுக்கு ஒலியை இணைப்பதற்கு வேண்டிய முயற் சிகள் செய்யப்பட்டு வந்தன. தொடக்கத்தில் ஒலியில்லாத பில்ம்களுக்கு கிராமபோன் தட்டுகள் மூலம் ஒலி உதவப்பட்டது. பில்மின் ஒரு ஒரத்தில் ஒலி பதியப்படுகிறது. படம் திரையில் காட்டப்படும் போது ஒலி மீட்பு ஒலியாக வெளிப்படுகிறது. இது திரைக்குப் பின்புறத்திலிருந்து வருமாறு ஒலிபெருக்கி மூலம் வெளியிடப்படுகிறது.

உருப்பெருக்கும் ஆடி (Magnifying glass): இது ஒரு குவிலென்°. இதனூடாக ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருள் பெரிதாகத் தெரிகிறது. இதனைச் சீனரும் பிறரும் முற்காலத்தில் அறிந்திருந்தனர்.

கடல் தந்திக்கம்பி இணைப்பு: (Cable-laying) முதல் தந்தி கலே° (Calais) உடோவர் (Dover) என்னும் இரு இடங்களுக்குமிடையில் 1850இல் போடப்பட்டது. இன்று ஏறக்குறைய 4,50,000 கடல்மைல் தூரத்துக்குக் கண்டங்களை இணைத்துகொண்டிருக்கும் கடல் தந்திக்கம்பிகள் போடப்பட்டுள்ளன.

கடல்விமானம்: (Sea Plane) தரை விமானங்களுக்குக் கீழே சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். கடல் விமானங்களுக்குச் சக்கரங்களுக்குப் பதில் மிதவைகள் இருக்கும். இவற்றுக்குக் கடலிலிறங்கவும் கடலி லிருந்து மேலே பறக்கவும் முடியும்.

கடிகாரம்: காலமளக்குங் கருவி. இதன் இயங்கு சக்தி பளு, வில் (Spring) அல்லது மின்சாரத்தினால் உதவப்படலாம். முற்காலத்தில் வழங்கிய மணற் கடிகாரத்தில் மணலின் பளுவே இயங்கு சக்தியாக விருந்தது. பளுவைக் கொண்டு இயங்கும் கடிகாரம் 2ஆம் சில்வெ°தரால் (Pope Silverster II) செய்யப்பட்டதென (கி.பி. 1,000) நம்பப்படுகிறது. இக் கால வகையான சிறுகடிகாரம் செர்மனியில் நூரெம்பெக் என்னும் இடத்தில் வாழ்ந்த ஒருவரால் 15ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது.

கேமிரா: (Camera) ஒரு பக்கத்தில் சிறு துவாரமுள்ள பெட்டி. துவாரத்தின் வழியே வெளிச்சம் சென்று காட்சியின் நிழலைப் பெட்டியின் அடுத்த சுவரில் தலைகீழாக விழச்செய்யும். இவ் வகைக் கமிராவை இலி னார்டோ டாவின்சி (Leonardo da vinci) என்னும் இத்தாலியர் 1,500-ல் கண்டுபிடித்தார். இதிலிருந்து இன்று படம்பிடிக்கும் வகையான கமிரா வளர்ச்சியடைந்தது.

கல்வனிக் மின்கல அடுக்கு: (Galvanic Battery) இது வோல்டா (Volta) என்னும் இத்தாலியரால் 1800இல் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு வகை உலோ கங்கள் அமிலத்தோடு சம்பந்தப்படும்போது மின்னேற்ற முண்டாகிற தென்னும் அடிப்படையைக் கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மின்கலத்திலும் கந்தக அமிலத்தில் நனைந்த துணியினால் மறைக்கப்பட்ட நாக, செம்புத் தகடுகள் வைக்கப்படும், இவ்வகை மின்கல அடுக்குகள் பல ஒன்றாக இணைக்கப்படும். இக்கால அக்குமி லேட்டர்களுக்கு முன் வழங்கியவை இவ்வகை மின்கல அடுக்குகளே.

கற்பரப்பிய வீதி: பாபிலோனியரும் இந்தியரும் கி.மு. 2,000 வரையில் கற்பரப்பிய வீதிகளை அமைத்தனர். கிரேக்கரும் அவ்வகை வீதிகளை அமைத்தனர். உரோமர் இராணுவத் தேவைகளுக்காக வீதிகளமைக்கும் முறையைத் திட்டப்படுத்தினர். பிரிட்டனில் உரோமர் அமைத்த வீதிகள் 16அடி அகலமுள்ளன. இக்கால முறையான வீதியமைப்பு 1,800-ல் தொடங்கியது.

காற்றுக்கொள்ளும் சக்கர வளையங்கள்: ஈருருளி (பைசிக்கிள்) மோட்டார் வண்டி விமானங்களுக்குப் பயன்படுத்தும் காற்றுக்கொள்ளும் வளை யங்கள் இடன்லொப் (Boyd Dunlop) என்னும் இ°கொத்தியரால் 1888இல் கண்டுபிடிக்கப்பட்டது.

குளிர் காப்புப்பெட்டி: (Refrigerator) தனது உள்வெளியிலுள்ள வாயுவைக் குளிரச்செய்து வெப்பத்தை அகற்றக்கூடிய எந்திரம். இது உணவுப் பொருள்களைக் கெடாமலும் குளிராகவும் வைத்திருப்பதற்குப் பெரிதும் பயன்படுகிறது.

சறுக்கு விமானம்: (Glider) இது எந்திரமில்லாத விமானம். காற்றாடிப் பட்டத்தைப் போல மேலே பறக்கும்படி இதனை இழுத்துப்பிடிக்கும் கயிற்றை வெட்டி விட்டால் இது காற்றிற் பறந்து செல்லும்.இவ்வகைச் சறுக்கி விமானத்தை முதன் முதல் செலுத்தியவர் ஒட்டோ லிலிந்தல் (Otto Lilienthal). இவர் 1896இல் சறுக்கு விமானத்தோடு விழுந்து மரண மானார். சறுக்கு விமானம் 6 மணி நேரத்தில் 195 மைல் பறந்திருக்கிறது.

சினிமாப்படக்காட்சி: (Cinematograph) ஒரு தொடர்பான படங்களை செல்லு லோயிட் பில்மில் விரைவாகப் பிடித்து அவற்றைத் திரையில் விழும்படி யாகக் காட்டுவது. தனித்தனிப்படங்கள் விரைவாக ஒடிக் கொண்டிருப்ப தால் படங்கள் உண்மையில் நடமாடுவதுபோலத் தோன் றும். ஒரு தோற்றம் கண்ணில் பட்டு மறைந்த பின்பும் வினாடியில் ஒரு பகுதி நேரம் கண்ணுக்குப் புலனாகிக் கொண்டிருக்குமாதலின் வேகமாக ஓடும் படங்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருப்பதாகத் தோன்றும். 1926இல் இப்படங்களுக்கு ஒலியையும் சேர்த்துப் பயன்படுத்தும் முறை அறியப் பட்டது. 1890இல் செல்லுலோயிட் பில்ம் கண்டுபிடிக்கப்பட்டது. சினிமா படம் பிடிக்கும் கமிராவை உலூமயரி (Lumiere) என்னும் பிரான்சியரும் அவர் சகோதரரும் 1895இல் செய்தார்கள்.

சேவ்டி லாம்ப்: (Safety Lamp) இடேவி (Humphry Davy) என்பவரால் 1815ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுரங்கங்களில் வேறு வகை விளக்குககளைப் பயன்படுத்துவதால் தீப்பிடித்து அபாய முண்டாவதைத் தடுப்பதற்காகச் செய்யப்பட்டது. இது இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தட்டச்சு: (Typewriter) இலிதாம் சோல்° (Lithamsholes) என்பவர் முதல் தட்டச்சை 1868-ல் செய்தார். இது இரெமிங்டன் கம்பனியாரால் வியாபாரமுறையில் செய்யப்பட்டு வருகிறது.

தந்தி: புள்ளி, கீறு என்னும் அடையாளங்களைக்கொண்டு மின்சாரக் கருவிமூலம் கொடுக்கப்படும் செய்தி முறை. இதன் “கோட்டு” மோர்° என்னும் அமெரிக்கரால் ஒழுங்குபடுத்தப்பட்டது. இன்று தந்தி பெரும் பாலும் தெலி பிரிண்டேர்° (Teleprinters) மூலம் நடைபெறுகிறது.

தாங்கிகள்: (Tanks) முற்கால நைட்டுகள் (Knights) தமது உடலைப் பலவகை உலோகக் கவசங்களால் மறைந்தார்கள். தாங்கிகள் என்பன கவசந்தாங்கிய மோட்டhர் வண்டிகள். தாங்கிகளுக்குச் சக்கரங்களுக்குப் பதில் கம்பளிப் புழுவின் கால்போன்ற சங்கிலி அமைப்பு உண்டு. அவை பள்ளம் மேடு உள்ள வழிகளால் செல்லக்கூடியவை. நைட்டுகளின் கவசங்களின் வளர்ச்சியே தாங்கியாகும்.

திசைகாட்டி: (Compass) திசை காட்டுங்கருவி. காந்தமேற்றப்பட்ட ஊசியைத் தடையின்றிச் சுழலும்படி நடுவில் சமன்செய்து வைத்தால் அதின் ஒரு முனை காந்த துருவத்தை (வடக்கை) நோக்கும். மார்க் கோப்போலோ சீனாவிலிருந்து திரும்பியபின் திசையறி கருவியைப்பற்றி ஐரோப் பியருக்குத் தெரிவித்தான். ஊசி நேர் வடக்கைக் காட்டாது.காந்த துருவத்தைக் காட்டுகின்றதென்பது கொலம்பசால் அறியப்பட்டிருந்தது.

திராம்வே: (Tramway) புகைவண்டித் தொடரைப் போலத் தண்டபாளத்தில் செல்லும் போக்குவரத்துச் சாதனம். இது விரைவில் மறைந்து வருகின் றது. குதிரைகளால் இழுக்கப்படும் திராம் வண்டிச் சேவை நியூயோக்கில் தொடங்கிற்று. 1881இல் மின்சாரத்தினால் செலுத்தப்படும் திராம் சேவை சேர்மனியில் தொடங்கியது. குதிரைகளாலிழுக்கப்படும் திராம்வே இலண்டனில் 1905வரை இருந்தது. திராம்வேயின் இடத்தை இப்பொழுது துரொல்லி ப°கள் (Trolley Bus) எடுத்து வருகின்றன.

தெலிபோன்: மின்சாரக் கம்பிமூலம் ஒலிகளைச் செலுத்துவதற்குள்ள கருவி. இது ஒலியை மின்சார அலையாக மாற்றி மற்றப் பக்கத்தில் மறுபடியும் ஒலி அலைகளாக வெளியிடுகிறது. அலக்சாந்தர் கிரகாம்பெல் என்பவர் இதனை 1876இல் கண்டுபிடித்தார்.

தையல் எந்திரம்: இது எலிய° ஹோ (Elias Howe) என்னும் அமெரிக்கரால் 1845-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைப் பின்பற்றிச் சிங்கர் (I.M.Singer) தையல் எந்திரங்களைச் செய்தார். இப்பொழுது வழங்கும் தையல் எந்திரங்கள் இவ்வெந்திர அமைப்பைப் பின்பற்றிச் செய்யப்படுவன.

தொலைக்காட்சி: (Television) நிழல் வடிவத்தை இரேடியோ அலைகள் மூலம் செலுத்துதல். தொலைக்காட்சி முதன்முதல் யோன்பயாட் என்பவரால் 1926இல் காட்டப்பட்டது. முதல் தொலைகாட்சி நிலையம் இலண்டனி லுள்ள அலெக்சாண்டர் பலே° என்னுமிடத்தில் 1936இல் ஆரம்பிக்கப் பட்டது. வானொலிப் பெட்டியில் நாம் ஒலியை மாத்திரம் கேட்கிறோம். தொலைக் காட்சிப் பெட்டியில் ஒலியைக் கேட்பதோடு உருவங்களை யும் காண்கின்றோம்.

தொலைநோக்கி: (Telescope) தொலைவிலுள்ள பொருள்களைக் கிட்ட இருப்பதாகக் காட்டும் ஆடி. இது முதன் முதல் உரொசர் பேகன் (Roger Bacon) என்பவரால் 13ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. கலிலியோ 1609இல் செய்த தொலைநோக்கியின் அமைப்பைப் பின்பற்றி இக்காலத் தொலை நோக்கிகள் செய்யப்படுகின்றன.

நிலை மின்காட்டி: (Electroscope) மின்னேற்றம் இருப்பதை அறிவிக்கும் கருவி. இது காவெண்டிஷ் (Hentry Carvendish) என்னும் ஆங்கில விஞ்ஞானியால் 1790-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

நீர்மூழ்கி: நீருக்குக் கீழால் செல்லக்கூடிய அமைப்பில் செய்யப்பட்ட கப்பல். இக் கால முறையான நீர் மூழ்கி ஹொலண்ட் என்னும் அயர்லாந்து வாசியால் அமெரிக்காவில் 1875-ல் கட்டப்பட்டது. நீர்மூழ்கி நீரில் மூழ்கியிருக்கும் போது உள்ளே இருப்பவர் பெரி°கோப் (Periscope) என்னும் கருவி மூலம் நீர் மட்டத்திலுள்ளவற்றைப் பார்க்கலாம்.

நீர்மூழ்கு கூடு: (Bathyspher) இது கடலாழத்திற்குச் சென்று அங்குள்ள உயிர் வகைகளை ஒளிப்படம் பிடித்து ஆராய்ச்சி செய்வதற்காக வில்லியம் பீபி (Dr.William Beebe)என்னும் அமெரிக்கர் பயன்படுத்திய உருண்டை வடிவான உருக்கு அறை.

நீர்வீழ்ச்சி மின்சார நிலையம்: (Hydro-Electric Power Station) இது முற்கால நீர் ஆலை (Wind Mill)யின் திருந்திய அமைப்பு; அணைக்கட்டு நீர்த் தேக்கங்கள் அமைத்து அவற்றின் நீர்வீழ்ச்சியினாலும்,ஆற்றுநீர் வீழ்ச்சி யினாலும் சக்கரங்களை இயங்கச் செய்து மின்சார சக்தியை உற்பத்தி யாக்கும் சக்கர அமைப்புள்ள இயந்திர நிலையம். இதனைக் கண்டுபிடித் தவர் போர்னிரன் (Beniot Fourneyron) என்னும் பிரான்சியர் (1827).

படத்தந்தி: படங்களைத் தந்திமூலம் அல்லது இரேடியோ மூலம் அனுப்பு தல். இதனை கண்டுபிடித்தவர் ஆதர் கோண் (Arthur Korn) என்னும் செர்மன் விஞ்ஞானி (1904)

பரசூட்: குடைவடிவான துணி; விமானத்திலிருந்து குதிப்பவர்கள் பயன் படுத்துவது. குதிக்கின்றவரின் பாரத்தினால் பரசூட் விரிந்து காற்றின் தடுப்பை அதிகப்படுத்துகிறது. ஒரு மனிதனைக் கீழே கொண்டுவரும் பரசூட் 24 அடி விட்டமுள்ளதாகவிருக்க வேண்டும்.

பை பிளேன்: (Biplane) ஒரு இறக்கைக்கு மேல் இன்னொரு இறக்கையுள்ள விமானம்.

மின்சாரம் ஆக்கி: (Electric Generator) எந்திர சக்தியை மின்சார சக்தியாக மாற்றுங் கருவி. இது இடைனமோ எனவும் பெயர் பெறும் இதனை முதலிற் செய்தவர் கிராம் (Gramme)என்னும் பிரான்சிய பொறிவல்லார் (1873). ஒரு காந்தத்தின் துருவங்களிடையே உள்ள பரப்பில் ஒரு சுருள் கம்பி வேகமாகச் சுழல்வதால் மின்சாரம் உண்டாகிறதென்னும் பாரடே (Faraday) கண்டுபிடித்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எந்திர சக்தி உயரத்திலிருந்து விழும் நீர் அல்லது நீராவி, அல்லது எண்ணெய் எந்திரங்களால் உதவப்படலாம்.

மின்காந்தம்: (Electromagent) ஒரு இரும்பைச் சுற்றி காப்பிடப்பட்ட கம்பியைச் சுற்றிக் கம்பிக்கு மின் ஏற்றினால் இரும்பு காந்த சக்தியடைகிறது. மின் னோட்டம் நின்றவுடன் இரும்பு காந்தத் தன்மையை இழந்து விடு கின்றது. மின்காந்த முறையைக் கண்டுபிடித்தவர் ஆங்கில விஞ்ஞானி யாகிய இ°ரூர்சியன் (Sturgeon) ஆவர் (1820).

மின்சாரமணி: (Electric Bell) யோசெப் ஹென்றி என்னும் அமெரிக்கரால் 1840இல் கண்டுபிடிக்கப்பட்டது. இரும்புத் துண்டொன்றைச் சுற்றியுள்ள கம்பியில் மின்சாரம் ஓடும்போது இரும்பு காந்தத்தன்மை அடைகின்ற தென்னும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு இது கண்டுபிடிக் கப்பட்டது. ஒரு பொத்தானை அழுத்தும்போது மின்சாரத்தின் சுற்றோட் டம் ஒரு முறை முடிவடைகிறது. இரும்பு காந்தத்தன்மையடைந்து மணியைத்தட்டும் சுத்தியல் போன்ற பகுதியுடைய இன்னொரு இரும்பை இழுக்கிறது. சுத்தியல் மணியைத் தட்டுகிறது. அவ்வாறு அடிக்கும்போது அது ஒரு சங்குப்புரி ஆணிக்கு வெளியே வந்து மின்சார ஓட்டத்தை வெட்டுகிறது. ஆகவே மறுபடியும் அது பழைய நிலைக்கு வருகிறது. பின் காந்தத்தால் இழுக்கப்பட்டு மணியில் தட்டுகிறது. இவ்வாறு நொடி யில் பலமுறை நடைபெறும். மின்சாரத்தின் சுற்றோட்டத்துக்கு பாட்டரி களை அல்லது மின்சார நிலையத்திலிருந்து வரும் மின்சாரத்தைப் பயன்படுத்தலாம்.

மின்சார விளக்கு: மின் சக்தியைப் பலவகைகளில் வெளிச்சமாக மாற்றலாம். (1) வில்விளக்கு முறை. ஹம்பிரிடேவி (Humpry Davy) இரண்டு கார்பன் களில் பாயும் மின்சாரம் பிரபையான வெளிச்சத்தை உண்டாக்குகிறதென 1870இல் கண்டுபிடித்தார். இவ்வகை வெளிச்சங்கள் இப்பொழுது சினிமாப்பட நிழல் வீழ்த்தி(Projectors)களிலும் துருவு விளக்கு(Search light)களிலும் பயன்படுத்தப்படுகின்றன. (2) மின்சார பல்ப் விளக்கு பாதரச ஆவி நிரப்பப்பட்ட குழல் விளக்கு முதலியன வேறு வகை மின்சார விளக்குகளாகும்.

மின் முலாம் பூசுதல்: (Electroplating) மின்சாரத்தின் உதவியால் ஒரு உலோகத்துக்கு மேல் இன்னொரு உலோகக் கரைவைப் பூசுதல் இப்பெயர் பெறும். இவ்வாறு செய்யும் முறை இடேவி (Davy)என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இரும்புப் பொருள்களுக்கு மெல்லிய வெள்ளிப் படலம் அல்லது வேறு உலோகப் படலம் பூசலாம். மின் ஓட்டம் உலோகக் கரைசல்களைச் சிறு துகள்களாகக் கொண்டு சென்று மட்டமாக ஒட்டவைக்கின்றது.

மைக்ரோ பில்ம்படிகள்: (Microfilm Reproduction) இப்பொழுது அரிய நூல்கள், சாசனங்கள், கடிதங்கள் முதலியவற்றை அல்லது புத்தகங்கள் முழுமையிலுமுள்ள பக்கங்களை 35 மில்லி மீட்டர் பில்ம்களாக படம் பிடித்து படம் காட்டும் கருவியால் திரையில் விழச் செய்து காட்டப் படுகின்றன. (மில்லி மீட்டர் 0.40 அங்குலம்.)

மொனோடைப் எந்திரம்: (monotype) மொனோடைப் முறையில் அச்சு களைக் கோப்பதும் எழுத்துக்களை வார்ப்பதும் ஒரு எந்திரத்தில் செய் யப்படுவதில்லை. இந்த எந்திரத்தில் எழுத்துக்கள் குறித்த பொத்தானை அழுத்த நீண்ட காகிதச் சுருளில் ஒவ்வொரு எழுத்துக்கும் சரியாக ஒரு துவாரம் ஏற்படும். இவ்வாறு துவாரங்கள் கொண்ட சுருளை வார்பட எந்திரத்தில் மாட்டிவிட்டால் துவாரங்களுக்கேற்ற எழுத்துக்களைத் தனித்தனியே வார்த்து வரி வரியாகத் தக்கபடி சேர்த்துக் கொண்டு வரும்.

மொனோ பிளேன்: (Monoplane) ஒரு சோடி (பக்கத்துக்கொவ்வொரு) இறக்கையுடைய விமானம்.

மோட்டார் வண்டி: பெட்ரோல் எந்திரத்தினால் ஓட்டப்படும் மோட்டார் வண்டி சீக் பிரைட் மாக்கு° (Siegfried Marcus) என்னும் வீயன்னாவாசி யால் 1875இல் ஓட்டப்பட்டது; 10 ஆண்டுகள் கழித்து கொத்லியப் தைமிளர் (Gottlib Daimler) என்னும் பொறிவல்லார் முதல் மோட்டார் சைக்கிளைச் செய்தார்.

மோர்° கோட்: (Morse Code) மோர்° என்னும் அமெரிக்கரால் 1838இல் தந்தி பேசுவதற்கு வகுக்கப்பட்ட குற்றும், கீறு மடங்கிய குறியீடுகள்.

மகிர°கோப்: (Microscope) அணுபெருக்கி (பூதக்கண்ணாடி) என்னும் இது சிறிய பொருள்களை 2,000 மடங்கு பெருப்பித்துக் காட்டக் கூடிய கருவி. இதனை ஹான்°, யான் சென் (Hans and Janssen) என்னும் இரண்டு ஒல்லாந்து வாசிகள் 1590-ல் கண்டுபிடித்தார்கள்.

யெட் எஞ்சின்: (Jet Engine) ஆகாச வானம் மேலே எழும்புதல், துப்பாக்கி வெடிக்கும்போது பின்புறம் தள்ளுதல் என்னும் கொள்கையை அடிப் படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட விமான எந்திரம். விட்டிள் (Sir Frank Whittle) என்பவரால் 1930இல் கண்டுபிடிக்கப்பட்டது. 1941முதல் இவ்வகை எந்திர அமைப்புள்ள விமானங்கள் வழங்குகின்றன. இவ் வெந்திரம் முன் பகுதியினால் காற்றை உறிஞ்சி நெருக்கி எரிபொருள் களோடு கலந்து எரிந்து உண்டாகும் விரிந்த வாயுவைப் பின்புறத்தினுள்ள கூம்பிய குழாய் வழியாகத் தள்ளுகிறது. ஆகாசவாணம் வாயுவைக் கீழே தள்ள அது எப்படி மேலே எழும்புகிறதோ அதே போல் இதுவும் விமானத்தை மேலே தள்ளுகிறது.

வாக்கம் கிளீனர்: (Vacuum cleaner) இது வீட்டுத்தரை, தளபாடங்கள், கம்பளம் முதலியவற்றைப் காற்றோடு தூசியை இழுத்துச் சுத்தஞ் செய்யும் எந்திரம். இது காற்றை இழுக்கும் குழாய் மின்சாரத்தினால் வேலை செய்கிறது. இது சிசில் பூத் (Cecil Booth) என்னும் ஆங்கிலரால் 1901இல் கண்டுபிடிக்கப்பட்டது.

வாக்கம் புட்டி: இது உணவுகள் திரவப் பொருள்களை வைப்பதற்குள்ள புட்டி; குளிரை அல்லது வெப்பத்தை அதிகம் இழுக்காதபடி காப்பாற்று வது. இதன் பக்கங்கள் இடையே வெளியுள்ள இரண்டு கண்ணாடிச் சுவர்களாலானவை. இடையேயுள்ள வெளிக் காற்றகற்றப்பட்டு வெற்றிட மாகவிருக்கும். இதனை சேர் யேம்° திவார் (Sir James Dewar) என்னும் இ°கொத்திய விஞ்ஞானி 1896இல் கண்டுபிடித்தார்.

வாயுவிளக்கு: (Gaslight) நிலக்கரி வாயுவை விளக்கினால் எரிக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் வில்லியம் மார்டொக் (William Mardock). இவர் இதனை 1792இல் தனது வீட்டில் பயன்படுத்தினார். பத்து ஆண்டுகளின் பின் இது இலண்டன் வீதிகளில் விளக்குகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் இதுவே செயற்கை வெளிச்சமாகப் பயன்பட்டது. 1855இல் புன்சென் (Bunsen) என்னும் சேர்மன் விஞ்ஞானி விளக்குக் காயை (Burner) கண்டுபிடித்தார். இதியிருந்து வெள்ஒளி கொடுக்கும் வலைத் துணித்திரி (Mantle) கண்டுபிடிக்கப்பட்டது.

விமானம்: (Aeroplane) காற்றிலும் பாரங்கூடிய பறக்கும் சாதனம்; உள் எரி எந்திரம் அல்லது ‘யெட்’எந்திரத்தினாலியங்குவது. இவ்வகை விமா னத்தை முதலில் பறக்கச் செய்தவர்கள், ஒர் வில்லி (Orville), வில்பர் இரைட் (Wilbur Wright) என்னும் இரு அமெரிக்க சகோதரர்கள். 1903இல் இதனைப் பறக்கவிட்டபோது இது 12 வினாடிகள் பறந்தது. இப்பொழுது சில விமானங்கள் ஒலி செல்லும் வேகத்தில் (மணிக்கு 760 மைல்) பறக் கின்றன. 100 பேரைக் கொண்டு செல்லக்கூடிய இராணுவ விமானங்களும் பிரயாணி விமானங்களுமுள்ளன.

வெப்பமானி: வெப்பத்தை அளக்கும் கருவி. வெப்பமானி அளவில் பாரன் ஹேயிட், சென்டிகிரேட் என்னும் இருவகை அளவைகள் வழங்கும். பாரன் ஹேயிட் அளவையில் பனிக்கட்டி உருகும் நிலை 320. தண்ணீர் கொதிக்கும் நிலை 2120. செண்டிகிரேட்டில் உறையும் நிலை 00 கொதி நிலை 1000.

உலோகம்
அச்சு உலோகம்: (Type metal) அண்டிமணியோடு காரீயமும் வெள்ளீயமும் கலந்த உலோகம் (காரீயம் 60%, அண்டிமனி, 30%,வெள்ளீயம் 10%).

அண்டிமனி: (Antimony) ஒரு வகை நீல வெள்ளை உலோகம். நீரிலும் பார்க்க 6.7 மடங்கு பாரமானது. குளிரும்போது சுருங்குவதற்குப் பதில் விரியும் தன்மையுள்ளது. இது அச்சு எழுத்து வார்க்கும் உலோகத்துடன் கலப்ப தற்கும் வேறு வார்ப்பு உலோகக் கலவைகளோடு கலப்பதற்கும் பயன் படுகிறது.

அலுமினியம்: வெண்மையான துரு வேறாத இலேசான உலோகம். இதன் பாரம் இரும்பின் பாரத்தில் 1/3 பங்காகும். இது பெரும்பாலும் சமையற் பாத்திரங்கள் செய்யவும் வார்ப்புப் பொருள்கள் செய் யவும் பயன்படு கிறது. இது வேறு உலோகங்களோடு கலந்து விமான உறுப்புக்கள் செய்யப்படுகின்றது. அயர்லாந்து, பிரான்சு, வட ஆப்பிரிக்கா, கிழக் கிந்தியத் தீவுகள், கனடா, உருசியா, இந்தியா முதலிய நாடுகளிற் கிடைக் கின்றது.

இரசக் கலவை: (Amalgum) பாதரசத்தோடு வேறொரு உலோகஞ் சேர்ந்த கலவை. வெள்ளி, தங்க மண்ணில் அவ்வுலோகங்கள் இரசத்தைக் கொண்டு பிரித்தெடுக்கப்படும். இரசம் இவ்வுலோகத் தூள்களோடு சேர்ந்து இரசக் கலவையாக மாறுகிறது. இதனைச் சூடாக்கும்போது இரசம் ஆவியாக மாறிப் போய்விட உலோகத் தூள்கள் தங்குகின்றன.

இரும்பு: மனிதனுக்கு வேண்டிய உலோகப் பொருள்களில் மிக முக்கிய மானது. இதில் வார்ப் பிரும்பு, தேனிரும்பு, எஃகு என மூன்று பிரிவுக ளுண்டு. வார்ப்பிரும்பில் 4% கார்பன் உள்ளது. இது கடினமானதன்று, எளிதில் உடையக் கூடியது.கனி இரும்பில் கார்பன் குறைவாக விருக்கும். இது காய்ச்சித் தட்ட ஏற்றது. எஃகு அல்லது உருக்கு என்பது இரும்பும் கார்பனுங்கொண்ட கலவை. இதில் கரி 1.7% அளவிலிருக்கும். இது மிகக் கடினமானது; கார்பனே இதற்குக் காரணம்.

இன்வர்: (Invart) நிக்கலும் உருக்கும் கலந்த கலவை. இதன் வெப்பப் பெருக்கம் மிகக் குறைவாக விருப்பதால் இது பெண்டுலங்களிலும், கடிகாரங் களிலும் அளவு கருவிகளிலும் பயனாகிறது. சார்ல° கில்லோம் (Charles Giallaume) இதனைக் கண்டுபிடித்தார்.
கலப்பு உலோகங்கள்: (Alloy) வயிரமேற அல்லது மெதுவடைய ஒன்றோடு ஒன்று கலந்து உருக்கப்பட்ட உலோகங்கள் கலப்பு உலோகங்களாகும்.

துருவேறாத எஃகு: (Stainless steel) உருக்கோடு குரோமியங்கலந்த கலவை. இது கறுக்காது. பளபளப்பாக விருக்கும். இது பெரும்பாலும் பாத்திர வகைகள் செய்யப்பயன்படுகிறது. சத்திர வைத்தியத்துக்கு வேண்டிய கருவிகளும் இதனாற் செய்யப்படுகின்றன.

பாரியம்: ஒரு உலோத் தனிமம். இது வர்ணக் கைத்தொழிலுக்கும் சாயங்கள் (Paints) செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

வெண்கலம்: செம்பும் வெள்ளீயமுங் கலந்த கலவை. செம்போடு அ திக வெள்ளீயத்தைக் கலந்த கலவை (30-40%) இ°பெக்குலம் உலோகம் (Speculum Metal) எனவும்,வெண்கலத்தோடு சிறிது நாகத்தைக் சேர்த்துச் செய்யும் கலவை துப்பாக்கி வெண்கலம் (Gun Metal) எனவும்படும்.

இரசாயனம் விஞ்ஞானம் முதலியன
அகர்: (Ager) கிழக்கு நாடுகளிலுள்ள செந்நிறக் கடற்பாசி ஒன்றிலிருந்து எடுக்கப்படும் பசைபோன்ற ஒரு பொருள். இது நிலையான வடிவமில் லாத பொருளாயிருப்பினும் தெளிவான தோற்றமுள்ளது. இது தூளாக அல்லது கட்டியாகக் கடைகளிற் கிடைக்கும். இது நீரை அதிகம் உட் கொண்டு பெருக்கிறது; வெந்நீரில் எளிதிற் கரைகிறது. உணவிலும் பல வகை மிட்டாய்களிலும் பாலிலிருந்து செய்யப்படும் பொருள்களிலும் இது சேர்க்கப்படுகிறது.

அசிட்டிக் அமிலம்: (Acetic Acid) இது முற்காலம் முதல் காடி என்னும் பெயரினால் அறியப்பட்டுள்ளது. இது வினாகிரியிலும் வேறு பல பொருள்களிலுமிருந்தும் செய்யப்படுகிறது. இது பெரும்பாலும் உணவுப் பொருள்களைக் கெடாமல் பாதுகாக்கும் முறைகளுக்கும், செயற்கைப் பட்டுச் செய்வதற்கும் வேறு பலவகைகளுக்கும் பயன்படுகிறது. இது உடலிற்பட்டால் தோலைப் புண்ணாக்கும்.

அசிட்டோன் (Acetone): இது மரத்திலிருந்து வடித்தெடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளியின் சிறு நீரில் சில சமயங்களில் இது காணப்படுவ துண்டு. செல்லுலோ°, நைட்ரேட்டு, கொழுப்புக்கள், பிளா°டிக்குகள், அசிட்டிலீன் முதலியவற்றின் கரைப்பானாக இது உதவுகிறது.

அணு: அணுவென்பது மேற்கொண்டு பிரிக்கமுடியாத மிக நுண்ணிய சடப் பொருளின் கூறு. அணுவின் நடுவில் ஒரு கருவும் கருவைச் சுற்றி இலெக்ட்ரான்களுமுண்டு. கருவிலுள்ள மின்சார சக்திக்கு அதனைச் சுற்றியுள்ள எல்லா எலக்ரான்களின் மின்சார சக்தி சமமாக இருக்கும். கருவைச் சுற்றி இரெலக்ரான்கள் கிரகங்களைப்போலச் சுற்றிவந்து கொண்டிருக்கும். எல்லாத் தனி அணுக்களை உடைத்தாலும் ஒரேவகை மின் சத்தி வெளியாகிறது.

அணுநிறை: (Atomic Weight) ஒரு தனிமத்தின் அணுவிற்கும் ஒரு திட்டத் தனிமத்தின் அணுவிற்குமுள்ள ஒப்பு நிறை அதன் அணுநிறை எனப் படும். ஆக்சிசின் அணு நிறை 16.0000 எனக்கொண்டு அணு நிறைகள் குறிக்கப்படுகின்றன. இதன்படி ஹைடிரசன் அணுவின் நிறை 1.0080.

அணுசக்தி: அணுக்களை வெறுங்கண்ணினால் பார்க்க முடியாது. இந் நுண் ணிய அணுக்களை விஞ்ஞான முறையினால் பிளந்தால் அளவிட முடியாத மின்சத்தி வெளிவருகின்றது. இக் கொள்கையைப் பின்பற்றி அணுகுண்டு செய்யப்படுகிறது. இச் சக்தியை அழிவு வேலைக்குப் பயன் படுத்துவது போலவே ஆக்க வேலைக்கும் பயன்படுத்தலாம்.

அண்டிசெப்டிக்கு: (Antiseptics) புண்ணை அல்லது காயத்தைக் கழுவிக் கட்டினால் தீய பாக்டீரியாக்கள் பெருகாமல் தடுக்கும் மருந்து.

அத்தர்: உரோசாப்பூ இதழ்களைத் தண்ணீரிலிட்டு வாலைவடி செய்தபின் மேலே மிதக்கும் எண்ணெய்ப் பொருள். 340 உரோசாப் பூவிலிருந்து ஒரு இறாத்தல் இதழ் கிடைக்கும். இதிலிருந்து இரண்டு துளி அத்தர் கிடைக்கும். பல்கேரியா, பிரான்சு, சிரியா, ஈரான், துருக்கி, இந்தியா முதலிய நாடுகளில் உரோசா பயிரிடப்படுகிறது. அத்தர் முக்கிய வாசனைப் பொருள்.

அபினி: கசகசாச் செடியின் இளங்காயைக் கீறி வடியும் பாலை எடுத்து உலர்த்திச் சேர்க்கப்படுவது அபினி எனப்படும். பாரசீகம், இந்தியா, துருக்கி, யுகோ சிலாவாக்கியா, மாசிடோனியா, பல்கேரியா, சீனா, ஆசியாமைனர் முதலிய நாடுகளில் இது எடுக்கப்படுகிறது. அபினியை உட்கொண்டால் மயக்கமுண்டாகும்.

அமிலங்கள்: (Acids) ஒருவகை இரசாயனப் பொருள்கள். இலிட்ம° (Litmas) என்னும் சாயத்தை நீலத்திலிருந்து சிவப்பாக்கக் கூடியவை. புளிப்பான சுவையுடையவை. இவற்றில் ஹைடிரசினும் வேறு ஒன்றிரண்டு தனிமங் களும் கலந்திருக்கும். இதனை உப்பாக்குவதற்கு ஹைடிரசினுக்குப் பதில் ஒரு உலோகத்தைப் பிரதியீடு செய்யலாம். ஹைடிரசினுக்குப் பதில் நாகத்தைச் சேர்த்தால் நாகசல்பைட்டு உண்டாகும். சல்பரிக், நைற்றிக், ஹைடிரோகுளோரிக் அமிலங்கள் அரிக்கும் தன்மையுடையன. சிற்றிக், தார்தாரிக், அசற்றிக் அமிலங்கள் உணவுகள் சரிக்கட்டுவதற்கும், பான வகைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. கார்பலிக் அமிலம் மிக உபயோகமான கிருமி நாசனி.

அப்பிரகம்: உலோக வகைகளிலொன்று. இது கண்ணாடி போன்று, தகடாக உடைத்து எடுக்கக்கூடியது. இதில் ஒருவகை ஒளியைப் புகவிடும். இது நெகிழ்வும் மீள் சக்தியுமுடைய திண்மம்: இந்தியாவிலும் இலங்கையி லும் கிடைக்கிறது. மஞ்சள், பச்சை, சிவப்பு, பழுப்பு, கறுப்பு நிறங்களுடை யவை உண்டு. ஒளியைப் புகவிடுந் தன்மையும், தீயை எதிர்க்குந் திறனும் வெப்பநிலை மாற்றங்களால் பாதிக்கப்படாத தன்மையுமுடைய இது அடுப்புகளிலும் விளக்குகளிலும், சன்னல் கதவுகளிலும்,மோட்டார் வண்டிகளின் முன் திரைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

அம்பர்: (Amber) கோடிக்கணக்கான ஆண்டுகளின் முன் உயிருள்ள மரங்களிலிருந்து வடிந்த பிசின்கள் நிலத்துள் கிடந்து மஞ்சட் பழுப்பு நிறமாக மாறியுள்ளன. இவை அம்பர் எனப்படுகின்றன. அம்பர் பால்டிக் கடற் பகுதிகளிற் கிடைக்கிறது. அம்பர் பொடி செய்து மெருகெண்ணெய் களிலும் சாயங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

அம்பர்: (Ambergris) இது ஒர்க்கோலை, மீனம்பர் எனவும் படும். இது இ°பேம் திமிங்கிலத்தின் குடலிலிருந்து வரும் மெழுகு போன்ற பொருள். இது சில சமயங்களில் கழிவுப் பொருளாகத் திமிங்கிலத்தின் வயிற்றினின்று வந்து நீரில் மிதந்து கொண்டிருக்கும். இது வாசனைப் பொருள்கள் செய்யப்பயன்படுகிறது.

அம்மைப்பால் குத்துதல்: மாட்டம்மைப் பாலை விஞ்ஞான முறையில் பயன்படுத்துவதைக் கண்டுபிடித்தவர் ஆங்கில வைத்தியர் எட்வார்ட்டு சென்னர் (1749 - 1823). இப் பால் குத்தப்பட்டவருக்குப் பெரியம்மை உண்டாகாது. அம்மைநோய் ஒருவகை வைரசால் உண்டாகிறது.

அம்மோனியா: (Ammonia) நைட்ரசின், ஹைட்ரசின் சம்பந்தமான கலவை; இது காற்றிலும் பாதிகனங் குறைந்தது; நீரில் கரையக் கூடியது. உறையும் நிலைக்குச் சிறிது கூடிய வெப்ப நிலையுள்ள நீர் 1,150 கனஅளவு அம் மோனிய வாயுவைக் கலந்து கொள்ளும். இக் கலவை திரவ அம்மோ னியா எனப்படும்.

அயோடின்: (Iodine) இது கடற்றாவரங்களிலும், வெடியுப்பு கனியங்களி லிருந்தும் பெறப்படும் கருநீலமான படிகம். இது மருந்து வகை களுக்கும் சாயங்களுக்கும் பயனாகின்றது.

அர்கன்: (Argon) காற்றில் காணப்படும் வாயு. இது வேறெத் தனிமங்களோடும் சேரமாட்டாது.
அலங்காரப் பொருள்கள்: வாசனைத் தைலங்கள், வாசனைப் பசைகள், முகப்பொடிகள், முகப்பசைகள் இதழ்ச் சாயம், கன்னச் சாயம், நகமெருகு, புருவ மை, பற்பசை, மயிர்நீக்கி முதலியன.

அல்கஹால்: (Alcohol) இது சாதாரணமாக சர்க்கரை அல்லது இ°டார்ச்சோடு ஈ°ட்டைக் கலந்து நொதிக்க விடுவதால் கிடைக்கிறது. உவைன், பீயர் போன்ற குடிவகைகளில் வெறியை உண்டாக்கும் பொருள் அல்கஹால் எனப்படும். இது நல்ல கரைப்பான் (Solvent); இது மெருகெண்ணெய்க் கும் (வாணிஷ்) மருந்துகளுக்கும் பயன்படுத்தப்படும்.

அம்புமென்: (Albumen) இது ஒருவகைப் புரோட்டின் (Protein); நீரில் கரையக் கூடியது. இவ்வகையிலொன்று முட்டையின் வெண்கரு. இது வெப்பம், அமிலம், அல்கஹால் சம்பந்தமானால் கட்டியாகும்.

அனிலின் (Aniline): இது நிலக்கரித் தாரிலிருந்து எடுக்கப்படும் பென்சின் (Benzene) என்னும் திரவத்திலிருந்து எடுக்கப்படும் நிறமற்ற எண்ணெய்ப் பொருள். பலவகைச் செயற்கைச் சாயம் செய்வதற்கு இது பயன்படுகிறது.

ஆ°பிரின்: சாசிலிக் அமிலம் என்ற இரசாயனப் பொருள். வாணிபத்தில் ஆ°பிரின் என வழங்கின்றது. இது தலைவலி, காய்ச்சல், தடிமன் முதலிய நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இரசவாதம்: (Alchemy) இது பழங்கால இரசாயன முறை. இது தாழ்ந்த உலோக வகைகளைத் தங்கமாக மாற்றுவதும் உடலை யழியாமலிருக்கச் செய்வதுமாகிய மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு முற்காலத்தவர் செய்து வந்த ஆராய்ச்சி முறைகள். இவ்வகை ஆராய்ச்சி மருந்துச் சரக்குகளை எரிப்பதும் அவற்றைப் பிறிதொன்றோடு கலப்பதுமாகிய தன்மைக ளுடையதாக விருந்தது. இம்முறைகளே இக்கால இரசாயன சாத்திரத் திக்கு வழிகாட்டியாகவுள்ளன.

இலைப்பச்சை: இது தாவரங்களிற்காணும் பச்சை நிறப்பொருள். பச்சை நிறமுள்ள தாவரங்கள் இதனுதவியால் சூரிய ஒளியிலுள்ள சக்தியைக் கொண்டு நீரையும் கார்பன் டை யாக்சைட்டையும் கூட்டிச் சர்க்கரை ஆகிய உணவுப் பொருள்களைச் சமைத்துக் கொள்ளும். இச்செயல் ஒளிச் சேர்க்கை எனப்படும்.

இன்சுலின்: (Inisulin) இது இரைப்பைக்குக் கீழுள்ள சவ்விலிருந்து சுரக்கும் ஒருவகை இரசாயன நீர். இப்பொருள் சுரக்கா விட்டால் சர்க்கரை அளவுக்கு மிஞ்சி இரத்தத்தில் ஓடிச் சிறுநீர்ச்சுரப்பிகள் வழியாக மூத்திரத்தில் வெளிச் சென்றுவிடும்; நீரிழிவு நோயுண்டாகும். ஆடுமாடு, பன்றி முதலியவற்றின் இன்சுலின் அதற்கு மருந்தாகிறது. அதனை ஊசிகுத்திச் செலுத்துவார்கள்.

ஊதுவத்தி: வாசனைப்பொருள், மரத்தூள் என்பவை கலந்து செய்யப்படும் குச்சுகள். சாதாரண ஊதுவத்தியில் 30% சந்தனத் தூளும் 20% அகில் மரத்தூளும், 5% கிச்சிலிக் கிழங்கும், 5% வெட்டிவேரும், 10% மேற் குறிப்பிட்ட இலைகளும் பூக்களும், 20% பறங்கிச் சாம்பிராணியும் 10% கரியும் பிறபொருள்களுமுண்டு. உயர்ந்தவகை வத்திகளுக்கு அம்பர், வாசனைத் தைலங்கள், க°தூரி, புனுகு முதலிய பொருள்களும் சேரும்.

ஒட்டுவர்ணம்: (Distemper) வச்சிரப்பசை, தண்ணீர், சீமைச் சுண்ணாம்பு ஆகியவற்றைக் கலந்து செய்யப்படும் கலவை. தடித்த பசை அல்லது தூள்வடிவில் ஒட்டு வர்ணம் விற்கப்படுகிறது.

ஒப்படர்த்தி: (Specific gravity) ஒரு பொருளின் நிறைக்கும் அதே பருமன் கொண்ட 40 வெப்பநிலையிலுள்ள நீரின் நிறைக்குமுள்ள விகிதம். திரவப் பொருள்களுக்கு நீர் இத்தகைய திடப்பொருளாகப் பயன்படுகிறது. வாயுவின் அடர்த்திற்கு முதலில் ஹைடிரசினுடன் ஒப்பிடப்பட்டது. இப்பொழுது இது ஆக்சிசனுடன் ஒப்பிடப்படுகிறது.

ஒளிச்சேர்க்கை: (Photosynthesis) பச்சைத் தாவரங்கள் தம் இலை முதலிய உறுப்புகளிலுள்ள பச்சையம் என்னும் நிறமியின் உதவியினால் சூரிய வெளிச்சத்தினின்றும் பெறும் சக்தியைக் கொண்டு நீரையும் கரியமில வாயுவையும் கூட்டிச் சர்க்கரை அல்லது மாப்பண்டமாகிய கார்போ ஹைடிரேட்டு என்னும் பொருளைத் தொகுக்கும் செயல். ஒளியின் செய லால் பொருள்கள் தொகுக்கப்படுதலின் இச்செயல் ஒளிச்சேர்க்கை எனப்படுகிறது.

ஒடிக்கலோன்: (Eau de Cologne) வாசனையுள்ள திரவப் பொருள். கொலோன் (இத்தாலி) என்னுமிடத்தில் செய்யப் படுவதால் இதற்கு ஒடிக்கலோன் என்னும் பெயர் வழங்குகின்றது. சுத்தமான மதுச்சாரம் (அல்கஹால்) மருந்துச் சரக்குகள், சில நறுமணப்பொருள்கள், மூலிகைகள் மலர்களைக் காய்ச்சிக் கியாளம் செய்து வாலை வடித்துப் பின் தக்க அளவில் பல தாவரச் சரக்குகளையும் கலந்து இது செய்யப்படுகிறது.
காலரி: (Colorie) 100 கிராம் (2.2 பவுண்டு) தண்ணீரின் வெப்பத்தை ஒரு செண்டிகிரேட்டு பாகை உயர்த்தும் வெப்பத்தின் அளவு. இது பல வகை உணவுகள் உடலில் எரிவதால் உண்டாகும் சக்தியின் அளவை அலகு.

காற்று: இது பல வாயுக்களின் தொகுப்பு. இதில் 78% நைட்டிரசின், 21% ஆர்கன், கார்பன் டை ஒக்சைட் 0.03% நீராவி முதலியன உண்டு. பட்டினங்களுக்கு அண்மையில் இதில் கரித் தூசு, கந்தக அமிலம், ஹைட்டிரசின் சல்பைட்டு முதலியன காணப்படும். காற்று பூமியைச் சூழ்ந்திருக்கிறது. காற்று இயங் குவதால் அது வீசுகிறது.

கிருமி கொல்லிகள்: (Anticeptics) நோய்களை உண்டாக்குவனவும், சுத்தத்தைக் கெடுப்பனவுமாகிய நுண்கிருமிகளைக் கொல்லும் பொருள். இவை காயங்களைக் கழுவுதல், சத்திர சிகிச்சை செய்யும் கருவிகள் துணிகள் முதலியவற்றிலுள்ள கிருமிகளைக் கொல்லுதல் போன்றவற் றுக்குப் பயன்படுத்தப்படும். பொராசிக் தூள் (Borocic Powder), ஹைட் டிரசின் பரெக்சைட், இலைசொல், கார்பலிக் அமிலம் முதலியன பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

கொழுப்பு: இது தாவரங்களிலும், விலங்குகள் பறவைகளிலும் தோலுக்குக் கீழிருக்கும். மனிதனிடத்தில் இது பொதுவாக எங்குஞ் சேர்ந்திருக்கும். ஒட்டகங்களுக்கு இது முதுகுத் திரணையாக விருக்கும். தாவரங்களின் கொழுப்பு எண்ணெயாகக் கிடைக்கிறது. மற்ற உணவுகளிலும் பார்க்க எண்ணெயுணவில் அதிக சக்தியுண்டு.

கோப்பை மண்: (Porcelain) இது உலோகக் கலப்பில்லாத வெள்ளைக் களிமண். இம்மண்ணினால் செய்யப்படும் பாத்திரங்கள் சீனப் பாத் திரங்கள் எனப்படும். சீனாவுக்குச் சென்று மீண்ட பிரயாணிகள் கொண்டு சென்ற பாத்திரங்களையும் மண்ணையும் கொண்டு ஐரோப்பியர் இதனை அறிந்தனர். சீனக்களி போன்ற மண்ணை முதலில் ஐரோப்பாவில் தயாரித்தவர் பொத்கர் (Bottger) என்னும் செர்மானியர் (1710.)

சீமைச் சுண்ணாம்பு: (Chalk) கடற் பிராணிகளின் ஓடுகளிலிருந்து உண்டான சுண்ணாம்பு. இங்கிலாந்தில் பல சோக்கு மலைகளுண்டு. இவை ஐந்து கோடி ஆண்டுகளின் முன் கடலுட் படிந்த கடற்பிராணிகளின் ஒடுகளி லிருந்து உண்டானவை.

செயற்கை நூல்கள்: தாவரப் பொருள்களிலுள்ள செல்லுலோசை அடிப்படை யாகக் கொண்டு செய்யப்படும் செயற்கை நூல்கள் முதலில் தோன்றின. இவை மறுவளர்ச்சிச் சொல்லுலோ° இழைகள்(regenerated celuose fibers) எனப்படும். இராயன் (rayon) என்பது இவற்றின் பொதுப் பெயர். கழிவுப் பட்டைக் கரைத்து அக்கரைவிலிருந்து நூல்களைத் தயாரிக்கும் முறை செர்மனியிலும் யப்பானிலும் வழங்கி வருகின்றது. தாவர அல்லது விலங்குப் பொருள்களல்லாத தொகுப்புப் பொருள்களிலிருந்து செய் யப்படும் நூல் நைலான் என வழங்குகிறது. கண்ணாடியிலிருந்தும் இரப்பரிலிருந்தும் நூல்கள் செய்யப்படுகின்றன. பாலிலுள்ள கேசீன் என்னும் புரொட்டினிலிருந்தும் நூல்கள் செய்யப்படுகின்றன. இவை அமெரிக்காவில் அர்லாக் (Arlac) எனவும், இத்தாலியில் இலானிட்டால் (Lanidal) எனவும் வழங்கின்றன. சோயா அவரையிலிருந்தும் நிலக் கடலையிலிருந்தும் இக்காலத்தில் தொகுப்பு நூல்கள் செய்யப்படு கின்றன.

பட்டு: சில பூச்சிகள் புழுப்பருவ முழு வளர்ச்சியடைந்த பின் தம்முடலைச் சுற்றி மெல்லிய நூலை நூற்றுக் கூடுகட்டிக் கொள்கின்றன. புழுக்களின் தலைப்பாகத்திலுள்ள இரு சுரப்பிகளிலிருந்து வரும் நீர் காற்றுப்பட்ட வுடன் கெட்டியான நூலாகின்றது. இக்கூடுகளிலிருந்து நூலைக் குலைத் தெடுத்து ஆடைகள் நெய்யப்படுகின்றன.

பீயர்: (beer) வாளி முளையைக் நொதிக்க வைத்துச் செய்யப்படும் ஒருவகை மதுவகை.

பிளா°டிக்: (Plastics) பலவகைப் பொருள்களிலிருந்து எடுக்கப்படும் செயற்கைப் பசையிலிருந்து பெறப்படும் பொருள். இதிலிருந்து மிகப் பல பொருள்கள் செய்யப்படுகின்றன.செல்லுலோயிட் என்னும் பொருளை முதலிற் செய்யக் கண்டுபிடித்தவர் பர்மிங்காமில் வாழ்ந்த அலெக்சாந்தர் பர்க்° (Alexander Parkes-1855). மண்ணெண்ணெய், மணிலாக்கொட்டை, பால், நிலக்கரி, மரம் முதலிய பல பொருள்கள் பிளா°டிக்காக மாற்றப்படுகின்றன. நைலான் துணிகள், சீப்புகள், தெலி போன்கள், பில்ம்கள் முதலிய பலபொருள்கள் இதனாற் செய்யப் படுகின்றன.

பெனிசிலின்: (Peniclin) பலவகை நோய்களைக் குணப்படுத்தப் பயன் படுத்தப்படும் மிகப் பயனுள்ள மருந்து. இது சிலவகை நுண் கிருமி களைப் பெருகாமல் தடுக்கிறது. இது ஒருவகை பூஞ்சக் காளானிலிருந்து செய்யப்படுகின்றது.

பென்சின்: (Benzene) நிலக்கரித் தாரிலிருந்து எடுக்கப்படும் நிறமில்லாத திரவம். இதில் இரப்பர், பிசின், கொழுப்பு முதலியன கரையும். சாயங் களும் வேறு பல பொருள்களும் செய்வதற்கு இது பயன்படுகிறது.

மயிர்: இது பாலூட்டிகளின் உடலின் பரவியிருக்கும். இது தோலின்மீது ஒரளவு காற்றைப் பிடித்து வைத்து உடலின் வெப்பநிலையைக் காப்பாற் றும். காற்று வெப்பத்தை எளிதற் கடத்தாப் பொருள்களுளொன்று.

வெடிமருந்து: வெடியுப்பு, மரக்கரி, கந்தகம் என்பவற்றின் கலவை. சீனர் இதைப் பழங்காலத்திலேயே பயன்படுத்தினர். இதனை ஐரோப்பாவில் செய்யக் கண்டுபிடித்தவர் செர்மன் துறவி (Monk) இச்வாட்° (Schwartz). வெடிமருந்து பயன்படுத்தப்படும் பல வேலைகளுக்கு இப்பொழுது இடைனமெட் பயன்படுத்தப்படுகிறது.

கட்டடங்கள் உருவச் சிலைகள் முதலியன

இராம்சேசின் பெரிய உருவச் சிலை: (Colossi of Rameses II) எகிப்திய அரச னாகிய இரண்டாம் இராம்சேசின் நான்கு உருவங்கள் இருக்கும் வடிவில் மண் கல்லில் கி.மு.1270இல் வெட்டப்பட்டன. இவை நைல் ஆற்றின் இடது கரையிலுள்ள அபுசாம்வெல் என்னும் கோயிலின் பகுதிகளாக வுள்ளன. இவற்றின் உயரம் 70 அடி.

ஈ°டர் தீவு உருவச் சிலைகள்: தென் பசிபிக் கடலிலுள்ள ஈ°டர் தீவுகளில் உருவச் சிலைகள் பல நரை நிறக்கற்களில் வெட்டப்பட்டுள்ளன. இவற்றை எச்சாதிக் குரியவர்கள் வெட்டினார்கள் என்று அறிய முடியவில்லை. ஈ°டர் தீவு தென்னமெரிக்காவிலுள்ள சில்லி நாட்டிலிருந்து மேற்கே 2,000 மைல் தொலைவிலுள்ளது. இவ்வுருவச் சிலைகள் 4 அடி முதல் 37 அடி உயரமுடையன. இவை 200 முதல் 300 அடி நீளமுள்ள மேடைகள் மீது வைக்கப்பட்டிருக்கின்றன.

உரோட்° தீவின் பெரிய உருவச் சிலை (Colossus of Rhodes): உரோட்° தீவில் உரோட்° துறைமுகத்தில் கி.மு. 280இல் நிறுத்தப்பட்ட 103 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை. இது கிரேக்கரின் சூரியக்கடவுளாகிய ஹெலோ° கடவுளைக் குறிப்பது. கி.மு. 224இல் நேர்ந்த பூமி அதிர்ச்சி யின்போது இது விழுந்தது. இன்னொரு பெரிய உருவச் சிலை நீரோ (Nero) அரசனுடையது. இது 110 அடி உயரமுள்ளது; உரோமில் நிறுத்தப் பட்டது.

உரோம் நகரின் சேயின்ட் பீற்றர் ஆலயம்: இது இத்தாலியின் தலைநகரான உரோமிலுள்ளது; கிறித்துவ தேவாலயங்கள் எல்லாவற்றிலும் பெரியது. இது 18,000 சதுர அடி பரப்பை மூடிக் கட்டப்பட்டுள்ளது. இது இரண்டாம் யூலிய° என்னும் போப்பின் காலத்தில் 1,450இல் தொடங்கி 1632இல் முடிக்கப்பட்டது. இதன் நீளம் 6,336 அடி; உயரம் 435 அடி; உள்ளேயுள்ள பலிபீடத்தின் உயரம் 95 அடி. இது 54,000 பேர் நின்று வணங்குவதற்கு இடமளிக்கக் கூடியது.

எகிப்திய பிரமிட்டுச் சமாதிகள்: (Pyramids of Egypt) இவை நீல நதியின் மேற்குக் கரையில் கிசே (Gizesh) என்னுமிடத்தில் தொடங்கி அறுபது மைல் தூரத்தில் பரவிக் கிடக்கின்றன.இவை கி.மு.3500 முதல் கி.மு.1800 வரை பரோவா எனப்பட்ட அரசரின் உடல்களை அடக்கஞ்செய்வதற்குக் கட்டப்பட்ட கல்லறைகள். கிரேக்கர்களால் குவு எனப்பட்ட சியப்° (Cheops) அரசனால் கட்டப்பட்ட சமாதி. 450 அடி உயரமும் தளத்தில் 746 அடி சதுரமுமுள்ளது. இது 13 ஏக்கர் நிலத்தை மூடி நிற்கின்றது. இது 2,300,000க்கு மேற்பட்ட நீலக் கற்பாறைகளாற் கட்டப்பட்டுள்ளது.

எபுசெசிலுள்ள தயனா ஆலயம்: (Temple at Diana at Epueses) ஆசியா மைனரில் எபுசெ° என்னுமிடத்தில் அயோனியரால் கி.மு.5ஆம் நூற் றாண்டில் கட்டப்பட்ட கோயில். இது 425 அடி நீளமும் 225 அடி அகல மும் உடையதாக விருந்தது. கூரையைத் தாங்கிய தூண் ஒவ்வொன்றும் 60 அடி உயரமும் 150 தொன் எடையுமுள்ளன.

எம்பயர் °டேட்பில்டிங்: (Empire State Building) நியுயோக் பட்டினத்தி லுள்ளது. இதன் உயரம் 1,250 அடி. இதற்கு 102 மாடிகளுண்டு. இதுவே உலகில் மிக உயர்ந்த கட்டடம். இது 1931இல் முடிக்கப்பட்டது. 86வது மாடியிலிருந்து பார்த்தால் 25மைல் தொலைவிலுள்ள காட்சிகள் தோன்றும்.

ஒலிம்ப°மலைச் சிய° உருவச்சிலை: (Statue of Zeus at Olympus) கி.மு. 4ஆம் நூற்றாண்டில் பிடிய° அமைத்த சிய° கடவுளரின் உருவச்சிலை ஒலிம்ப° மலையில் வைக்கப்பட்டிருந்தது. இது சலவைக் கல், தந்தம், பொன் முதலியவைகளால் செய்யப்பட்டு 58 அடி உயரமுள்ளதாக விருந்தது. இதன் சிம்மாசனம் பல மணிகளால் அலங்கரிக்கப்பட் டிருந்தது. இச்சிலையைக் கிறித்துவ படை எடுப்பாளர் அழித்தனர்.

கலிக்கார் நாசசின் சமாதி: (Mausoleum of Halicarnassus) பெட்ரம் (Bedrum) எனப்படும் கலிக்கார் நாசசில் (ஆசியா மைனர்) ஆர்திமிசியா என்னும் இராணி தனது கணவன் மொச லோசசுக்கு கி.மு.352இல் சலவைக் கற் சமாதி ஒன்று கட்டினாள். இது 140 அடி உயரமுள்ளது. இது 12ஆம் நூற் றாண்டிலும், 15ஆம் நூற்றாண்டிலும் நேர்ந்த பூமி அதிர்ச்சியில் அழிந்து போயிற்று.

கூவர் அணைக்கட்டு (Hoover Damd): இது போல்டர்டாம் எனவும் வழங்கும். இது கொலரடோ ஆற்றின் அரிசோனாவிலும் நெவேடாவிலுமுள்ளது. இவ்வணைக்கட்டின் உயரம் 727 அடி; நீளம் 1180 அடி. இது பத்துக் கோடி கலன் நீர் பிடிக்கக் கூடியது; 1935-ல் திறக்கப்பட்டது. இது உலகில் மிகப்பெரிய அணைக்கட்டு. 4,400,000 கன யார் (கசம்) கான் கிரீட் இதைக் கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சாந்தா சோபியாப் பள்ளிவாசல்: (Mosque of Santa Sophia) ய°தினியன் (Justinian)என்னும் சக்கரவர்த்தியால் 6ஆம் நூற்றாண்டில் கொன்°தாந்தி னோப்பிளில் கட்டப்பட்ட கட்டடமொன்றுள்ளது. இரண்டாம் முகமது என்னும் துருக்கிச் சுல்தான் இந் நகரைப் பிடித்தபோது அவன் அதனைப் பள்ளி வாசலாக மாற்றினான் (1453). இதன் உட்புறங்கள் சுவர் ஒவியங்க ளாலும் சலவைக் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மத்திய கும்மட்டம் 108 அடி உயரமும் 107 அடி விட்டமுமுள்ளது.

சீனப் பெருஞ்சுவர்: (Great wall of China) கல்லாலும் மண்ணாலும் கட்டி வெளியே செங்கல் அழுத்தப்பட்ட 1,400 மைல் நீண்ட சுவர். இது சீனா வுக்கும் மங்கோலியாவுக்கும் எல்லையாகவுள்ளது. இதைக் கட்டும் வேலை ஷி ஹவாங் என்னும் சீனச் சக்கரவர்த்தியால் தொடக்கப்பட்டது. இச் சுவரின் பெரும்பகுதி மிங் வமிச அரசர் காலத்தில் (1368-1644) கட்டப்பட்டது. ஒவ்வொரு 300 அடி தூரத்துக்கு ஒன்றாகப் பல 40 அடி உயரமுள்ள காவற் கோபுரங்களுள்ளன. அடித்தளத்தில் கனம் 25 அடி முதல் 15 அடி வரையில் மாறுபடுகின்றது. உயரம் 20 முதல் 30 அடி. சுவர் நுனியின் அகலம் 15 அடி. சுவரின் உச்சியில் 10 அடி அகலமுள்ள பாதையுண்டு. இது கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.

சேர்க° மாக்சிம°: (Circus Maximus) இது உரோமில் கி.மு. 605இல் கட்டப் பட்ட நாடக அரங்கு. இது யூலியர் சீசரால் பெரியதாக்கப் பட்டது. இது 1875 அடி நீளமும் 625 அடி அகலமும், 150,000 பேர் இருக்க இட வசதியு முள்ளது. இங்கு வண்டிச்சவாரி, உடற்பயிற்சி விளையாட்டுகள் நடை பெற்றன.

தாச்மகால்: இது கும்மட்டங்களுள்ள சதுரவடிவான கல்லறை. இது சலவைக் கல்லால் 1629க்கும் 1650க்குமிடையில் சாசகான் என்னும் முகமதிய அரசனால் தனது மனைவி மும்தசி மகாலின் சமாதியாக அக்கிராவில் கட்டப்பட்டது. இது சிவந்த கற்களாற் கட்டப்பட்ட மதில்களுடைய தோட்டத்தின் நடுவே 210 அடி உயரமுடையதாக விளங்குகின்றது. இதன் தளம் 313 அடி சதுரமுள்ளது. கட்டிடத்தின் உட்புறங்கள் பலவகை இரத்தினக்கற்கள் பதித்து அலங்கரிக்கப்பட்டுள்ளன.

திபெத்திய போதலம்: (Pothala of Tibet) இது திபெத்தின் ஆட்சித் தலை வராகிய தலஇலாமாவின் இருப்பிடம். இது 900 அடி நீளமுடையதாய் கோட்டைபோன்ற தோற்றமுடையது. இதற்கு முலாம் பூசிய பல கூரை களும் பல்வேறு உயரமுள்ள கோபுரங்களுமுண்டு. மிக உயர்ந்த கோபுரத்தி னுயரம் 400 அடி. போதலத்தின் வெளிப்புறம் சிவப்பு நிறமும் உட்புறம் வெண்ணிறமு முடையன.

நாங்கிங் வெள்ளைக் களிமண் கோபுரம் (Porcelain tower of Nanking) இது யுங்லோ என்னும் சீனச் சக்கரவர்த்தியால் கிழக்குச் சீனாவிலுள்ள நான்கிங் என்னுமிடத்தில் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. எட்டு மூலையையுடைது. இதன் உயரம் 261 அடி. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாடிகளிருந்தன. இதன் இறப்புகளில் 152 மணிகளும் 152 கண்ணாடி விளக்குகளும் தொங்கவிடப்பட்டிருந்தன. இது 1853இல் புரட்சிக்காரரால் அழிக்கப்பட்டது.

பழங்காலக் கட்டுக்கால்வாய் (Ancient Aqueduct): கிறித்துவ ஆண்டுக்கு முன்னும் பின்னும் பட்டினங்களுக்கு நீர் உதவுவதற்குப் பல கட்டுக் கால் வாய்கள் வெட்டப் பட்டிருந்தன. இவ்வகைக் கால்வாய் முதலில் எயுபாலின° (Eupalenus) என்பவனால் கி.மு.630இல் வெட்டப்பட்டது. அது ஆசியா மைனருக்கு அண்மையிலுள்ள சாமோ° என்னும் கிரேக்க தீவுக்கு நீர் கொடுத்தது. உரோம் நகருக்கு ஒன்பது கால்வாய் களால் தினமும் 40,000 கலன் நீர் போய்க் கொண்டிருந்தது. பழங்கால எகிப்தியர், பாபிலோனியர், எருசலேமியர்களும் கட்டுக் கால்வாய் களைப் பயன்படுத்தினார்கள்.

பழங்காலக் கிரேக்கக் கூத்துமேடைகள்: கி.மு. 4ஆம் நூற்றாண்டில் பல கூத்துக் களரிகள் கிரீசில் கட்டப்பட்டன. அவற்றுக்குக் கூரை இல்லை. அவை அரை வட்டவடிவின. அங்கு கல்லினாற் செய்யப்பட்ட ஆசனங் கள் நிலையாகப் போடப்பட்டிருந்தன. (இ) டையோனி ச° களரி 16,000 பேர் இருக்கக் கூடியதாக விருந்தது.

பாபிலோன் தொங்கு தோட்டம்: (Hanging garden of Babylon) யுபிராத° ஆற்றுக்கு அண்மையில் இப்பொழுது ஈராக்குக்குத் தெற்கிலுள்ள பாக் தாத்துக்குத் தெற்கே நெபுச்சண் நேசர் என்னும் பாபிலோனிய அரசன் தூண்கள்மீது கட்டப்பட்ட மாடிகளில் ஒரு பூந்தோட்டத்தை கி.மு. 600இல் அமைத்தான். அடுக்கடுக்காக அமைந்த கட்டுகள் 75அடி முதல் 300 அடி வரை உயரமுடையனவாக விருந்தன. மிக உயர்ந்த இடத்தில் மாடி யில் வைக்கப்பட்டிருந்த நீர்த் தேக்கத்திலிருந்து குழாய்கள் மூலம் செடி களுக்கு நீர் விடப்பட்டது.

பெரிய மனிதமுகச் சிங்கம்: (Great sphinx) இது வட எகிப்தில் கிசே என்னு மிடத்தில் படுத்திருக்கும் பாவணையில் மலையில் வெட்டப்பட்டுள்ள மனிதமுகச்சிங்கம். செப்ரன் என்னும் பரோவா இதனை கி.மு. 3500இல் வெட்டுவித்தான். இதன் உடலின் நீளம் 189 அடியும், முகத்தின் குறுக் களவு 13 அடி 8 அங்குலமும், வாயின் அகலம் 5 அடி 7 அங்குலமுமுள்ளன. 50 அடி நீளமுள்ள அதன் முன்னங்கால்களினிடையே காற்றடித்துக் கொண்டுவந்த மண் குவிந்துள்ளது. இது ஞாயிற்றுக் கடவுளைக் குறிக்கும் சின்னம் எனக் கருதப்படுகின்றது.

பார° கலங்கரை விளக்கம்: (Pharos of Alexandria) இது தாலமி பிலாடிப° என்னும் அரசனால் கி.மு. 247இல் அலக்சாந்திரியாத் துறைமுகத்துக்கு அண்மையிலுள்ள பார° (Pharos) தீவில் கட்டப்பட்ட வெளிச்ச வீடு. இது கி.பி. 1375இல் நேர்ந்த பூமி அதிர்ச்சியினால் அழிவெய்தியது.

பைசா சாய்ந்த கோபுரம்: (Leaning tower of Pisa) இது இத்தாலியின் தென்மேற்குக் கரையிலிருக்கும் பைசாவில் கட்டப்பட்டுள்ள வட்ட வடிவான எட்டு மாடிக்கோபுரம். இது நேர் குத்திலிருந்து 15 அடி விலகி நிற்கின்றது. இதன் வடக்குப் பக்கத்தின் உயரம் 181 அடி; தெற்குப் பக்கத் தின் உயரம் 179 அடி. இது 1173இல் தொடங்கி 1350இல் முடிக்கப்பட்டது. சமீபகாலத்தில் 1000 தொன் எடையுள்ள சிமெண்டு இதன் தளத்துட் செலுத்தப்பட்டுள்ளது. வட இத்தாலியில் பொலக்னா(Bologna)வில் ஒன்றும், கிழக்குச் சுவிற்சலாந்தில் மொட்ரிட்° (St.Motritze) சில் ஒன்றுமாக வேறு இரு சரிந்த கோபுரங்களும் இருக்கின்றன.

பொரோ புதூர்: (Boro Budor) இது இந்து-யாவாவில் போரோ புதூர் என்னு மிடத்தில் எரிமலைக் குழம்புப் பாறையில் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பௌத்த கோயில். இக்கட்டிடம் 150 அடி உயரமுள்ளது. இதைச் சுற்றி ஏழு மதில்கள் படிக்கட்டுப்போல் கட்டப்பட்டுள்ளன. அவற்றின் நடுவே 52 அடி விட்டமுள்ள தாது கோபம் எழுகின்றது. கோவிலின் ஒவ்வொரு பக்கமும் 520 அடி நீளமுள்ளது.புத்தரின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பல தூபிகளும் ஒடுங்கிய கோபுரங்களும் எழுகின்றன. அவை இக் கோயிலைக் குண்டூசி குத்திய மெத்தைபோலக் காட்சியளிக்கச் செய்கின்றன.
மம்மத்துக் குகை: (Mammoth Cave) இது ஐக்கிய அமெரிக்காவில் கென்தக்கி என்னுமிடத்திலுள்ளது. இக் குகையில் நூறுமைல் தூரம் கண்டறியப் பட்டுள்ளது. இக் குகையில் கோயிலெனப்படும் இடத்திலுள்ள கும்மட்டம் 120 அடி உயரமும் 5 ஏக்கர் பரப்புமுள்ளது.

மலைச்சிகர வாசிகளின் அரண்மணை: (“Place” of the cliff dwellers) கொலர டோவில் மான்கோ° (Mancos) என்னுமிடத்தில் பழங்கற்கால மக்களாற் கட்டப்பட்ட பழைய கிராமமொன்றுள்ளது. இங்கு இப்பொழுது மக்கள் நடமாட்டமில்லை. இங்குள்ள கட்டடத்தில் 200 பெரிய அறைகளும் 22 சிறிய அறைகளுமுள்ளன. இக் கட்டடத்தை அமைக்கப்பட்ட கொத்து வேலையை நோக்கும்போது அங்கு வாழ்ந்த மக்கள் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்தார்களெனத் தெரிகிறது.

மாயா மக்களின் கோயில்கள்: மத்திய அமெரிக்காவில் மாயாமக்கள் எழுப்பிய கோயில்கள் அம்மக்கள் உயர்ந்த நாகரிகம் பெற்றிருந்தார்க ளென்பதைக் காட்டுகின்றன. இக் கட்டடங்கள் சுண்ணாம்பும் மணலும் கலந்து குழைத்த சாந்தினாலும் சுண்ணாம்புக் கல்லினாலும் கட்டப்பட் டுள்ளன. இப்பொழுது அழிந்து கிடக்கும் கட்டடங்கள் பிரமிட்டுச் சமா திகள் போன்ற உயர்ந்த மேடைகளின் மீதுள்ளன. கட்டங்களின் தூண்கள் இறக்கை முளைத்த பாம்புகள் போன்ற தோற்றமுடையவை. மாயா மக்களின் கட்டடக் கலைக்கும் தென்னிந்திய சிற்பக்கலைக்கும் உறவு காணப்படுகின்றது.

மெம்மொனின் இரட்டை உருவச் சிலைகள்: (Twin Colossi of Memmon) அமென் ஹொதப் பரோவாவின் இரண்டு உருவங்கள் இருக்கும் நிலையில் மண்கல்லில் வெட்டப்பட்டுள்ளன (கி.மு.14ஆம் நூ.). இவை எகிப்தின் வடகிழக்கிலுள்ள கர்நாக்கிலுள்ளன. பொழுது தோன்றும் நேரத்தில் இவை அழுவது போன்ற ஓசை செய்கின்றன. குளிர்ந்த கல்லில் வெயில் வெப்பம் படுவதால் இவ்வாறு ஓசை எழுகின்றது என்று சொல்லப்படுகிறது. இவ்வோசை மெம்மொன் தெய்வத்தின் சீழ்க்கை எனக் கிரேக்கர் நம்பி வந்தனர்.

மைசூரிலுள்ள பெரிய உருவச் சிலை: சமண மதம் சம்மந்தப்பட்ட கோம தேசுவரர் உருவச்சிலை மைசூரில் 470 அடி உயர்ந்த மலைச் சிகரத்தி லுள்ள பாறையில் வெட்டப்பட்டுள்ளது. இதன் உயரம் 60 அடி; தோட் பட்டையிலுள்ள அகலம் 26 அடி. இது சமணக் கடவுள் சம்பந்தப்பட்டது.

விடுதலைச் சிலை (Statue of Liberty): இது நியுயோக்கிலுள்ள பெட்லோ° (Bedloes) தீவில் நிறுத்தப்பட்டுள்ள பெரிய சிலை. இது பிரெஞ்சு அரசாங் கத்தால் அமெரிக்கா விடுதலையடைந்த நூறாவது ஆண்டு விழாவின் போது அமெரிக்காவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டது. இது ஒரு பெண் வடிவம்; விடுதலைச் சூளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நிற்ப தாக அமைந்துள்ளது. இது துறைமுகத்துக்கு மேல் 310 அடி உயர முள்ளது. இது 3.32 அங்குலத் தடிப்புடையதாகவும், உள் வெளியுடைய தாகவும் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 225 தொன். கீழ் இருந்து மேல்வரை படிக்கட்டுகளுள்ளன.

பல்பொருள்
அகச் சிவப்புக் கதிர்கள்: (Infra red rays) சூரிய ஒளியின் நிறமாலையில் அலை நீளம் அதிகமான சிவப்புப் பகுதிக்கு அப்பால் கண்ணுக்குப் புலப் படாதுள்ள கதிர்கள் இப்பெயர் பெறும்.

அக்டோபர் புரட்சி: 1917இல் உருசியாவின் தலைநகராகவிருந்த பெட்ரோ கிராட்டில் நடந்த போல்ஷவிக் புரட்சி இப்பெயர் பெறும்.

அச்செழுத்துக்களின் புள்ளி: அச்செழுத்துக்களின் அளவு புள்ளி எனப்படு கிறது. 72 புள்ளிகள் ஓர் அங்குல நீளமாகும். சாதாரணமாகப் புத்தகங்கள் 11 அல்லது 12 புள்ளிகளில் அச்சிடப்படுகின்றன.

அசற்குறிப்பு: வியாபாரிகள் கணக்குப் புத்தகங்களிலும் பேரெட்டிலும் பதியுமுன் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வியாபார நடவடிக்கையும் அடங்கிய புத்தகம் எனப்படும்.

அடிதொட்டி: (Slaughter house) சுகாதார முறையில் ஆடு மாடுகளை அடித்து மாமிசத்தைப் பெறுவதற்காக அமைக்கப்பட்ட கட்டடம். இதற்காக அரசாங்கம் ஏற்படுத்தும் விதிகளுண்டு. உலகில் பெரிய அடி தொட்டி சிகாகோ நகரில் (அமெரிக்கா) உள்ளது.

அடிமை நிலை: மிகப் பழங்காலம் முதல் அடிமைகள் இருந்து வந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் போர்களில் பிடிக்கப்பட்ட பகைவர்களாக விருந்தார்கள். இவர்கள் ஆடு மாடுகளைப் போல விற்கவும் வாங்கவும் பட்டார்கள். மேற்கு நாடுகளிற் பலர் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமை களைப் பிடித்து விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அமெரிக் காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் வெள்ளையரின் பண்ணைகளில் வேலைசெய்வோர் அடிமைகளாகவே இருந்தார்கள். அமெரிக்காவில் 1865இல் அடிமை ஒழிப்புச் சட்டம் செய்யப்பட்டது. அப்பொழுது 45 இலட்சம் அடிமைகள் விடுதலை பெற்றார்கள். இங்கிலாந்தில் 1792இலும் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளில் 1833இலும் 1834இல் இந்தியாவிலும் அடிமை ஒழிக்கப்பட்டது.

அடையாறு நூல் நிலையம்: சென்னைக்குப் பக்கத்திலுள்ள அடையாறு என்னுமிடத்தில் பிரமஞான சங்கத்தாரால் நிறுவப்பட்ட நூல் நிலையம். இதில் 76,713 நூல்களுண்டு.

அட்மிரல்: ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து என்னும் நாடுகளைத் தவிர மற்றைய நாடுகளில் அட்மிரல் என்பது கடற்படையின் தலைமை அதிகாரியைக் குறிக்க வழங்கும் பெயர். அமெரிக்கா, இங்கிலாந்து என் னும் நாடுகளில் கடற்படை அட்மிரல் என்பது தலைமைப் பதவியாகும். கடற்படையில் அட்மிரல் என்பது தரைப்படையில் செனரல் என்பது போன்றது.

அணைக்கட்டு: ஒரு ஆற்றின் போக்கைத் தடுத்துவைத்து அதன் மட்டத் தையும் அளவையும் கட்டுப்படுத்தவும், நீரைத் தேக்கி வைத்துப் பயன் படுத்தவும் அதன் குறுக்கே போடப்படும் தடை.

அத்லாந்திக் உடன்படிக்கை: இது 1949இல் மேற்கு ஐரோப்பாவிலுள்ள நாடுகளுக்கும் வட அமெரிக்காவுக்குமிடையே ஏற்பட்ட ஓர் ஒப்பந்தம். இது பொதுவுடைமை உருசிய நாடுகள் ஒன்றுபட்டு இயங்குவதற்கு எதிரிடையாகச் சனநாயக நாடுகள் இருக்க வேண்டுமென்னும் அடிப் படையைக் கொண்டது. இவ்வுடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட ஒரு நாட்டை உருசியா தாக்கினால் மற்றைய நாடுகள் உதவிகேட்கப்படா மலே உதவிக்குச் செல்லுதல் வேண்டும்.

அத்லாந்திக் சாசனம்: இது சேட்சிலும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உரூ° வேல்டும் 1941 ஆக°டு 14இல் ஒரு போர்க் கப்பலில் அத்லாந்திக் கடலில் சந்தித்துக் கையொப்பமிட்ட ஒரு சாசனம். உலகில் ஒரு சாதியார் இன்னொரு சாதியாரை வலுவிற்கட்டியாளுதல் கூடாதென்பது இதன் சுருக்கமாகும்.

அபே (Abey): பெரிய கிறித்துவ மடங்களுக்கும் கோவில்களோடிணைக்கப் பட்டிருந்த மடங்களுக்கும் வழங்கும் பெயர். இம்மடங்களில் கிறித்துவ துறவிகள் வாழ்ந்தார்கள். இவர்கள் அபொட்(Abbot) என்னும் மடத் தலைவரின் ஆளுகைக்குட்பட்டிருந்தார்கள். கன்னித் துறவிகள் அபெ° (Abbess) என்னும் தலைவியின் ஆளுகைக்குட்பட்டிருந்தார்கள்.

அப்போ°தலர் நடபடிகள்: கிறித்துவ வேதத்தில் புதிய ஏற்பாட்டிலுள்ள ஐந்தாவது நூல்; இருபத்தெட்டதிகாரங்கள் கொண்டது. இயேசுவின் வரலாறாகிய சுவிசேஷங்களில் ஒன்றை இயற்றிய லூக்கா என்பவரே இதையும் எழுதினார் எனக் கருதப்படுகிறது.

அம்புலன்°: இது காயமடைந்தவர்களை வைத்திய சாலைகளுக்கு எடுத்துச் செல்வது போன்ற வண்டி. போர்க் காலங்களில் இது காயம்பட்டவர் களுக்கு முதலுதவி அளித்து அவரை வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும். இதில் செஞ்சிலுவை அடையாளமிடப்பட் டிருக்கும். பிரெஞ்சுச் சேனையைச் சேர்ந்த பாரன் சீன் லாரி என்பவரே இவ்வண்டியை 1792இல் போரில் முதன் முறை பயன்படுத்தினார். பின் எல்லா நாடுகளும் இதனைப் பயன்படுத்தின. அம்புலன்° ஓட்டுபவரும் அதில் வேலை செய்பவரும் நடுநிலையினராகக் கருதப்பட வேண்டு மென 1864இல் வகுக்கப்பட்ட செனீவா உடன்படிக்கை கூறுகின்றது.

அம்மை: ஒரு வகைத் தொற்றுநோய். இதில் சின்னம்மை (Chicken Pox), பெரியம்மை (Small pox), தட்டம்மை (Measles) என மூன்று வகையுண்டு. பெரியம்மை மிகக்கொடியது. இது வராமல் தடுப்பதற்கு அம்மைப் பால் குத்தப்படுகிறது.

அரிய° மதம்: (Arainism) அலக்சாந்திரியாவில் வாழ்ந்த ஆரிய° (Arius) என்பவர் (கி.பி. 256-336) கிறித்துநாதர் தேவன் அல்லர்; மனிதரில் தெய்வத்தன்மை யுடையவர் எனப் போதித்தார். இக் கொள்கை இவர் பெயரால் அறியப்படகிறது.

அர்த்தசாத்திரம்: மௌரிய சந்திரகுப்தனின் (கி.மு. 325 - 297) மந்திரியாக விருந்த கௌடலியர் அல்லது சாணக்கியர் அல்லது விட்டுணுகுப்தர் என்பவரால் செய்யப்பட்ட ஆட்சி நூல்.

அலங்காரக் கடை: (Beauty Shop) மேல் நாடுகளில் பெண்களின் வெளித் தோற்றத்தை அழகுபடுத்தும் நிலையங்கள் பலவிருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவில் மாத்திரம் ஏறக்குறைய 60,000 கடைகளிருக்கின்றன. கை விரல் நகங்கள், தோல், பல், கை முதலிவற்றை இவை அழகாகத் தோற்றமளிக்கச் செய்கின்றன.

அல்ராசொனிக்°: (Ultasonics) மனிதனுடைய காதுக்குக் கேட்க முடியாத ஒலிகளைப் பற்றிய ஆராய்ச்சி. ஒரு நொடிக்கு 15,000 அலை அதிர்வு (Oscillations)க்கு மேற்பட்ட ஒலி மனிதனுடைய காதுக்குக்கேளாது. மிகக் குறைந்த அதிர்வுள்ள ஓசையும் காதுகளுக்குக் கேட்காது. இவை பற்றிய ஆராய்ச்சி இப்பெயர் பெறும்.

ஆங்கிலம்: இது 270,000,000க்கு மேற்பட்ட மக்கள் வழங்கும் மொழி. இம் மொழியை வழங்குவோருள் 150,600,000க்கு மேற்பட்டோர் ஐக்கிய அமெரிக்காவிலுளர்.

ஆரிய சமாசம்: இது தயானந்த சரசுவதி என்னும் குசராத்துப் பிராமணத் துறவியால் 1875இல் நிறுவப்பட்ட ஒரு நிலையம். இது சாதிமத வேற்றுமை களை ஒப்புக்கொள்வதில்லை.

ஆலங்கட்டி: மேகத்திலிருந்து விழும் கனத்த பனிக்கட்டித் துணுக்கு. இவ் வகை ஆலங்கட்டி மிருதுவாய் சிறு வெண் பனித்துணுக்குகளைப் போன்றிருக்கும்.

இரட்சணிய சேனை: (Salvation army) இது இங்கிலாந்தில் மெதடி°ட் பாதிரியாயிருந்த வில்லியம் பூத் என்பவரால் 1865இல் அமைக்கப்பட்ட சங்கம். இதற்குச் சேனை என்று பெயரிடப்பட்டிருப்பதால் இதன் தலைவர்களைச் செனரலென்றும் இது கூடுமிடங்களைப் பாளையம் (Barracks) என்றும் வழங்குவர். மதப்பற்றில்லாத மக்கள் உள்ளத்தைக் கவர் வதற்காக இச் சேனையின் போர்வீரர் போல் உடுப்பணிந்து கொடி பறக்க விட்டுக் கொண்டு பாண்டு வாத்தியத்துடன் பவனி வருவர். இச்சேனை 89 நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது.இவர்கள் 123 பத்திரிகைகளை 81 மொழிகளில் வெளியிடுகிறார்கள்.
இரத்தச் சுற்றோட்டம்: இருதயம் இரத்தத்தை இறைக்கிறது. இரத்தம் முதலில் நூரையீரலுக்குச் செல்கிறது. அங்கு அது பிராணவாயுவினால் நிரப்பப் படுகிறது. பின்பு அது இதயத்துக்குச் செல்கிறது. பின்பு அது இரத்தக் குழாய் வழியாகச் செல்கிறது. இது சிறிய சிறிய இரத்தக் குழாய்கள் வழி யாகச் சென்று தசை நார்களுக்குப் பிராணவாயுவைக் கொடுத்துவிட்டுக் கழிவுப் பொருளை வாங்கிக் கொண்டு அகன்று அகன்று செல்கின்ற வேயின்° (Veins) என்னும் குழாய்கள் வழியாக இதயத்தை அடைந்து நுரையீரலை அடைகிறது. அங்கு அது கழிவுப் பொருள்களை நீராவி யாகவும் கார்பன் டை ஆக்சைட் ஆகவும் வெளியே விட்டு விட்டுப் புதிய பிராணவாயுவைப் பெறுகிறது.
இரத்தக் கட்டி (Abscess): தோற்புரையின் கீழ் ஆழத்தில் தீய நோய்க் கிருமி களின் தொற்றினால் உண்டாவது. அவை பெருகி நஞ்சை வெளியே விடுவதால் அவ்விடத்தில் அழற்சியும் திரட்சியும் உண்டாகிறது.

இரத்தம்: மிகுதியான உயிர்களுக்கு உடல் முழுமைக்கும் உணவைக் கொண்டு சென்று கழிவுப் பொருள்களை வெளியேற்றும் திரவப் பொருள். இதில் பிராணவாயுவை உறிஞ்சும் ஒரு பொருள் உண்டு. இப்பொருள் இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களிலிருக்கின்றது. சிவப்பு அணுக்கள் பிளா°மா என்னும் திரவத்தில் மிதக்கின்றன. சில அணுக்கள் வெண் ணிறமுடையன. அவை அணுக் கிருமிகள் நுழைந்தால் அவற்றை உண்டுவிடுகின்றன.

இராசி: வானில் சூரியன் செல்வதாகத் தோன்றும் வீதியாகிய இராசி மண்டலம் ஒவ்வொன்றும் 300 அளவுள்ள பன்னிரண்டு பாகங்களாக்கப்பட்டு அப்பாகங்கள் இராசிகளெனப்படும்: அவை மேசம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்பன. இந்த இராசிகளில் அமையும் நட்சத்திரங்கள் ஆடு முதலிய வடிவுடையனவாகத் தோன்றுதலால் இப்பெயர்கள் உண்டாயின. குழந்தை பிறக்கும் போது உதயத்தில் (அடிவானில்) உள்ள இராசி சென்ம இலக்கின மெனப்படும்.

இராப் போசனம்: சிலுவையில் அறையப்படுவதற்கு முதல்நாள் இரவு கிறித்து நாதர் சீடர்களுடனிருந்து உணவுகொண்டபொழுது அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் தொட்டுக் கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டு “இது எனது உடல், இது எனது இரத்தம், இதை என் நினைவாக இயற்றுங் கள்” என்று கூறினார். இதை “யூக்கரி°ட்” என்றும் கூறுவர். யூக் கரி°ட் என்னும் கிரேக்க சொல்லின் பொருள் நன்றி கூறல். இதை ஆங்கிலத்தில் “கம்மூனியன்”என்பர். அது தமிழில் நற்கருணை எனப்படும். உரோமன் கத்தோலிக்கர் இதனை “மா°”என்பர். புரோகிதர் அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் செபங் கூறிக் கர்த்தரின் உடலாகவும் இரத்த மாகவும் மாற்றி அடியார்க்கு வழங்குவது ஐதீகம். இதை உரோமன் கத்தோலிக்கர் நாடோறும் அல்லது வாரந்தோறும் பெறுவாராயினும் யேசுநாதர் உயிர்த்தெழுந்த ஈ°டர் நாளன்று பெற்றாக வேண்டும்.

இருமல்: மூச்சுக் குழாயிலுள்ள சளியையோ அல்லது அங்கு சேர்ந்த பிற பொருள்களையோ அப்புறப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் செயல் இருமல் எனப்படுகிறது. பிற காரணங்களால் உண்டாகும் இருமல் தீமை பயப்பது.

இளம்பிள்ளைவாதம்: குழந்தைகளுக்கு வரும் தொற்று நோய்களுள் மிகப் பயங்கரமானது; கை கால்களை முடமாக்கக் கூடியது. இந்நோய் மிகுதி யும் அமெரிக்காவில் காணப்படுகிறது. இது ஒருவகை விடக்கிருமியால் (வைர°) உண்டாகிறது. இந்நோய் வராமல் தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ளலாம்.

இறகுகள்: பறவைகளின் இறகுகள் பல்லிவகைகளின் செதில்களிலிருந்து வளர்ச்சியடைந்தவை. ஒரு இறகில் தென்னோலை போன்ற பல அலகு களும், அலகுகளில் மயிர் போன்ற அலகுகளுமுண்டு. புறாவின் இறகு ஒன்றில் ஏறக்குறைய 1,200 பெரிய அலகுகளும் 990,000 சிறிய அலகு களுமுண்டு.

இன்கா (Inca): தென்னமெரிக்காவில் பெரு, அர்ச்சண்டைனா, சில்லி முதலிய நாடுகளில் முற்காலத்தில் வாழ்ந்த மக்கள் இப்பெயர் பெறுவர். இவர் களின் அரசன் இன்கா எனப்பட்டான். மெக்சிக்கோவில் வாழ்ந்த பழைய மக்கள் அ°டெக்° எனப்பட்டார்கள்.

இன்குவிசிஷன்: கத்தோலிக்க மதக்கொள்கைகளை நம்பாதவர்களைத், தண்டிப்பதற்காகப் போப் 9ஆம் கிரிகொரி 1231இல் கொண்டு வந்த சட்டம். இச்சட்டத்தின்படி சமயத்தை நம்பாதவர்கள் தீயிலிட்டும், சித்திரவதை செய்தும் தண்டிக்கப்பட்டார்கள். யோன் ஒவ் ஆக் என்னும் வீரப்பெண் மணி தண்டனை பெற்றது இச்சட்டத்தின் படியே யாகும்.

ஈ°டர்: கிறித்துநாதர் உயிர்த்தெழுந்ததை நினனவூட்டும் விழா. இது மார்ச் மாதம் 21ஆம் நாளிலோ அதற்குப் பிறகோ வரும் பூரணைக்கு அடுத்த முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

உண்ணாவிரதம்: இது முற்காலம் முதல் எல்லாச் சமயத்தவராலும் கைக் கொள்ளப்பட்டு வந்தது; இன்றும் சில சமயத்தவரால் கைக்கொள்ளப் பட்டு வருகின்றது. பண்டைக் காலத்தில் மெக்சிக்கோ, பெரு, பாபிலோன், அசீரியா, எகிப்து, பால°தீனம், அரேபியா முதலிய நாடுகளிலும், கெல்டு தியுதேனிய மக்களிடையும் இவ்வழக்கம் காணப்பட்டது. இந்து, பௌத்த, சமண, முகமதிய, கிறித்துவ, யூதமதத்தினரிடையும் இது இன்றும் இருந்து வருகிறது.

உரம் (பசளை): நிலத்திலிருந்து தாவரங்கள் உறிஞ்சி எடுத்துக்கொண்ட இரசாயனப் பொருள்களை ஈடு செய்வதற்காக நிலத்துக்கு உரமிடப் படுகிறது. உரத்தில் நைட்ரசினும் பாசுவரமும் அடங்கியிருக்கும்.

எதிர் அடியிடம்: (Antipodes) நாம் நிற்பதற்குக் கீழே பூமியின் மறுபுறத்தி லுள்ள இடம்.

எப்பிரில்: ஆண்டில் நான்காவது மாதம். இப்பெயர் விரிதல் என்னும் பெயர் படும். இலாத்தின் சொல்லினின்றும் பிறந்தது. இக்காலம் முதல் பூக்களும் தளிர்களும் விரைவில் விரிகின்றன.

எரி நட்சத்திரக்கல்: எரி நட்சத்திரம் பெரியதானால் முழுவதும் எரிவதன் முன் அது பூமியை அடையலாம். அவ்வாறு விழும் கற்கள் எரி நட்சத் திரக்கற்கள் எனப்படும். அவை பூமியை அணுக அணுகக் காற்றின் தடை மிகுவதால் விழும் வேகம் தடைப்படும்; முன்போல் எரிவதில்லை. அவை துண்டுகளாக உடைந்துவிடுகின்றன. சில சமயங்களில் பெரிய நட்சத்திரக் கற்கள் விழுவதுமுண்டு. 1908இல் பெரிய நட்சத்திரக்கல் சைபீரியாவில் விழுந்தபோது 25 மைல் சுற்றிலுள்ள காடுகள் அழிந்து விட்டன. ஏறக்குறைய 4000 ஆண்டுகளின் முன் அரிசோனாவில் ஒரு பெரிய வானக் கல் விழுந்ததால் உண்டான பள்ளம் 570 அடி ஆழமும் 4/5 மைல் விட்டமுமுள்ளது.

எரி நட்சத்திரங்கள்: (Metoer) வால் நட்சத்திரங்கள் கவர்ச்சியின் காரணமாக ஏதாவது ஒரு பெரிய கிரகத்தையோ சூரியனையோ அணுகலாம். அங்குள்ள எல்லைக்குமேல் அணுகினால் அவை உடைகின்றன. அத் துண்டுகளே எரி நட்சத்திரங்களாகின்றன. வேறு அண்டங்கள் உடைந் தும் எரி நட்சத்திரங்கள் உண்டாகலாம். இவை புவியீர்ப்பினால் வாயு மண்டலத்தில் நுழையுமானால் செக்கண்டுக்கு 40 மைலுக்கு அதிகப் பட்ட வேகத்தில் வரும். அப்பொழுது காற்றிலே உண்டாகும் உராய்வி னால் 40000 வெப்பமடைந்து எரிகின்றன. வெளிச்சம் புலப்படுவது 80 மைல் உயரத்திலாகும்.பெரும்பாலும் பூமியை அடையுமுன் அவை எரிந்துவிடுகின்றன. நாள்தோறும் இலட்சக் கணக்கான எரி நட்சத் திரங்கள் பூமியில் விழுகின்றன.
எரிமலை: பூமிக்குள்ளிருக்கும் உருகிய கற்குழம்பு வெளியே தள்ளப் படுவதால் குவிந்து கூம்பு வடிவாகவிருக்கும் மலைகள் எரிமலைகள் எனப்படுகின்றன. எரிமலைகள் உறங்கும் எரிமலைகள் விழி எரி மலைகள் என இருவகைப்படும்.

எலும்பு: முதுகெலும்புள்ள உயிர்களின் தடிமயமான கூட்டை எலும்பு என்கி றோம். இது கால்சியம் பொ°பேற் என்னும் இரசாயனப் பொருளால் பெரியதும் உண்டாக்கப்பட்டுள்ளது. எலும்பிலுள்ள சில செல்கள் படை படையாகப் படிந்து எலும்பை உண்டாக்குகின்றன.

ஐந்தாம் படை: ஒரு நாட்டிலுள்ளவர்களே அந் நாட்டிற்கு எதிராக வேலை செய்யும் பகைவர்களுக்கு உதவ முன்வரின் அவர்கள் ஐந்தாம் படை யினர் எனப்படுவர். இ°பேயினில் உள்நாட்டுக் குழப்பத்தின் போது பிராங்கோ 4 அணியாக நின்று மாட்ரிட் நகரைத் தாக்கினார். பிராங்கோ வின் அனுதாபிகள் அரசாங்கத்துள் இருந்தபடியே குழப்பங்களை உண்டாக்கினார்கள். இவ்வாறு செய்தவர்கள் ஐந்தாம் படையினரெனப் பட்டார்கள்.

ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன. பின்னிரண்டு நூல்களும் மறைந்துபோயின.

ஒருப்படி: (Uniform) போர் வீரர், சாரணர், பொலி° போன்ற கூட்டத்தினர் அணியும் ஒரேவகை உடுப்பு. பிரிட்டிசார் 1880இல் இந்திய துருப்பு களுக்குக் காக்கி உடுப்பினை வகுத்தனர். காக்கி என்னும் இந்து°தானிச் சொல் புழுதி நிறம் என்று பொருள்படும். போயர் போருக்குப் பின் காக்கி உடுப்பு அணிவது உலக முழுமையும் பரவியது. இப்பொழுது அரசியற் கருத்துச் சம்பந்தமான கொள்கைகளை விளக்கச் சில கூட்டத்தினர் சிவப்பு, கறுப்பு முதலிய உடைகளையு மணிகின்றனர்.

ஒலிம்பிக் ஆட்டங்கள்: நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக ஆட்டப்போட்டிகள். இவை பண்டைக் காலக் கிரேக்கரின் தேசீய விழாவின் மறுமலர்ச்சியாகும். இவ்விழாவை அவர்கள் ஒலிம்பியா என்னும் சமவெளியில் சிய° என்னும் தெய்வத்தின் வழிபாடாக நடத்தி வந்தமையால் ஒலிம்பிக் ஆட்டங்கள் என்னும் பெயருண்டாயிற்று.

ஒட்டம் துள்ளல்: கேரள நாட்டில் வழங்கும் புகழ்பெற்ற நாட்டுக் கூத்து. இது ஒராள் நடனம். நடனமாடுபவர் ஈரடிப்பாடல் ஒன்றைப் பாடி அதன் கருத்தை அபிநயங்களால் குறிப்பிடுவர். அவருக்குப் பின்புறம் நிற்கும் மத்தளக்காரர் அப்பாடலை மறுபடியும் பாடி மத்தளமடிப்பர். அவர் பாடி முடிந்ததும் நடனக்காரர் அடுத்த ஈரடிப் பாடலைப் பாடுவர்.
ஒர்கண்டி: (Organdy) இலேசும், கம்பிபோன்ற விறைப்பும் ஒளி புகவிடும் திறனுமுள்ள ஒருவகைத் துணி. ஒர்கண்டி என்னுமிடத்தில் செய்யப்படு தலால் இதற்கு இப்பெயர் வழங்குகின்றது.

ஒளவை இல்லம்: சென்னையில் அடையாற்றிலுள்ள ஓர் இல்லம். இங்கு ஆதரவற்ற சிறுவர் சிறுமிகளைத் தீய பழக்கங்களில் விடாமல் பேணிக் காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.

கடல்நீரின் அழுத்தம்: கடலுள் 15,000 அடி ஆழத்தில் ஒரு சதுர அங்குல இடத்தில் தாக்கும் அழுத்தம் 2½ தொன். இவ்வளவழுத்தமுள்ள இடத்தி லும் அதன் கீழும் மீன் வகைகள் வாழ்கின்றன. அவற்றை மேலே கொண்டு வந்தால் அழுத்தம் குறைவதால் அவை வெடித்துவிடும். ஆழ்கடல் மீன் களுக்கு வெளிச்சத்தை உண்டாக்கும் உறுப்புக்கள் உடம்பிலுண்டு.

கம்பளி: பலவகை விலங்குகளின் மயிர் கம்பளி எனப்படுகிறது. கம்பளி வகைகளில் முக்கியமுடையது செம்மறியாட்டின் மயிர். சில வெள்ளாட் டின் மயிரையும் கம்பளி என்பதுண்டு. திபெத்து நாட்டு வெள்ளாட்டின் மயிர் காஷ்மீர் எனவும், அங்கோரா வெள்ளாட்டின் மயிர் மோகேர் என வும் பேரு நாட்டிலுள்ள அல்பக்கா என்னும் விலங்கின் மயிர் அல்பக்கா எனவும் வழங்கும். ஒட்டகத்தின் மயிரும் மெல்லிய உடைகளுக்குப் பயன்படுகிறது.

குடல்: ஒன்றரை அடியுள்ள மனிதவயிற்றில் 25 அடி சிறு குடலும், 5 அடி பெருங்குடலும் அடங்கிக் கிடக்கின்றன.

குறும்பன்றி: இது குறுமான், சுண்டுமான் எனவும் அறியப்படும். குளம்புள்ள பிராணிகளில் மிகச் சிறியது. 10-12 அங்குலமுயர மிருக்கும். இது இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, மலாயா முதலிய இடங்களிற் காணப்படும்.

கேபிள்: (Cable) மின் கடத்தும் கம்பிகள் பலவற்றை ஒன்று சேர்த்துக் காப்பிட்டவடம். காப்புக்கு மேலும் ஓர் உறை இருக்கும். இவ்வுறையைக் காரீயத்தினால் செய்வது வழக்கம். இது கடல்நீர், மண் முதலியவற்றால் கேபிள் அரிக்கப்பட்டு விடாமல் பாதுகாக்கிறது.

கேம்பிரிக்: (Cambric) சாதாரண பருத்தி நுhலினால் செய்யப்படும் ஒருவகைத் துணி. பிரான்சிலுள்ள கேம்பிரே (Cambrai) என்னுமிடத்தில் இவ்வகைத் துணி செய்யப்பட்டமையால் இதற்கு இப்பெயர் வழங்குகிறது.

கைலாயம்: திபெத்திலுள்ள மலை; இமயமலைத் தொடரைச் சேர்ந்தது; உயரம் 22,028 அடி; சுற்றளவு இரண்டு மைல். இதனை இந்துக்களும் பௌத்தரும் துhய்மையிற் சிறந்த இடமாகக் கொள்வர்.

கொக்கிப்புழு: சாதாரணமாக ஒரு கொக்கிப்புழு மனித உடலிற் புகுந்த ஐந்து வாரங்களில் முட்டையிடத் தொடங்கும். ஒரு நாளைக்கு ஒரு புழு 25,000 - 35,000 முட்டைகளிடும். இப்படி நாள்தோறும் இட்டுக்கொண்டிருக்கும். பல புழுக்கள் 5,6 மாதம் உயிரோடிருக்கும் மற்றும் பல 5, 6 ஆண்டுகள் உயிரோடிருக்கும். 16 ஆண்டுகள் உயிரோ டிருந்த புழுக்களுமுண்டு.

கொழும்புத்திட்டம்: கொம்மன்வெல்து ஆலோசனைக் குழுவினர் 1950இல் சிட்னி, கொழும்பு, இலண்டன் ஆகிய இடங்களில் கூடித் தெற்கு, தென் மேற்கு ஆசியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வகுத்த திட்டம். இலங்கை, இந்தியா, மலாயா. பிரிட்டிஷ், போர்ணியோ, பாகி°தான். ஆ°திரேலியா, கனடா, கம்போடியா, இந்தோனேசியா, நியுசீலந்து, இங்கிலாந்து, பர்மா, இலாவோ° (Laos) நேபாளம், அமெரிக்கா, வியட்நாம் ஆகிய நாடுகள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளன.

சம அழுத்தக்கோடு: (Isobar) தேசப்படத்தில் காற்றின் அழுத்தம் சமமாக உள்ள இடங்களைச் சேர்க்கும் கோடு. இக்கோடுகள் ஒரு குறிப்பிட்ட வெளியில் அல்லது உலகம் முழுவதிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவிய அழுத்தத்தின் சராசரியைக் காட்ட வரையப்பட்டுள்ளன.

சம இரவுகள்: (Equinoxes) பூமத்திய ரேகையில் வாழ்பவர்களுக்கு எல்லா நாட்களிலும் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக இருக்கும். இதே போல் சூரியன் பூமத்திய ரேகையைத் தாண்டும் நாட்களில் மார்ச்சு 23, செப்டம்பர் 23 தேதிகளில் பூமியின் எல்லா இடங்களிலும் இரவு பகல் சமமாகவிருக்கும். இந்த நாட்கள் சம இரவுகள் எனப்படும்.

சமக்காளம்: பருத்தி நூலினால் செய்யப்படும் விரிப்புச் சமக்காள மெனவும் உரோமத்தினால் நெய்யப்படுவது கம்பளமெனவும் படுகின்றன.

சல்பா மருந்துகள்: (Sulpa drugs) உடலிற் புகுந்து நோயை விளைக்கும் நுண் கிருமிகளின் வளர்ச்சியைத் தடைசெய்து நோயை ஒழிக்கும் தன்மையைப் பெற்றுள்ள சில இரசாயன மருந்துப் பொருள்களுக்கு இப் பெயர் வழங்கும். நிலக்கரியிலிருந்து பெறப்படும் சில பொருள்களிலிருந்து இவை தயாரிக்கப்படுகின்றன.

சவுக்கு மரம்: இதில் 35 வகைகளுண்டு. இவற்றில் பெரும்பாலானவை ஆ°திரேலியாவிற் காணப்படுகின்றன. மற்றவை மலாயா, நியூ கலிடோனியாவிற் காணப்படுகின்றன. சவுக்கு மரம் இந்தியாவுக்கு 19ஆம் நுhற்றாண்டில் ஆ°திரேலியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது. சவுக்கின் இலைகள் காசோவாரி என்னும் கோழியின் இறகுகளைப் போன்று தோன்றுவதால் அதற்குக் காசுவாரினேசி என விஞ்ஞானப் பெயர் இடப்பட்டுள்ளது.

சாக்கலேட்டு: (Chocolate) இது கொக்கோ விதையிலிருந்து செய்யப்படுகிறது. தொடக்கத்தில் மெக்சிக்கோ நாட்டினர் கொக்கோ விதையிலிருந்து ஒரு வித பானத்தைச் செய்து குடித்துவந்தனர். அவர்களிடமிருந்து இ°பேயின் நாட்டவர் கொக்கோப் பானம் செய்யக் கற்றனர். பின் சாக்கலேட்டுத் தயாரித்தனர். ஏறக்குறைய நூறாண்டுகளாக இ°பானியர் இதை இரகசியமாக வைத்திருந்தனர். பின் இத்தாலி, பிரான்°, செர்மனி முதலிய நாடுகளுக்குச் சாக்கலேட்டுச் செய்யும் முறை பரவியது. 1657இல் இலண்டனில் சாக்கலேட்டு ஒரு பிரெஞ்சுக்காரால் முதன்முதல் விற்கப்பட்டது. 1700இல் பால் கலந்து சாக்கலேட்டுச் செய்யும் முறையை ஆங்கிலேயர் கண்டுபிடித்தனர். உலகில் சாக்கலேட்டை மிகுதியாக உட்கொள்ளும் நாடு அமெரிக்கா. குறைந்த அளவில் மிகுந்த சக்தி தரும் உணவு சாக்கலேட்டு. உலகில் சாக்கலேட்டை மிகுதியாகச் செய்யும் நாடுகள் தென்னமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்காவிலுள்ள கோல்டுகோ°ட்டு (கானா).
சாகித்திய கழகம்: இந்திய அரசாங்கத்தினால் 12.4.1954இல் நிறுவப்பட்ட தேசிய இலக்கிய வளர்ச்சிக் கழகம்.

சாசனவியல்: (Epigraphy) பழங்கால எழுத்துக்களை அறியவும் அவற்றின் பொருள்களை விளக்கவும் ஏற்பட்ட கலை.

சாம்பற் புதன்: (Ash Wednesday) இது இலெனென்ட் நாளின் ஆரம்பதினம். பாவ மன்னிப்புக் கேட்பவர்கள் மீது சாம்பலைத் தெளிப்பதிலிருந்து இப்பெயர் வந்தது.

சாரநாத்: வட இந்தியாவில் காசிக்கு வடக்கே நான்கு மைல் தொலைவிலுள்ள இடம். புத்தர் ஞானோபதேசம் பெற்ற பின்னர் கி.மு. 588இல் சாரநாத்தில் மான்காட்டில் தம் பழைய தோழர்களுக்குத் தாம் பெற்ற ஞானத்தைப் போதித்தார். இங்கு அசோகர் பல தூபிகளையும் ஒரு சாசனத் தூணையும் நிறுவினார்.

சிரோக்கோ: (Serocco) தென் மத்திய தரைப் பகுதிகளில் வீசும் வெப்பமான தென்காற்று.

சாப்பள்ளத்தாக்கு: (Death Valley) இது வடஅமெரிக்காவிலே கலிபோர்ணியா வில் மிகச் சூடானதும் பள்ளமானதுமாகிய இடம். இது கடல் மட்டத்தி லிருந்து 276 அடி கீழே இருக்கின்றது. இது ஏறக்குறைய 50 மைல் நீளமுள்ளது. இதனைக் கடக்கச்சென்ற 49 பேர் மாண்டு போயினமையின் இதற்கு இப்பெயர் வழங்குகின்றது.

சிபிரால்டர் குன்று: (The rock of Gibraltar) இது மத்திய தரைக் கடலுக்குச் செல்லும் வாயிலில் இ°பெயினுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையி லுள்ள மத்திய தரைக் கடலுள் தள்ளி வளைந்திருக்கும் ஒரு குன்று. இதன் உயரம் 1396 அடி. இது தனிமையாகவும் கம்பீரமாகவும் இருக்கும் தோற்றம் குறிப்பிடத்தக்கது.

சிவந்தவாவிகள்: புதிய மெக்சிக்கோவில் (New Mexico) பெரிய வெள்ளை மணல்கள் (Great White Sands) என்னும் வனாந்தர மணல் கந்தகச் சுண்ணாம்புக் (Gypsum) கல்லினாலானது. மழை காலத்தில் இங்கு இரத்த நிறமுள்ள நீர் குளங்களாக நிறைந்து நிற்பதுண்டு.

திக்கித்தெரிப் பள்ளம்: (The valley of Tikitere) இது நியுசீலந்திலுள்ளது. இங்கு கொதி சேற்றுக்குளங்களும், வெந்நீரூற்றுக்களும் கந்தகப்புகையும் இருப்பதாலும் இவற்றின் கொடிய தன்மைகளாலும் இது ‘நரகம்’ எனப் படுகின்றது.

நோய்: நுண் கிருமிகள், வைர° புழுக்கள் முதலியன நோய்களை உண் டாக்கலாம். ஊட்டக் குறைவினாலும் நோய்கள் உண்டாகின்றன. வயது சென்றவர்களுக்கு பலக் குறைவு காரணமாக நோயுண்டாகலாம்.

பஞ்சாங்கம்: (Almanac) நாள், வாரம், மாதம், ஆண்டு முதலியவற்றோடு அமாவாசி, பூரணை, சந்திரனின் செலவு விழாக்கள் போன்றவற்றைக் காட்டும் நுhல்.

பலட் ஆட்டம்: (Ballet) கதையைக் கூத்தினாலும் உடல் அங்கங்களின் அசைவினாலும் ஆடிக் காட்டும் மேல் நாட்டு நடனம். இது 15ஆம் நூற் றாண்டில் தொடங்கிப் பிரான்°, இங்கிலாந்து, உருசியா, ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகளில் பெரிதும் வளர்ச்சியடைந்தது.

பாதிப்பின்மை: (Immunity) அம்மை, நெருப்புக் காய்ச்சல், பிளேக், போன்ற நோய்கள் பாதியாதபடி மருந்துகள் ஊசிமுலம் புகுத்தப்படுகின்றன. இதனால் உடலில் அந் நோய்களை எதிர்க்கும் சக்தி உண்டாகிறது. ஒரு முறை இந்நோய் கண்டவர்களுக்கு அந்நோய்களின் பாதிப்பின்மை உண்டாகிறது.

பெரிய உப்பு வெளிகள்: (Great salt Plains) ஐக்கிய அமெரிக்காவில் ஒக்லகோமா (Oklahoma) என்னுமிடத்திலுள்ள உப்பு வெளி எட்டு மைல் நீளமும் ஆறு மைல் அகலமுமுள்ளது. இங்கு ஒளியினால் கண்ணைக் கூசச் செய்யும் வெண்ணிற உப்புளது.

பைபிள்: கிறித்தவர்களின் வேதம். இதில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பகுதிகளுண்டு. பழைய ஏற்பாடு எபிரேயமொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டிருந்தன. பழைய ஏற்பாடு கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. கி.பி. 2ஆம் நுhற்றாண்டில் பைபிள் முழுமையும் இலாத்தினில் மொழி பெயர்க்கப்பட்டது. 14ஆம் நுhற்றாண்டினிறுதியில் வைக்கிளிவ் என்பவர் பைபிள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இது ஏறக்குறைய 200 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

மலைக்கிழவம்: (Old man of the mountain) இது நியுஹாம் சையரில் (ஐக்கிய அமெரிக்கா) வெள்ளை மலையின் செங்குத்தான பாறையில் ஒரு மனித முகத்தின் பக்கத்தோற்றம் காணப்படுகிறது. நெற்றியில் வில்வடிவான புருவம் 100 அடி உயரமுள்ளது.

மறையும் நீருற்று: (Sinking Creek) இது கெந்தக்கி (ஐக்கிய அமெரிக்கா) யிலுள்ள நீருற்று. இது சடுதியில் நிலத்தின்கீழ் மறைந்து மிகப் பல மைல்கள் சென்று மலைக்குகை ஒன்றின் அடியால் வெளிவருகின்றது. இது நாடகத்தில் திரையின் காட்சி போன்றது.

மலேரியாச் சுரம்: இது அனோபிலி° என்னும் நுளம்புக் கடியினாலுண்டா கிறது. நுளம்பு கடித்து இரத்தத்தை உறிஞ்சும்போது நோய்க் கிருமிகளை உடம்பில் புகுத்திவிடுகின்றது. இக் கிருமிகள் இரத்தத்திற்கிடந்து பெருகுதலால் மலேரியாச் சுரமுண்டாகிறது.

மூளை: நரம்பு மயமான திசுக்களின் திரட்சி. இது உடம்பின் தொழிற் பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. இது புலன் உறுப்புக்கள் செய்திகளை அறிந்து என்ன செய்யவேண்டுமென்பதை தசைநார்களுக்கு (Muscles) அறிவிக்கின்றது.

மெல்லும் பிசின்: (Chewing gum) சப்போட்டா என்னும் சீமை இலுப்பை மரப்பாலிருந்து செய்யப்படுகிறது. சப்போட்டா வெப்ப மண்டல அமெரிக்க மரம்.

கண்டுபிடிப்புகள்

அச்சு எழுத்துக்கள் (மரத்தில் வெட்டியவை): குதென் பேக் (Guttenberg), செர்மனியர் 1450.

அணுகுண்டு: அமெரிக்க பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 1945.

அபாயமில்லாச் சுரங்க விளக்கு: (Mine safety lamp) இடேவி(Davy), ஆங்கிலர் 1815.

அபாயமில்லாத் தீக்குச்சி: (Safety match) வொன்°குரோத்தர் (ஏடிn
ளுஉhசடிவாநச) 1855.

அம்மைப்பால் குத்துதல்: யென்னர்(Jenner), ஆங்கிலர் 1796.

அன்டிசெப்டிக் சத்திர சிகிச்சை: (Antiseptic surgery) இலி°தர் (Lister), ஆங்கிலர் 1865.

ஆகாயக் கப்பல்: (Air Ship) செப்பெலின் (Zeppelin), செர்மனியர் 1900.

இடி வாங்கி: (Lightning Conductor): பிராங்லின் (Franklin), அமெரிக்கர் 1752.

இடீசெல் எந்திரம்: (Diesel engine) இடீசெல், செர்மனியர் 1893.

இடைனமைட்: (Dynamite) நோபெல் (Nobel), சுவிடின் நாட்டவர் 1866.

இயங்கும் படம்: (Motion picture) தோம° அல்வா எடிசன், அமெரிக்கர் 1893.

இரத்தத்தின் சுற்றோட்டம்: (Blood Circulation) Harvey, ஆங்கிலர் 1628.

இராடர்: (Radar) வாட் (Sir Robert Watson Watt), ஆங்கிலர் 1939.

இருதிசை மின்சார ஓட்ட விதிகள்: (Laws of alternationing current) இ°தென் மெச் (Steinmetz),
அமெரிக்கர் 1892.

இரேடியம்: கூரி (Curie), பிரான்சியர் 1895.

இரேடியோ (வானொலி): மார்கோனி(Marconi), இத்தாலியர் 1896.

இலைனோடைப்: (Linotype) மெர்கந்தலர் (Mergenthalar), அமெரிக்கர் 1885.

இரப்பரைக் கந்தகத்தோடு கலந்துகெட்டியாக்கும் முறை: (Valcanized rubber) குட்டீயர் (Good Year)
1844.

இன்சுலின் (நீரிழிவு மருந்து): பாண்டிங், பெ°ட் (Banting and க்ஷநளவ),

கனடியர் 1932.

உயிர்களின் இன உற்பத்திக் கொள்கை: (Origin of species) இடார்வின், ஆங்கிலர் 1859.

உருக்கு: பெ°மர் (Bessmer), ஆங்கிலர் 1856.

உரைஞ்சித் தீமுட்டும் தீக்குச்சி: (Friction Match) வாக்கர் (றுயடமநச),

ஆங்கிலர் 1827.

உள்ளெரி எந்திரம்: (Internal Combustion engine) ஒட்டோ(டீவவடி),
செர்மனியர் 1876.

ஊசலின் (Pendulum) தத்துவம்: கலிலியோ, இத்தாலியர் 1564-1642.

ஊற்றுப் பேனா: (Fountain pen) வாட்டர்மன் (Water-man), அமெரிக்கர் 1844.

எக்° கதிர்கள்: (X-rays) உரோண்ட்சென் (Roentgen), செர்மனியர் 1895.

எந்திரக் கலப்பை (Tractor) பேர்கர் (Burgor), அமெரிக்கர் 1889.

எந்திரத்தறி (Cotton gin) விட்னி(Whitney), அமெரிக்கர் 1793.

ஒட்டோகைரோ: (Autogyro) (இறக்கையில்லாத சிறிய விமானம்). கியேர்வா (Cierva), இ°பானியர் 1924.

ஒலிபதியும் தட்டுகள்: (Disc records-Phonograph) பேர்ளின்னர் (Berlininner), 1887.

காசநோய்க் கிருமிகள்: (Tuberclosis bacillis) கொச் (kotch), செர்மனியர் 1882.

கடல் தந்திக்கம்பி: (Submarine cable) மோர்° (Morse), 1842.

சண்டக்கரப்பன் (Diphtheria) நோய்க்கிருமிகள்: கிளெப்° (klebs), செர்மனியர் 1883.

கம்பியில்லாத் தந்தி: மார்கோனி (Marconi), இத்தாலியர் 1896.

கம்பியில்லாத் தொலைபேசி: (Wireless Telephone) பெசென்டின் (Fessenden) 1902.

காற்றடைக்கும் இரப்பர் வளையம்: (Pneumatic tyre) இடன்லப் (Dunlop), இ°கொத்லாந்தியர் 1888.

காற்று பிறேக்: (Air brake) வெ°டிங் கவு° (Westing house), அமெரிக்கர் 1868.

குண்டூசி செய்யும் எந்திரம்: இலெமுவெல்ரைட் (Lemuel Wright), அமெரிக்கர் 1824.

குளோரபோம்: (Chloroform) சிம்சன் (Simpson), இ°கொத்தியர் 1847.

கெலிகோப்தர் (Helicopter) விமானம்: உரோல்-டி-பெ°காரா (Raul de Pescara), பிரான்சியர் 1923.

கைக்கமராப் பில்ம் சுருள்: (Roll film) ஈ°ட்மன், வாக்கர் (Eastman and Walker), அமெரிக்கர் 1888.

கைடிரோபியா நோய்க்கிருமிகள்: (Hydrophobia bacillus) பா°ரூவர், பிரான்சியர் 1882.

சறுக்கு விமானம்: (Glider) இலிலிஎன்தல் (Lilienthal), செர்மனியர் 1877.

சாக்கரின்: (Saccharin) கொன்°தான்தின் பால்பேக் (Constantin Falberg), 1879.

சிமெந்து: யோன் சிமெற்றன் (John Smeaton), ஆங்கிலர் 1756.

சினிமாப்படம் காட்டும் எந்திரம்: உலுமெரி சகோதரர் (Lumiere brothers), பிரான்சியர் 1895.

சுழல் துப்பாக்கி: கொல்ட் (Colt), அமெரிக்கர் 1835.

செயற்கைச் சாயம்: H. Pepin 1856.

செயற்கை நுhல்-ஆடர்மார்° (Audermars) 1855.

செயற்கைப் பட்டு: (Rayon) இடி சார்டொனெட் (De Chardonnet), பிரான்சியர் 1889.

செயற்கைப் பென்சிலின் (மருந்து): உடு விக்னியாட் (Du-Vigneaud), பிரான்சியர் 1946.

சேப்டி லாம்பு: (Safety lamp) இடேவி(Davy), ஆங்கிலர் 1816.

சேப்டி மாச்: (Safety match) Pusch 1844.

தட்டச்சு: (Type writer) சோல்° (Soles), அமெரிக்கர் 1868.

தந்தி: தோம° ஆல்வா எடிசன் (Thomas Alwa Edison) 1878.

தாவரங்களுக்கும் பிராணிகளுக்கும் விஞ்ஞானப் பெயரிட்டவர் இலின் னிய° (Linneaus),
சுவிற்சலாந்தியர் 1701-1778.

தானே இயங்கும் தொலைபேசி: (Automatic Telephone) Strowger 1889.

திசையறி கருவியைப் பற்றி முதலில் ஐரோப்பியருக்கு அறிவித்தவர்: மார்க்கோப்
போலோ, இத்தாலியர் 13ஆம் நூ.

தெர்மோ° குடுவை: (Thermos flask) திவர் (Sir James Dewar), இ°கொத்தியர் 1926.

தையல் எந்திரம் ஹோ(Howe), அமெரிக்கர் 1846.

தொலை நோக்கி: (Telescope) இலிப்பேர்சி (Lippershey), ஒல்லாந்தியர் 1608.

தொலைபேசி: (Telephone) பெல் (Bell) அமெரிக்கர் 1876.

நிழற்படம்: (Photography) நிப்சி (Niepce) 1827.

நிற நிழற்படம்: (Colour photography) ஐவி° (Ives), அமெரிக்கர் 1892.

நீராவி எந்திரம்: வாட்(Watt), இ°கொத்தியர் 1762.

நீராவி இயந்திர வண்டி: (Steam locomotive) இ°டிபின்சன் (Stephenson), ஆங்கிலர் 1829.

நீராவிக்கப்பல்: வல்டன் (Fulton), அமெரிக்கர் 1808.

நீர்முழ்கிக்கப்பல்: ஒலந்து (Holland), அமெரிக்கர் 1900.

நுண்கிருமிக் கொள்கை: (Germ theory) பாச்ருவர் (Pastuer), பிரான்சியர் 1876.

நெருப்புக் காய்ச்சல் கிருமிகள்: (Typhoid bacillus) கொச் (Koch), செர்மானியர் 1880.

நைலான்: (Nylon) கரதேர்° (Carothers), அமெரிக்கர் 1937.

பரம்பரை பற்றிய விதிகள்: (Laws of heridity) மென்டெல் (Mendel), ஆ°திரியர் 1866.

பலுhன்: (Baloon) யோசெப், எட்டின்மொன்கொல்வர் (Joseph and Etine Montgolpher), பிரான்சியர் 1783.

பவர் உயர்த்தி: (Power elevator) ஒட்டி° (Otis), அமெரிக்கர் 1852.

பிராணவாயு காற்றிலிருப்பது: இலவோசியர் (Lavoisier), பிரான்சியர்
1743-1794.

பிராணவாயு: யோசெப் பீரீ°ட்லி (Joseph Priestley), ஆங்கிலர் 1774.

பிளா°டிக்: அலக்சாந்தர் பாக்° (Alexander Parkes), ஆங்கிலர் 1855.

புல்வெட்டும் எந்திரம்: (Lawn mower) கில்° (Hills), அமெரிக்கர் 1868.

பூமியின் கவரும் சக்தி: நியூட்டன் (Newton), ஆங்கிலர் 1665.

பூமியும் கிரகங்களும் சூரியனைச் சுற்றிவருதல்: கொப்பர் நிக° (Copernicus), பிரான்சியர் 1543.

பென்சிலின்: அலக்சாந்தர் பிளெமிங் (Alexander Fleming), ஆங்கிலர் 1927.

பேக்லைட்: (Bakelite) பேக்லன்ட்(Bakeland), பெல்சிய-அமெரிக்கர் 1907.

பேசும்படம்: கே° (Case) 1926.

பைசிக்கிள்: பரன் டிரேயி° (Baron Drais), செர்மனியர் 1818.

போட்லன்டு சிமெந்து: அ°ப்டின் (Joesph Aspdin), ஆங்கிலர் 1824.

போனோகிராம்: தோம° அல்வா எடிசன் 1877.

மகிர°கோப்பு: (Microscope) ஹான்°, யான்சென் (Hans and Jacharias Janssen), ஒல்லாந்தர் 1950.

மசிக்லாண்டேண்: (Magic Lantern) அதனேசிய° கிரச்சர் (Athanasius kircher), செர்மனியர் 1646.

மலேரியாச் சுரத்துக்குக் காரணம்: இலவேரன் (Laveran), பிரான்சியர் 1880.

மார்புசோதினி: (Stethoscope) இலீனக் (Laennec), பிரான்சியர் 1819.

மின்கல அடுக்கு (Electric battery) வோல்டா (Volta), இத்தாலியர் 1745.

மின்காந்தம்: (Electromagnet) இ°ரேர்சியன் (Sturgeon), ஆங்கிலர் 1820.

மின்சக்தியால் நோய்களைக் குணமாக்கும் கொள்கை: கல்வானி (Galvani), இத்தாலியர் 1737.

மின்சார இரெயில் வண்டிப்பாதை: (Electric railway) சிமென்° (Siemens), செர்மனியர் 1877.

மின்சார சனனி: (Dynamo electric machine) பிராடே (Faraday), ஆங்கிலர் 1831.

மின்சார மணி: (Eletric bell) யோசெப் ஹென்றி (Joesph Hentry), அமெரிக்கர் 1840.

மின்சார மோட்டார்: (Electric motor) தெ°லா (Tesla), அமெரிக்கர் 1887.

மின்சார விளக்கு: எடிசன்(Edison), அமெரிக்கர் 1879.

மின்னணுக்கொள்கை: (Electron Theory)-பொர்(Bohr), செர்மனியர் 1913.

முலாம் பூசுதல்: (Electorplating) இடேவி (Davy), ஆங்கிலர்.

மைக்கிரோபோன்: (Microphone) பேளினர் (Berliner), அமெரிக்கர் 1877.

மொனேடைப்: (Monotype) மேர்கன்தலர் (Merganthalar), செர்மன்-அமெரிக்கர் 1885.

மோட்டார் சைகிள்: இடைமிளர் (Daimler), செர்மனியர் 1885.

மோபியா: (Mophia) செற்றுhர்நர் (Seturner), செர்மனியர் 1803.

யுத்தத் தாங்கி (Military tank) சுவின்டன் (Swinton), ஆங்கிலர் 1914.

யெட் எஞ்சின் (Jet engine) பிராங் விட்டில் (Sir Frank Whittle), ஆங்கிலர் 1930.

வாயுவை திரவமாக்குதல்: (Liquefaction of gases) வரடே (Faraday), ஆங்கிலர் 1823.

வாயுபாரமானி: (Barometer) தொரிசெலி (Torricelli), இத்தாலியர் 1643.

வாயு விளக்கு: (Gas light) வில்லியம் மார்டக் (Willam Murdock), ஆங்கிலர் 1792.

வான சாத்திரமுறை-கொப்பர் நிக்க° (Copernicus), பெலாந்தியர் 1540.

விமானம்-இரைட் சகோதரர் (Wright Brothers), அமெரிக்கர் 1903.

வில் விளக்கு(arc lamp): ஹம்பிரி டேவி (Sir Humphrey Davi), ஆங்கிலர் 1808.
பெரிய தீவுகள்
(பருமை ஒழுங்கில்)
பரப்பு
ஆட்சி கடல் சதுரமைல்
கீரீன்லாந்து இடென்மாக் ஆக்டிக் 827,000

நியுகினி (New Guinea) பிரிட்டன், எந்
நெதர்லண்ட் பசிபிக் 330,000

போர்னியோ(Borneo) ” இ-னே ” 289,000

பல்வின்லந்து (Baffin Land) கனடா ஆக்டிக் 236,000

மடகா°கர் (Madagascar) பிரான்° இந்தியக் 228,000

சுமந்திரா (Sumatra) இந்தோனேசியா ” 178,300

கிரேட்பிரிட்டன்(Great Britain) பிரிட்டிஷ் அத்லாந்திக் 89,126

ஹொன்சு (Honshu) யப்பான் பசிபிக் 87,500

செலிபி° (Celebes) இந்தோனேசியா இந்தியக் 72,000

பிரின்° அல்பேட் (Prince albert) Arctic ஆக்டிக் 60,000

சவுத்ஐலண்ட் (South Island) நியுசீலந்து பசிபிக் 58,500

யாவா(Java) இந்தோனேசியா இந்தியக் 48,400

நோத் ஐலண்ட் (NorthIsland) நியூசிலாந்து பசிபிக் 44,500

கியுபா (Cuba) குடியரசு அத்லாந்திக் 44,000

நியுபவண்ட்லண்ட்

(Newfound Land) பிரிட்டிஷ் ” 42,750

உலூசன் (Luzon) பிலிப்பைன் பசிபிக் 41,000

ஐ°லண்ட்(Iceland) சுயேச்சை அத்லாந்திக் 40,437

எல்லெ°மெரி (Ellesmere) பிரிட்ஷ் ஆக்டிக் 40,000

மின்டானோ (Mindanao) பிலிப்பைன் பசிபிக் 37,000

ஒக்கைடோ (Hokkaido) யப்பான் ” 36,500

அயர்லாந்து (Ireland) அத்லாந்திக் 32,000

நோவாயா செம்லியா
(Novaya Zemlya) உருசியா ஆக்டிக் 30,000

சக்கலின்(Shakhalin) ” பசிபிக் 29,100

ஹாய்தி(Haiti) அத்லாந்திக் 28,200

த°மேனியா (Tasmania) பிரிட்டிஷ் பசிபிக் 26,215

இலங்கை(Ceylon) சுய ஆட்சி இந்தியக் 25,400

பாங்°(Banks) பிரிட்டிஷ் ஆக்டிக் 25,000

நாத்டெவான் (North Devon) ” ” 24,000

வான்கோவர் (Vancouver) கனடா பசிபிக் 20,000

மெல்விலிலந்து (Melville Land) பிரிட்டிஷ் ஆக்டிக் 20,000

தெராடெல்வூகோ
(Tierradel Fuego) அசன்டைன் அத்லாந்திக் 18,500

சவுதாம்டன் (South ampton) பிரிட்டிஷ் ஆக்டிக் 17,800

வெ°ட் °பெட்°பேர்சின்
(West Spitzbergen) நோர்வே ” 15,260

பார்மோசா(Formosa) சீனா ” 13,500

ஹய்மன் (Haiman) ” சீனக் 13,000

நோத் சமர்செட்
(North Sommerset) பிரிட்டிஷ் ஆக்டிக் 12,000

சிசிலி(Cicily) இத்தாலி மத்தியதரைக் 10,000

நீண்ட ஆறுகள்
(நீள ஒழுங்கில்)
விழும் கடல் நீளம்

மிசிசிப்பிமிசௌரி
(Mississippi-Missouri) மெக்சிக்கோ வளைகுடா 4,221

அமேசன் (Amazon) அத்லாந்திக்கடல் 4,000

நைல் மத்தியதரைக்கடல் 3,600

யாங்சி(Yangtze) வடபசிபிக் ” 3,400

யெனிசி(Yenisei) ஆக்டிக் ” 3,300

கொங்கோ(Congo) அத்லாந்திக் ” 3,000

நைகர்(Niger) கினியாவளைகுடா 3,000

குவாங்கோ (HwangHo) ஆக்டிக் கடல் 2,700

இலேனா (Lena) ” 2,600

அமுர் (Amur) வடபசிபிக்கடல் 2,500

பரனா (Parana) அத்லாந்திக்கடல் 2,450

வொல்கா (Volga) க°பியன் கடல் 2,400

மெக்கன்சி (Mackenzie) பின்வோட் கடல் (Beaufort Sea) 2,300

இலாபிளாட்டா (La Plata) தென் அத்லாந்திக் கடல் 2,300

யூகொன் (Yukon) பேரிங்கடல் (Behring Sea) 2,000

ஆர்க்கன்சா° (Arkansas) மிசிசிப்பியின்கிளை 2,000

மெடீரா (Mederia) அமெசன் 2,000

சென்ட்லோரேன்° செனட்லோரன்° வளைகுடா 1,800

(St.Lawrence)

இரையொடெல்நோர்டி மெக்சிக்கோ வளைகுடா 1,800

(Rio del Norte)

சயோ பிரான்சி°கோ அத்லாந்திக் கடல் 1,300

(Sao Francisco)

இடான்யூப் (Danube) கருங்கடல் 1,725

யுபிராதி° பாரசீகவளைகுடா 1,700

சிந்து அராபிக் கடல் 1,700

பிரம்மபுத்திரா வங்காளவிரிகுடா 1,680

சாம்பெசி (Zambezi) மொசாம்பிக் (Mozambique) 1,600

கங்கை வங்காளவிரிகுடா 1,500

மிகப்பெரியவை, நீண்டவை, உயர்ந்தவை
மிகப்பெரிய தீவு – கிரீன்
லாந்து 827,300 ச.மை.

” வாவி - கா°பியன் கடல் 170,000

” ஆறு - அமெசன். இதன்
வடிநிலம் 2,702,200 ” ”

” வனாந்தரம் - சகாரா 3,000,000 ” ”

” பட்டினம் - இலண்டன் 00000700 ” ”

மிகப்பெரிய நல்ல நீர்வாவி - சுப்பீரியர் வாவி 31,200 ச.மை.

” குடா நாடு - இந்தியா

” கண்டம் - ஆசியா

” சனத்தொகையுள்ள நாடு - சீனா (1953) 581,709,702.

சனத்தொகை நெருங்கிய நாடு - யாவா; ஒரு சதுர மைலுக்கு 817 பேர்

” ஆழமுள்ள கடல் - பசிபிக் கடல்

” கழிமுகத்திட்டு (Delta) சுந்தர்பன் (Sunderban) வங்காளத் திலுள்ளது 8,000 ச.மை.

” கிரகம் - வியாழன்

” பூங்கா-யெல்லோ நேசனல் பாக் (Yellow National park) ஐக்கிய அமெரிக்காவிலுள்ளது.
மிகப்பெரிய தீவுக்கூட்டம் - மலாய்த் தீவுக்கூட்டம்

” உள்நாட்டுக்கடல் - மத்தியதரைக்கடல்

” கப்பல் செல்லும் கால்வாய் - பால்டிக் வெண்கடல் கால்வாய் (Baltic White sea canal) 152 மைல்.

” எரிமலை - மோன லோவா (Mauna Loa) 12,400 அடி.

” பவளத்திட்டு - ஆ°திரேலியாவின் வடகிழக்கிலுள்ளது.

” அரண்மனை - வத்திக்கான் (உரோமில்)

” கப்பல் - குவீன் எலிசபெத் 83,673 தொன்.

” வயிரச் சுரங்கம் - கிம்பர்ளி (Kimberly) தென்னாப்பிரிக்கா விலுள்ளது.

” உருவச்சிலை - விடுதலைச்சிலை ; நியுயோக்கி லுள்ளது.
மிகப்பெரிய பாலூட்டி - திமிங்கிலம்.

” கிறித்துவ கோயில் - உல்ம் கதீட்டிரல் (Ulm Cathedral) செர்மனியிலுள்ளது. உயரம் 532 அடி

” வைரம் - கலினன் (Callinan)

” பிரகாரம் (Corridor) - இராமேசுவரம் 4000 அடி.

” வடக்குத் தெற்காக நீண்ட நிலப்பரப்பு - வடஅமெரிக்காவும் தென்னமெரிக்காவும். இவை ஆக்டிக் முதல் அண்டாக்டிக் வரையில் நீண்டுள்ளன.

” புகைவண்டி நிலைய மேடை- சோனிப்பூர் (Sonepur) நிலையம், பீகார்.

” புகைவண்டி பாதை - கண்டம் விட்டுக்கண்டம் செல்லும் சைபீரியப் புகைவண்டிப் பாதை
(Trans siberian Railway) இரிகாவிலிருந்து விலாடிவொ°டொக்குச் செல்கின்றது. நீளம் 6,000மைல்.
” முத்து - பெறெ°போட் கோப் (Beresford Hope) எடை 1,800 கிராம்.

” தொலைநோக்கி - (Telescope) பல்மர் (Palmar) மலையில் வைக்கப் பட்டுள்ளது. இலென்சின்
குறுக்களவு 200 அங்குலம்.

” நூதன பொருட்காட்சி சாலை - இலண்டன்.

” சினிமா மாளிகை - உரொக்சி (Roxy) நியூயோக்கிலுள்ளது.

” புகைவண்டி நிலையம் - கிராண்ட் சென்ட்ரல் தேர்மின° (Grand Central Terminus)
நியூயோக்கிலுள்ளது. 47 மேடை களுள்ளது.

” கும்மட்டம் (Dome) பிசாப்பூரிலுள்ள கொல் கொம்பா° (Gol Gombax) குறுக்களவு 144 அடி.

” சுவர் - சீனப் பெருஞ்சுவர். நீளம் 1,500 மைலுக்கு அதிகம்.

” மணி- மொ°கோவிலுள்ளது. உயரம் 137 அடி; விட்டம் 21 அடி; எடை 200 தொன்.

” தனி நாடு - பிரேசில்

” அணைக்கட்டு - போல்ட்டர் டாம்ப் (ஐ.அ.)

” தனி இராச்சியம் - சோவியத் உருசியா

” பெருந்தொகை மக்கள் கைக்கொள்ளும் சமயம் - பௌத்தம்

” அதிக மொழிகளில் அச்சிடப்பட்ட நூல்- பைபிள். ஏறக்குறைய 200 மொழிகளில்

மிக உயர்ந்த மலைச்சிகரம் - இமயத்திலுள்ள எவரெ°ட் 29141 அடி.

” நீர்வீழ்ச்சி - துக்லா (Tuegla) தென்னாப்பிரிக்காவிலுள்ளது. 2,810 அடி

” விழி எரிமலை - செம்பொரொசோ (Chemborozo, Equador) 20,702 அடி.

” நாடு - திபெத்.

” பட்டினம் - பாரி (Phari), திபெத்தில் 14,300 அடி

” வாவி - தித்திக்காகா (Titicaca), போல்வியாவில் கடல் மட்டத்துக்கு மேல் 12,000 அடி

” கட்டடம்- எம்பயர் இ°டேட் கட்டடம் (Empire State Building) 1,250 அடி.

” புகைவண்டிப்பாதை - பெரு (Peru) இலிமாவிலிருந்து ஒரயாவுக்கு ( lima to Oroya) 15,000 அடி.

” புகைவண்டிப் பாலம் - பிரான்சிலுள்ள பேட்° வியடக்ட் (Fades Viaduct) 434 அடி.

” கோபுரம் - எய்பெல் (Eiffel) 985 அடி; பிரான்சில்.

மிக நீண்ட மலைத்தொடர்- அண்டீ° 5,500 மைல்.

” புகைவண்டி நிலைய மேடை - பீகாரிலுள்ள சோனிப்பூர் (Sonepur)

” அணைக்கட்டு - பாகி°தானிலுள்ள சுக்கூர் பரேஜ் (Sukkur Barrage)

” புகைவண்டிப்பாதை - சைபீரியாவுக் கூடாகச் செல்வது (Trans Siberian Railway - Riga to Vladivastock)
6,000 மைல்.

மிக நீண்ட சுரங்கப்பாதை - சுவிற்சலாந்திலுள்ள சிம்பிளொன் (Simplon) 12 மைல் 458 யார்
(கசம்)

“ ஆறு - மிசிசிப்பி மிசௌரி 4,502 மைல்.

மிகஆழமான இடம் பிலிப்பைன் தீவுக்கு அண்மையிலுள்ள மெண்டானோ (Mendano)
தீவுக்கருகிலுள்ளது. 35,400 அடி.

“ வாவி- சைபீரியாவிலுள்ள பைகல் (Baikal) 2,300 அடி.

“ கடல்மட்டத்துக்கு அதிக ஆழத்திலுள்ள நீர்நிலை - சாக்கடல் 1,312 அடி

“ மிகவெப்பமான இடம் - சாப்பள்ளத்தாக்கு, (கலிபோர்னியா) 1340; அசிசியா (Aziziah)
திரிபிலோயிதனியா (Triploitania) 1360; சகாரா 1330.

மிக வறண்ட இடம் - சாப்பள்ளத்தாக்கு (Death Valley) ஆண்டில் 1 1/2 அங்குல மழை, அரிக்கா
வில்லேச் (Arica Village) 1/5 அங்குல மழை.

மிக ஈரமான நாடு - அசாமிலுள்ள மனோயேர்மான் (Manoyourman) ஆண்டில் 499 அங்குல
மழை.

மிக வடக்கிலுள்ள பட்டினம் - ஹம்மர் பெ°ட் (Hemmer fest) நார்வே யில்

மிகக்குளிர்ந்த இடம் - வேர்கோயான்ஸ்க் (Verkoyansk) வட சைபீரியாவி லுள்ளது.

வெப்பநிலை சூனியத்துக்கீழ் 85 டிகிரி.

மிகக்கூடிய தொகை மக்கள் பின்பற்றும் சமயம் - பௌத்தம்.

மிகச்சிறிய சுதந்திரநாடு - மொனாகோ (Monaco) எட்டுச்சதுரமைல்.

மிக உப்புள்ள கடல் - சாக்கடல்

இந்திய சரித்திர சம்பந்தமான காலக்குறிப்பு
சிங்கன்பூர் மிர்சாப்பூர்
கற்கால ஒவியங்கள் கி.மு. 24,000

” 12,000

புதிய கற்காலப்பண்பாடு: மைசூரில் ” 4,000

மொகஞ்சதரோ நாகரிகம் 3500 - 2500

ஆரியர் படையெடுப்பு ” 1,600

வேதகாலம் கி.மு. 1000, கி.மு. 500

உபநிடதங்கள் ” 800 ” 500

கபிலர் (சாங்கியதத்துவஞானம்) ” 700

மகாவீரர் ” 599 ” 527

புத்தர் ” 563 ” 483

புராணங்கள் ” 500

கிரேக்கர் படையெடுப்பு கி.மு. 329 கி.மு

மயூர பரம்பரை ” 322 ” 298

மெக°தீன° (பாடலிபுரத்தில்) ” 302 ” 298

அசோகர் ” 273 ” 232

கனுஷ்கர் (குசான் அரசன்) கி.பி. 120

சாரகர் (மருத்துவர்) ” 120 கி.பி.

குப்த அரச பரம்பரை ” 320 ” 530

சந்திரகுப்தன் 1 ” 320 ” 330

சமுத்திரகுப்தன் ” 330 ” 380

விக்கிரமாதித்தன் ” 380 ” 413

பாகியான் (சீனயாத்திரிகன்) இந்தியாவில் கி.பி. 399 கி.பி. 414

அசந்தா கோயில்களும் ஓவியங்களும் ” 100 ” 700

காளிதாசர் ” 400

அகுணர் (Huns) படையெடுப்பு ” 455 ” 500

ஆரியப்பட்டர் (கணிதவல்லார்) ” 499

வராகமிகிரர் (வானசாத்திர வல்லார்) ” 505 ” 587

பிரமகுப்தர் (வானசாத்திரி) ” 598 ” 660

ஹார்சவர்தனா (அரசன்) ” 606 ” 648

புலகேசன் II (சாளுக்கிய அரசன்) ” 608 ” 642

யுவான் சுவாங் (ஹியன் திசாங்) இந்தியாவில் ” 629 ” 645

அராபியர் சிந்து நாட்டை வென்றது ” 712

சங்கரர் ” 788 ” 820

கம்போதியாவிற் பொற்காலம் ” 800 ” 1300

சோழ ஆட்சியின் எழுச்சி ” 900

அல்பெருனி (Albureni) அராபிய அறிஞர் ” 973 ” 1048

இடில்லி நகர் கட்டப்பட்டது ” 993

முகமத் கசனி (முகமதிய அரசன்) ” 997 ” 1030

முகமதியர் இந்தியா மீது படை எடுத்தது ” 1008

பா°கரர் (கணிதவல்லார்) ” 1150

அங்கோர்வாட் (கம்போதியாவில்

கட்டப்பட்டது) ” 1150

துருக்கர் இந்தியா மீது படை எடுத்தது ” 1186

மார்க்கோப்போலோ இந்தியாவில், ” 1288 ” 1293

அல்லாவுத்தீன் (சுல்தான்) ” 1296 ” 1315

” சித்தூரைப் பிடித்தது ” 1303

விசயநகர் ஆரம்பமானது ” 1336

கபீர் (புலவர்) ” 1440 ” 1518

பாபா நாநாக் (சீக்கிய மதத்தலைவர்) ” 1469 ” 1538

பேபர் (மொகலாய இராச்சியத்தை

தோற்றுவித்தவர்) ” 1483 ” 1530

வ°கோடிகாமா இந்தியாவை அடைந்தது ” 1498

கிருஷ்ணதேவராயர் (விசயநகர அரசர்) ” 1509 ” 1529

போர்ச்சுக்கீசியர் கோவாவைப் பிடித்தது கி.பி. 1510 கி.பி.

துளசிதாசர் ” 1532 ” 1545

அக்பர் ” 1560 ” 1605

கிழக்கிந்தியக் கம்பெனி உருவானது ” 1565

யகங்கீர் (முகமதிய அரசன்) ” 1605 ” 1627

தாச்மகால் ” 1632 ” 1653

ஒளரங்கசீப் ” 1658 ” 1707

பிராஞ்சியர் புதுச்சேரியைப் பிடித்தது ” 1674

கல்கத்தாவில் ஆங்கிலேயர் வேரூன்றியது ” 1690

இந்தியாவில் பிரான்சு ஆங்கிலப்போர் ” 1756 ” 1763

பிளாசாயுத்தம் ” 1757

உரொபேட் கிளைவ் (வங்காளக் கவர்னர்) ” 1765 ” 1767

வரான்கே°டிங்° வங்காளக்கவர்னர் ” 1788 ” 1795
இராசாராம் மோகன்ராய் பிரம்ம சமாசத்தை

ஆரம்பித்தது ” 1828

உடன்கட்டை ஏறுவது நிறுத்தப்பட்டது ” 1829

இராமகிருஷ்ண பரமாம்சர் ” 1836 ” 1886

சிப்பாய்க்கலகம் ” 1857

இந்தியா இங்கிலாந்தின்

முடியாட்சிக்குட்பட்டது ” 1858

இரவீந்திரநாத் தாகூர் ” 1861 ” 1931

விவேகானந்தர் ” 1863 ” 1902

தயானந்த சரசுவதி ஆரியசமாசத்தைத்

தொடங்கியது ” 1875

இந்திய நாசனல் காங்கிர° ஆரம்பம் ” 1885

இந்தியா ஆங்கிலரிடமிருந்து

விடுதலை பெற்றது ” 1947

தமிழ்ப்புலவர்கள்
அகத்தியர்: அகத்தியம் என்னும் இல
க்கணம் செய்தவர். இவர் காலம் தெரியவில்லை.

அண்ணாமலை ரெட்டியார்: காவடிச்சிந்து செய்தவர் 1861 - 1890

அதிவீரராமபாண்டியன்: நைடதம், காசிக்காண்டம், கூர்ம புராணம், இலிங்கபுராணம்,
வாயுசங்கிதை, வெற்றிவேற்கை என்னும் நூல்களைச் செய்தவர்.

அந்தகக் கவி வீரராகவ முதலியார்: இலங்கைக்குச் சென்று பரராசசேகர அரசனிடம்
பரிசில் பெற்று மீண்டவர் 1654.

அபிராமிபட்டர்: அபிராமி அந்தாதி செய்தவர் . 18ஆம் நூ.

அப்பர்: (திருநாவுக்கரசர்) இவர் சைவசமயசாரியர் நால்வருள் ஒருவர். இவர் தேவாரங்கள்
4 முதல் 6 திருமுறைகளிலுள்ளன. 6ஆம்: - 7ஆம் நூ.

அமிர்தசாகரர்: யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் என்னும் யாப் பிலக்கண நூல்
செய்தவர். 11ஆம் நூ.

அம்பிகாபதி: கம்பரின் குமாரர் 12ஆம் நூ.

அரசகேசரி: இரகுவமிசமியற்றிய யாழ்ப்பாணப்புலவர் 17ஆம் நூ.

அருணகிரிநாதர்: திருப்புகழ் செய்தவர் 15ஆம் நூ.

அருணந்திசிவாசாரியார்: சிவஞான சித்தி, இருபா இருபஃது என்னும் நூல்கள் செய்தவர்.
13ஆம் நூ.

அருணாசலக்கவிராயர்: இராமநாடகம், சீகாழிக்கோவை முதலிய நூல்கள் செய்தவர். 1712-
1779.

ஆண்டிப்புலவர்: ஆசிரிய நிகண்டு இயற்றியவர். 17ஆம் நூ.

ஆறுமுகநாவலர்: பல நூல்களை அச்சியற்றியவரும் நன்னூல் காண்டிகை உரை

செய்தவருமாகிய யாழ்ப்பாணப் பெரும் புலவர். 1822- 1879

இரட்டையர்: முடவரும் குருடருமாகிய இருபுலவர்கள். 15ஆம் நூ.

இராசப்பக்கவிராயர்: திருக்குற்றாலத் தலப்புராணம், திருக்குற்றாலக் குறவஞ்சி முதலிய
நூல்கள் செய்தவர். 18ஆம் நூ.

இராமலிங்க சுவாமிகள்: திருவருட்பாப் பாடியவர். 1823 - 1874.

இரேவணசித்தர்: அகராதி நிகண்டு இயற்றியவர். 16 ஆம் நூ.

இளங்கோவடிகள்: சிலப்பதிகாரம் செய்த புலவர். கி.பி. 175.

இளம்பூரணர்: தொல்காப்பியத்துக்கு உரை செய்தவர். 12ஆம் நூ.

இறையனார்: இறையனார்களவியல் என்னும் அகப்பொருளிலக்கண நூல் செய்தவர். கி.பி.
1ஆம் நூ.

உமறுப்புலவர் சீறாப்புராணம் செய்த முகமதியப்புலவர். 1665.

உமாபதி சிவாசாரியார்: சிவப்பிரகாசம், கொடிக்கவி, உண்மைநெறி விளக்கம், திருவருட்
பயன் முதலிய பல நூல்கள்செய்தவர். 14ஆம் நூ.

ஐயனாரிதனார்: புறப்பொருள் வெண்பாமாலை என்னும் புறப்பொருள் இலக்கணஞ்
செய்தவர். 9ஆம் நூ.

ஒட்டக்கூத்தர்: இராமாயணம் உத்தரகாண்டம், தக்கயாகப்பரணி முதலிய நூல்கள்
செய்தவர். 12ஆம் நூ.

ஒளவையார்: வாக்குண்டாம், நல்வழி முதலிய பல நீதி நூல்களியற்றிய பெண்பாற் புலவர். 12 ஆம் நூ.

கச்சியப்ப சிவாசாரியார்: கந்தபுராணமியற்றியவர். 11ஆம் நூ.

கடவுள் முனிவர்: திருவாதவூரடிகள் புராணமியற்றியவர். 18ஆம் நூ.

கதிரைவேற்பிள்ளை.கு: தமிழ்ச்சொல்லகராதி என்னும் நூல் தொகுத்த யாழ்ப்பாணத் தமிழறிஞர். 1829-1904

கம்பர்- இராமாயணமியற்றியவர். 12ஆம் நூ.

கல்லாடர்: கல்லாட நூலாசிரியர். 9 அல்லது 10ஆம் நூ.

காங்கேயர்: உரிச்சொல் நிகண்டு இயற்றியவர். 17ஆம் நூ.

காளமேகப்புலவர்: பல தமிழ்ப்பாடல்கள் செய்த பெரும்புலவர். 14ஆம் நூ. பிற்பகுதியும்
15ம் நூ. முற்பகுதியும்.

குணவீரபண்டிதர் (நேமிநாதர்): நேமிநாதம் செய்த சமணப்புலவர். 12ஆம் நூ.

குமரகுருபரர்: நீதிநெறி விளக்கம், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், கந்தர் கலிவெண்பா
முதலிய நூல்கள் செய்த பெரும்புலவர். 17ஆம் நூ.

குமாரசுவாமிப்புலவர்.அ: இராமோ தந்தம், சாணக்கிய நீதி வெண்பா முதலிய நூல்கள்
செய்த யாழ்ப்பாணப் புலவர். 1850 -1922

குமாரதேவர்: வீரசைவத் தத்துவஞானி; மகாராசா துறவு முதலிய பல சமய நூல்கள்
செய்தவர். 18ஆம் நூ.

குருகைப்பெருமாள் கவிராயர்: மாறனலங்காரம் செய்தவர். 16ம் நூ.

குருபாததாசர்: குமரேசசதக ஆசிரியர். 18ஆம் நூ.

கொங்குவேள்: பெருங்கதை இயற்றியவர் 7ஆம் நூ.

சங்கரநமச்சிவாயர்: நன்னூல் விருத்தியுரை செய்தவர். 17ஆம் நூ.

சபாபதி நாவலர்: திராவிடப் பிரகாசிகை இயற்றிய யாழ்ப்பாணப்புலவர்

1843 - 1903.

சம்பந்த சரணாலயர்: கந்தப்புராணச்சுருக்கம் செய்தவர். 16ஆம் நூ.

சம்பந்தர் (திருஞானசம்பந்தர்): சமய குரவர் நால்வருளொருவர்.; அப்பர் காலத்தவர்.7ஆம் நூ.

சயங்கொண்டார்: கலிங்கத்துப்பரணி ஆசிரியர் 11ஆம் நூ.

சாமிநாதையர் உ.வே.: பல அரிய தமிழ் நூல்களை அச்சேற்றிய பெரும் புலவர்; 1855-1942.

சிவஞான முனிவர்: சிவஞானபோதத்துக்கு மா பாடியஞ் செய்த புலவர். மரணம்: 1785

சிவப்பிரகாச சுவாமிகள், துறைமங்கலம்: நன்னெறியும் பல பிரபந்தங்களும் செய்த பெரும்புலவர். 17ஆம் நூ.

சின்னத்தம்பிப்புலவர்: மறைசையந்தாதி, கல்வளையந்தாதி முதலிய நூல்கள் செய்த யாழ்ப்பாணப்புலவர். 1716 - 1878.

சுந்தரம்பிள்ளை எம்.ஏ.: மனோன்மணீய நூலாசிரியர். 1855 – 97

சுந்தரர்: சைவசமயாசாரியருள் ஒருவர். 9ஆம் நூ.

சுப்பிரமணிய பாரதியார்: எட்டயபுரத்திற் பிறந்த கவி. தேசிய பாடல்கள் செய்தவர். 1882 – 1921

சூரிய நாராயண சாத்திரியார் வி.கோ.: பல அரிய வசனநூல்களியற்றியவர். 1870 - 1903.

செல்வக்கேசவராயர் எம்.ஏ.: பல அரிய வசன நூல்களியற்றியவர்: 1921

சேக்கிழார்: பெரிய புராணஞ்செய்தவர் 12ஆம் நூ.

சேனாவரையர்: தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரைசெய்தவர். 13ஆம் நூ.

சைமன் காசிச்செட்டி: தமிழ்ப்புலவர் (Tamil Plutarch) என்னும் புலவர் வரலாறு எழுதிய
இலங்கையர். 1807 - 1861

ஞானப்பிரகாசர், நல்லூர்: கத்தோலிக்க சுவாமியார். பல அரிய தமிழ் நூல்களியற்றியவர்.
1875: 1947

தண்டி- தண்டியலங்காரமியற்றியவர். 12ஆம் நூ.

தாமோதரம் பிள்ளை சி.வை: கலித்தொகை, தொல்காப்பியம் முதலிய நூல்களை

முதன்முதல் அச்சேற்றிய யாழ்ப்பாண அறிஞர். 1832 - 1901.
தாயுமான சுவாமிகள்: தாயுமான சுவாமி பாடல்கள் என வழங்கும் பாடல் களைப்
பாடியவர். 1706 - 1744

திருத்தக்கதேவர்: சீவகசிந்தாமணியின் ஆசிரியராகிய சமணப்புலவர். 10ஆம் நூ.

திருமூலர்: திருமந்திரமென்னும் சைவ நூல்களைப் பாடியவர் கி.பி.

5ஆம் நூ?

திருவள்ளுவர்: திருக்குறளாசிரியர். கி.மு. 1ஆம் நூ.

திவாகரர்: திவாகரநிகண்டு செய்தவர் . 10ஆம் நூ.

தொல்காப்பியர்: தொல்காப்பியமென்னும் இலக்கணம் இயற்றியவர்.
கி.மு. 350

நச்சினார்க்கினியர்: கலித்தொகை, சீவகசிந்தாமணி, தொல்காப்பியம் முதலிய நூல்களுக்கு உரைசெய்தவர். 14ஆம் நூ.

நம்பியாண்டார் நம்பி: இராசஇராசனோடு தில்லைக்குச் சென்று திருமுறை களைக் கண்டெடுத்தவர். 10ம் நூ.

நாராயணசாமி ஐயர், பின்னத்தூர்: நற்றிணையைப் பரிசோதித்து முதன் முதல் அச்சேற்றியவர். 1862 - 1914.

நாககுத்தர்: குண்டலகேசி என்னும் நூல் செய்தவர். 10ஆம் நூ.

நாற்கவிராச நம்பி: நம்பிய அகப்பொருள் செய்தவர். 12ஆம் நூ

படிக்காசுப்புலவர்: தொண்டைமண்டல சதகம் பாடியவர். 1686 - 1723

பட்டினத்தடிகள்: பட்டினத்தார் பாடல் என வழங்கும் பாடல்களைப் பாடியவர். 10ஆம் நூ.

பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடற்புராண ஆசிரியர். 16ஆம் நூ.

பரிமேலழகர்: திருக்குறள், பரிபாடல் என்னும் நூல்களினுரையாசிரியர். 13ஆம் நூ.

பவணந்திமுனிவர்: நன்னூலாசிரியர். 13ஆம் நூ.

பாண்டித்துரைத்தேவர்: தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவர். 1867 - 1911

பிங்கலர். பிங்கலநிகண்டு நூலாசிரியர். 11ஆம் நூ.

புகழேந்திப்புலவர்: நளவெண்பா பாடியவர். 13ஆம் நூ.

பூரணலிங்கம் பிள்ளை மு.சி.- தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலை
ஆங்கிலத்திலெழுதியவர். இவர் தமிழ் தொடர்பான தமிழ் இந்தியா முதலிய நூல்களும்
எழுதியுள்ளார். 1866 - 1947.

பெரும்பற்றப்புலியூர் நம்பி: திருவாலவாயுடையார் திருவிளையாடல் பாடியவர். 12ஆம்
நூ.

பேராசிரியர்: தொல்காப்பிய உரை எழுதியவர். 12ஆம் நூ.

பொய்யாமொழிப்புலவர்: தஞ்சைவாணன் கோவை ஆசிரியர். 13ஆம் நூ.

போப்பையர் (Dr.G.U.Pope) தமிழ் கற்றுத் தமிழுக்காக உழைத்த ஆங்கில பாதிரியார். 1820 –
1907

மயில்வாகனப் புலவர்: யாழ்ப்பாண வைபம் செய்தவர். 1773 - 1815.

மறைமலையடிகள்: தனித்தமிழ் நடையைத் தமிழ்நாட்டில் தொடக்கியவர். 1876 - 1950

மாணிக்கவாசகர்: திருவாசகம் பாடியவர்; சமயகுரவருள் ஒருவர். 4-ஆம் நூற்றாண்டுக்கும்
6ஆம் நூற்றாண்டுக்குமிடையில் வாழ்ந்தவர்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திரிசிரபுரம்: பல பிரபந்தங்களும் புராணங்களும் செய்தவர். 1815
- 1895

முன்றுறையரையனார்: பழமொழி என்னும் நூலாசிரியர். 5ஆம் நூ.

மெய்கண்ட தேவர்: சிவஞான போதஞ்செய்தவர். 13ஆம் நூ.

விபுலானந்தர்: யாழ்நூல் இயற்றிய மட்டக்கலப்புப் புலவர். 1892 1947

வில்லிபுத்தூரர்: வில்லிபாரத ஆசிரியர். 15ஆம் நூ.

வீரமாமுனிவர்: தேம்பாவணி செய்த கத்தோலிக்கப் புலவர். 1680 1746

வேதநாயகம் பிள்ளை, மாயவரம்: சர்வசமரச கீர்த்தனை பாடிய கத்தோலிக்க புலவர். 1824
- 89.

வேற்பிள்ளை க.: வாதவூர்ப்புராண உரை செய்தவர்; யாழ்ப்பாணப்புலவர். 1847 - 1930

பெரியபூமி அதிர்ச்சிகள்
ஆண்டு இடம் மாண்டவர்கள்

1693 செப். சிசிலி (இத்தாலி) 60,000

1703 பெப். 2 யப்பான் 200,000

1755 நவ. 1 இலி°பன் (போர்ச்சுகல்) 50,000

1783 பெப். 4 கலபிரியா (Calabria-Italy) 60,000

1797 பெப். 4 குட்டோ (Quito, Ecuador) 41,000

1868 ஆக°ட் 13-15 பேரு, எக்குடோர் 25,000

1883 ” 25-28 யாவாத்தீவு 36,000

1886 ” 31 சாள்ஸ°ரன் (Charleston: South Carolinia) 41

1906 எபிரல் 18-19 சான்பிரான்சி°கோ (கலிபோர்னியா) 500

1906 எபிரல் 16 வல்பரிசோ(Chile) 1,500

1907 ஜன 14 கிங்°ரன் (யமீக்கா) 1,400

1908 டிசெ. 28 சிசிலி கலபிரியா 76,483

1910 ” கர்ராகோ (Costa Rica) 1,500

1915 ஜன. 13 மத்தியஇத்தாலி 29,978

1923 செப். 1 ரோக்கியோ 99,331

1925 மே. 23 யப்பான் 381

1931 மார்ச் 31 நிகரகுவா (Nicaragua) 1,000

1932 டிசெ. 26 கன்சு (சீனா) 70,000

1933 மார்ச். 10 தென் கலிபோர்னியா 130

1939 ஜன. 24 மத்திய சில்லி (தெ.அமெ) 25,000

1939 டிசெ 27 அனரோலியா (துருக்கி) 50,000

1940 மே. 24 கல்லோ (Calloa Lima) 350

1940 யூலாய் 30 அனரோலியா (துருக்கி) 1,000

1940 நவ. 10 மொல்டாவியா(உருமேனியா) 388

1941 எபிரல் 15 கொலிமா (மெக்சிக்கோ) 84

நிலப்பரப்பு
மக். 1948

உலகம் 51,230,217 சதுரமைல் 2,231,716,000

ஆப்பிரிக்கா 11,710,424 ” 163,163,000

ஆசியா 16,795,000 ” 237,320,000

ஐரோப்பா 3,842,000 ” 527,175,000

வ.அமெரிக்கா 8,664,860 ” 198,542,000

தெ. “ 6,937,551 ” 97,229,000

ஆ°திரேலியா 2,975,000 ” 7,446,000

ஓசேனியா 328,000 ” 3,841,000

பூகற்ப உகங்கள்
(காலம் 10
இலட்சம் ஆண்டுக்கணக்கில்)
(எண்
கள் எல்லாம் காலத்தைக் குறிப்பன)

Cemozoic Plestocene 1 (மனிதன்)
(Cainozoic) Tertiary 70
(புதிய உயிர் Pilocene 15
களின் காலம் Miocene 35 இக்கால
புவி முழுமையிலும் Tertiary Oligocene 45 உயிர்களும்
பாலூட்டிகள் Palaeocene 70 தாவரங்களும்
பரவி வாழ்ந்தன) (Eocene)
உயிர்கள் தோன்றிய படிமுறைகள்
(Evolution)
(1) ஒருசெல் உயிர்கள் (9) சிலந்திகள்
(Protozoa)
(2) கடற்பஞ்சு (10) மீன்கள்
(3) பவளப்பூச்சிகள் (11) நீர்நில வாழ்வன
(4) புழுக்கள் (12) ஊர்வன
(5) முள் உயிர்கள் (13) பறவைகள்
(Echioderms)
(6) மெல்லுடலிகள் (14) பாலுhட்டிகள்
(7) மேலோடுள்ள உயிர்கள் (15) மனிதன்
(8) பூச்சிகள்

Cretaceous: 140 பூக்கும் தாவரங்கள்
Mesozoic Jurassic: 170 ஆதிகாலப்பறவைகள்: மயிர் போன்ற இலையுடைய மரம் (Maiden Hair Tree)
Triassic: 195 ஆரம்பப் பாலூட்டிகள், காம்பு வடிவான தாவரங்கள் (Conifers)
Permian 220 இராட்சதக் குதிரைவாலி (பெரணி) இராட்சதப் பல்லிகள்
carboriteris: 270 பெரணி, பூச்சிகள், ஊர்வனவுகளின் தோற்றம்
Devonian 310 நீர்நிலவாழ்வன, பாசிகள்
Palaeozoic Silurian 340 அதிக கடல் தாவரங்களும் மீன்களும்
Ordovician 420 கடல் தாவரங்கள், முதுகைலும்பில்லாக் கடலுயிர்கள்
Cambrian 500 கடல் தாவரம், மிகப்பழங்கால மீன்கள்
Pre -Cambrain: 520 பொசில்கள் (Fosils) இல்லை.

குரங்கு மனிதர்
பீக்கின் மனிதன் 1,000,000
யாவா மனிதன் 475,000
ஹெடில்பேக் மனிதன் 300,000
சசெக° மனிதன்
(பில்ட்டௌன் மனிதன்) 125,000
செல்லியன் மனிதன் (Chellian) 100,000
அசூலியன் (Acheulean) மனிதன் 75,000
மொன்°ரேறியன் (Monsterian) மனிதன்
(நென்டேர்தல் மனிதன்) 40,000
அருங்கேரியன் (Auringarian)
மனிதன் (Cromagnon man) 25,000
(அருங்கேரிய மனிதனின்றும் தோன்றியவர்களே இன்று உலகில் காணப்படும் மக்களாவர்)

நாடுகளின் புனைப்பெயர்கள்
அட்ரியாட்டிக் இராணி: (Queen of Adriatic) வெனி°
ஆயிரம் வாவிநாடு: (Land of thousand Lakes) பின்லாந்து
இந்தியாவின் வாயில்: (Gateway of India) பம்பாய்
இருண்டகாண்டம்: (Dark Continent) ஆப்பிரிக்கா
எர்குலிசின் தூண்கள்: (Pillars of Hercules) சிபிரால்டர் நீரிணை
ஏழுமலை நகர்: (City of Seven Hills) உரோம்
ஐந்து ஆறுகளுடைய நாடு: (Land of five rivers) பஞ்சாப் (ஐந்து ஆறுகள்) சுத்லெஜ், இரவி. செனப், யேலம், பிய° (Beas):
ஐரோப்பாவின் சேவற்போர்க்குழி: (Cockpit of Europe) பெல்சியம்
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்: (Playground of Europe) சுவிட்சர்லாந்து.
காலை அமைதி நாடு: (Land of morning calm) கோரியா
சூரியன் உதயமாகும் நாடு: (land of rising sun) யப்பான்
தடுக்கப்பட்ட நகர்: (Forbidden city) இலாசா (திபெத்)
தெற்கிலுள்ள பிரிட்டன்: (Britain of the south) நியுசீலாந்து
நடு இரவில் சூரியன் தோன்றும் நாடு: (Land of mid night sun) நார்வே
நீலமலை: (Blue Mountain) நீலகிரி
புனிதநாடு: (Holy land) பல°தீனம்
மத்தியதரைத்திறவுகோல் (Key of Mediterranean) சிபிரால்டர்
வெள்ளை உருசியா: (White Russia) வெள்ளை மக்கள் அதிகம் குடியேறி வாழும் உருசிய நாடு.
வெள்ளை யானை நாடு: (Land of white elephants) சீயம்
சீனாவின் துயரம்: (China’s Sorrow) கொவாங்கோ (Hoang Ho) பெரிய வெள்ளப் பெருக் கெடுக்கும் ஆறு.
முத்துத்தீவு: (Island of pearls) பாஃரெயின் (Bahrein) பாரசீகக் குடாவிலுள்ள முத்துக்குப்பேர்போன தீவு
பொன் ஆட்டுரோம நாடு: (Land of golden fleece) ஆ°திரேலியா
இ°கை °கிராப்பர் (Sky Scrappers) நாடு: நியுயோக்
கிழக்கிலுள்ள மான்செ°: (Manchester of Orient) ஒசாக்கா(யப்பன்)
உலகின் சர்க்கரைச்சாடி: (Sugar bowel of the world) கியூபா
மரகதத்தீவு: (Emerald Island) அயர்லாந்து
வெள்ளை மனிதனின் சுடலை: (White man’s grave) ஆப்பிரிக்காவிலுள்ள கினியாக்கரை
அயர்: அயர்லாந்து
இ°காந்தினேவியா: சுவிடன், நார்வே, இடென்மாக்
எதியோப்பியா: அபிசீனியா
ஐபீரியன் குடாநாடு: இ°பெயின்,போர்ச்சுக்கல்
தைலந்து: சீயம்
பாரசீகம்: ஈரான்
பெனிலக்°: (Penelux) பெல்சியம், ஒல்லாந்து, இலக்சன் பேக்

வானியல்
(தூரம் ஏறக்குறைய)
பூமியின் ஆரம் (Radius) 4000 மைல்
” சுற்றளவு 25,000 ”

சந்திரனின் தூரம் பூமியிலிருந்து 258,000 ”

பூமியின் தூரம் சூரியனிலிருந்து 93,000,000 ”
மிகக்கிட்டிய நட்சத்திரத்தின் தூரம் 4.3 வெளிச்ச ஆண்டு.
ஒரு வெளிச்ச ஆண்டின் தூரம் 5,880,000,000,000, மைல்
சாந்திரனின் குறுக்களவு 2,613 ”
சூரியனின் குறுக்களவு 846,000 ”
சூரியவெளிச்சம் பூமிக்குவர ஆகும் நேரம் 8 நிமிடம்
பூமி சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 365 1/4 நாட்கள்
சூரியனைச் சுற்றிவரும் கிரகங்கள்: புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யூரான°, நெப்தியூன், புளுத்தோ
செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையில் சிறுகிரங்கள் வளையம் போல் சூழ்ந்திருக்கின்றன.
கிரகங்களையும் சூரியனையும் சூழ்ந்து கடிகாரத்தைப்போல நட்சத்திர மண்டலமிருக்கின்றது. அதன் நட்சத்திரங்கள் நெருங்கிக் காணப்படும் பகுதி பால்வீதி மண்டலமெனப் படுகிறது.
நமக்குப் புலப்படும் நட்சத்திர மண்டலத்தைப்போல பல ஆயிரம் நட்சத்திர மண்டலங்களுண்டு
சந்திரன் பூமிக்கும் சூரியனுக்குமிடையில் வந்து சூரிய ஒளியை மறைக்கும் போது சூரியகிரகணமுண்டாகிறது.
பூமி சூரியனுக்கும் சந்தினுக்குமிடையில் வந்து தனது நிழலைச் சந்திரன் மீது விழுத்தும் போது சந்திகிரகணமுண்டாகிறது
சந்திரனின் ஒருபக்கம் மாத்திரம் எப்பொழுதும் எங்களுக்குத் தெரிகிறது
சந்திரன் பூமியைச் சுற்றிவர 29½ நாட்களாகிறது.
சந்திரன்மீது படும் சூரியஒளி சந்திரனின் ஒருபகுதியை வெளிச்சமடையச் செய்கிறது.
பூமி, செவ்வாய், வியாழன், சனி, யூரான்°, நெப்தியூன் முதலிய கிரகங் களுக்கு முறையே 1,2,12,10,4,1 சந்திரர்களுண்டு
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யூரான°, நெப்தியூன், புளுட்டோ முதலிய கிரகங்கள் தம்மைத்தாமே சுற்றிவர ஆகும் காலம்: முறையே 88 நாள்; 30 நாள்; 1 நாள், 24 மணி, 27 நி.; 9 மணி, 50 நி.;
10 மணி, 10 நி.; 10 மணி, 40 நி.; 15 மணி;….
மேற்படி கிரகங்கள் தமது பாதையில் சூரியணைச் சுற்றிவரும் வேகம் செக்கண்டில்; 30; 22; 19; 15; 8; 6; 4; 3;….

ஆங்கிலப் பழமொழிகள்
1.  Where the bee sucks honey, the spider sucks poison
    ஈ தேனுறிஞ்சுமிடத்தில் சிலந்தி நஞ்சை உறிஞ்சுகிறது.

2.  When war begins hell opens
    யுத்தம் தொடங்கும்போது நரகம் திறக்கப்படுகிறது

3.  When children stand quiet they have done some ill
    சிறுவர் பேசாது நின்றால் அவர்கள் ஏதும் குறும்பு செய்திருப்பார்கள்

4.  Wake not a sleeping lion
    உறங்குகிற சிங்கத்தை எழுப்பாதே

5.  Two ears to one tongue, therefore hear twice as much as you speak
    இரண்டு காதுகளுக்கு ஒரு நாவிருக்கிறது; ஆகவே பேசுவதிலும் இரு மடங்கு அதிகம் கேட்க வேண்டும்.

6.  To run with the hare and hunt with hounds
    முயலோடும் ஓடி நாயோடும் வேட்டையாடுவது

7.  Thrift is phliosophers stone
    சிக்கனமென்பது இரசவாதக் குளிகை

8.  The worst wheel of a cart creeks most
    மிகமோசமான வண்டிச்சக்கரம் அதிகம் கிறீச்சிடுகிறது

9.  The higher up, the greater fall
    உயரம் எவ்வளவு பெரிது, அவ்வளவுக்கு விழுகையும் பெரிதாக விருக்கும்

10. The eye that sees all things else sees not itself
    எல்லாவற்றையும் காணும் கண் தன்னைக் காணமாட்டாது.

11. The crow thinks her own bird fairest
    தன்னினப்பறவை அழகியதெனக் காகம் நினைக்கிறது.

12. Burnt child dreads the fire
    சூடுபட்ட குழந்தை நெருப்பைக் கண்டு பயப்படும்

13. The bough that bear most hang lowest
    அதிகம் காய்த்த மரம் அதிகம் வணங்கி நிற்கும்

14. Strike while iron is hot
    சூடாயிருக்கும்போது இரும்பை அடி

15. Step by step the ladder ascends
    படிப்படியாக ஏணி உயருகிறது

16. Silence is the best ornament of a woman
    அமைதி பெண்ணுக்குச் சிறந்த ஆபரணம்

17. Praise to the face is open disgrace
    முகத்துக்கு நேரே புகழ்தல் பகிரங்க அவமானம்

18. Pleasure has a sting in its tail
    சுகானுபவங்களின் வாலில் கொடுக்குண்டு

19. Never two late to learn
    படிப்பதற்கு எப்பவும் காலம் போகவில்லை

20. Lawers houses are bulit on the heads of fools
    நியாயவாதிகளின் வீடுகள் மூடரின் தலையில் கட்டப்பட்டிருக் கின்றன.

21. Truth has a good face, but bad clothes
    உண்மைக்கு அழகிய முகமுண்டு, அழகிய உடை இல்லை.

22. A dog will not howl if you beat him with a bone
    எலும்பால் அடித்தால் நாய் ஊளையிடாது

23. A fox is not taken twice in the same snare
    ஒருமுறை பட்ட வலையில் இரண்டாவது முறை அதே நரி படமாட்டாது

24. A good wife and health is a man’s best wealth
    ஒரு நல்ல மனைவியும் தேகசுகமும் மனிதனுடைய சிறந்த செல்வம்.

25. A great dowry is a bed full of brambles
    அதிக சீதனம் படுக்கையில் நிறைந்த முள்

26. A small leak will sink a ship
    சிறிய துவாரம் பெரிய கப்பலை ஆழ்த்தும்

27. Bees that have honey in their mouths have stings in their tails
    வாயில் தேன் வைத்திருக்கும் தேனீக்களுக்கு வாலில் குத்தும் கொடுக்குண்டு

28. Better an egg today than a hen tomorrow
    நாளை கிடைக்கும் பேட்டுக் கோழியிலும் பார்க்க இன்று கிடைக்கும் முட்டைமேல்.

29. Beware of silent dog and still water
    அமைதியாக நிற்கும் நாய்க்கும் அமைதியான நீருக்கும் எச்சரிக்கையாக இரு.

30. Bitter pills may have wholesome effect
    கைப்பான குளிகைகளில் நல்ல குணமிருக்கலாம்.

31. Diet cures more than doctors
    மருத்துவரிலும் பார்க்க உணவு நோயைத் தீர்க்கிறது.

32. Great talkers are great liars
    அதிகம் பேசுவோர் பெரிய பொய்யர்.

33. Great winds blows upon high hills
    பெருங்காற்று உயர்ந்த மலைகளில் வீசுகிறது.

34. Idle brains are the devils workshops
    சோம்பேறி மூளைகள் பேயின் தொழிற்சாலைகள்.

35. Hares may pull dead lions by the beard
    செத்த சிங்கங்களின் தாடியை முயல்களால் பிடித்திழுக்க முடியும்.

36. A fool may ask more questions in an hour than a wise man can answer in seven years.
    புத்திசாலி ஏழு ஆண்டுகளில் விடைகாண முடியாத கேள்விகளை ஒரு மூடன் ஒரு மணி நேரத்தில் கேட்கலாம்.

வைட்டமின்கள்
வைட்டமின்கள்: உடம்பு தொழிற்படுவதற்கு வேண்டியனவும் சில உணவு வகைகளிற் காணப்படுவனவுமாகிய ஒருவகைச் சத்துக்கள். இவை செயற்கை முறைகளில் குளிகைகளாகவும், திரவவகைகளாகவும் செய்யப்பட்டு போதிய வைட்டமின் சத்தில்லாத உணவு கொள்பவர் களுக்குக் கொடுக்கப் படுகின்றன.

ஏ(A) வைட்டமின்: இது உடல் வளர்ச்சிக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கும் வேண்டியது. இது மாலைக்கண் நோயைத் தடுக்கிறது. இது பால், முட்டை, வெண்ணெய், மீனெண்ணெய், இலைபோல் பச்சையும் மஞ்சள்நிறமு முள்ள தாவரவகைகள், மஞ்சள் நிறப் பழங்கள், வாழைப்பழம், தோடம் பழம், (ஆரேஞ்சு) முதலியவற்றிலுண்டு.

வைட்டமின் பி1(B1): இது நரம்புகள் தொழில்படுவதற்கு வேண்டியது. இது இல்லாவிடில் பெரி பெரி என்னும் நோய் உண்டாகிறது. இது தானி யங்கள், முட்டையின் மஞ்சட்கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கொட் மீன், சாடின் மீன் முதலியவற்றிலுண்டு.

வைட்டமின் பி2(B2): இது G வைட்டமின் எனவும் படும். இது வளர்ச்சிக்கும் தோல் நோயின்றிருப்பதற்கும் வேண்டியது. இது வெண்ணெயல்லாத மற்றைய உணவுப் பொருள்களிலுண்டு.

வைட்டமின் சி: இது எலும்பையும் பல்லையும் பலமாகவிருக்கச் செய் கின்றது. காயங்களை ஆறச் செய்கிறது; இரத்தக்குழாய்களின் சுவர் களைப் பலமடையச் செய்கிறது. இது எலுமிச்சம்பழம், ஆரேஞ்சுப்பழம், தக்காளி, பச்சை நிறமுள்ள கீரைவகைகளிலுண்டு. இது இல்லாவிடில் °கேவி என்னும் சொறி கரப்பான் நோய் உண்டாகிறது.

வைட்டமின் டி: இது கணைநோயை (rickets) தடுக்கிறது. இது வெயிலி லிருந்து அதிகம் கிடைக்கிறது. எண்ணெய்கள், பால், முட்டையின் மஞ்சட்கரு என்பவற்றில் இது உண்டு.
வைட்டமின் ஈ: இதைக்குறித்து அதிகம் அறியப்படவில்லை. இது இனப் பெருக்கத்தொழிற் பாட்டுக்கு வேண்டியது. இது கோதுமை முளை, முட்டை, தாவர எண்ணெய் இவைகளிலுண்டு.

வைட்டமின் கே: இரத்தம் உறைவதற்கு இது தேவையானது. இது கீரைவகை களிலும், பால், பாலுணவுகளிலுமுண்டு.